பிஎம் கிசானின் 15வது தவணை கணக்கில் வரலையா... இன்றே புகாரை பதிவு செய்யுங்க..!!

PM Kisan Samman Nidhi: டிசம்பர் 1, 2018 முதல் செயல்படும் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி த் திட்டம், நிலம் வைத்திருக்கும் விவசாயி குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 மூன்று சம தவணைகளில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 16, 2023, 04:40 PM IST
  • பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-KISAN) திட்டத்தின் 15வது தவணையை நவம்பர் 15, புதன்கிழமை, பிரதமர் நரேந்திர மோடி விநியோகித்தார்.
  • 80 மில்லியனுக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைகிறார்கள்.
  • சில தகுதியான விவசாயிகள் கணக்கில் பணம் வராமல் பிரச்சனைகளை சந்திக்க கூடும்.
பிஎம் கிசானின் 15வது தவணை கணக்கில் வரலையா... இன்றே புகாரை பதிவு செய்யுங்க..!! title=

PM Kisan Samman Nidhi: நவம்பர் 15, புதன்கிழமை, பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டத்தின் 15வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி விநியோகித்தார். மொத்தம் 18,000 கோடி ரூபாய், 80 மில்லியனுக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைகிறார்கள். 14 தவணைகளில் ரூ. 2.62 லட்சம் கோடிக்கும் அதிகமாக வழங்கப்படும் இந்த நிதி, விவசாயிகளுக்கு பெரும் பயனாக உள்ளது. எனினும், சில தகுதியான விவசாயிகள் கணக்கில் பணம் வராமல் பிரச்சனைகளை சந்திக்க கூடும்.

உதவி மையம்

விவசாயிகள் சந்திக்கும் இதுபோன்ற பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் வகையில், தவணைகள் பெறாத விவசாயிகள் PM-KISAN ஹெல்ப் டெஸ்க் மூலம் புகார்களை பதிவு செய்யலாம். 011-24300606 மற்றும் 155261 என்ற ஹெல்ப்லைன் எண்கள் மூலமாகவோ அல்லது 18001155266 என்ற இலவச எண் மூலமாகவோ புகார்களைத் தெரிவிக்கலாம். மாறாக pmkisan-ict@gov.in அல்லது pmkisan-funds@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். 15வது தவணை (ரூ.2,000) பெறாதவர்கள், வார நாட்களில் PM-KISAN ஹெல்ப் டெஸ்க் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ புகார்களைப் பதிவு செய்யலாம்.

தொகையைப் பெறாததற்கான சாத்தியமான காரணங்கள்

அனைத்து PM-KISAN யோஜனா பயனாளிகளுக்கும் அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளதால், e-KYC விதிமுறைகளுக்கு இணங்காதது நிதியை பெறாததற்கு ஒரு காரணமாக இருக்கலாம். தாமதத்திற்கான காரணம் தீர்க்கப்பட்டவுடன், தகுதியான விவசாயிகள்,  உரிய பலன்களை பெறுவார்கள்.

மேலும் படிக்க | பிஎஃப் கணக்கில் அதிரடி ஏற்றம், வந்தது கூடுதல் தொகை: இப்படி செக் பண்ணுங்க

புகாரைப் பதிவு செய்வதற்கு முன், விவசாயிகள் பின்வரும் படிநிலைகள் மூலம் பயனாளிகள் பட்டியலில் தாங்கள் சேர்க்கப்பட்டுள்ளதைச் சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்:

1. pmkisan.gov.in என்ற வலைதளத்தை பார்வையிடவும்

2. 'Farmers Corner' உள்ள 'Beneficiary Status' என்பதற்குச் செல்லவும்

3. விவரங்களை நிரப்பவும்: மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம் மற்றும் பஞ்சாயத்தை தேர்வு செய்யவும்

4. பதிவு செய்யப்பட்ட ஆதார் அல்லது வங்கி கணக்கு எண்ணை உள்ளிடவும்

5. தவணை நிலையைப் பார்க்க 'Get Data' என்பதைக் கிளிக் செய்யவும்

விவசாயிகளின் குறைகளுக்குப் பதிலளிக்கும் வகையில், மத்திய அரசு கடந்த மாதம் ஒரு விரிவான பிரச்சாரத்தைத் தொடங்கியது. இருப்பினும், செயல்பாட்டு வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ள விலக்கு அளவுகோல்கள் காரணமாக விவசாய நில உரிமையாளர்களிடையே 100% பயனாளிகளை அடைவது சவாலாக இருக்கலாம்.

இதை நிவர்த்தி செய்ய, டிஜிட்டல் பதிவு மற்றும் விரிவான விவசாயி பதிவேடுகளை அனுமதிக்கும் PM-KISAN மொபைல் செயலியின் உதவியுடன் தானியங்கி தகவல் தொழில்நுட்ப அமைப்பை அமைச்சகம் உருவாக்கியுள்ளது.

'பிஎம்-கிசான் யோஜனா'வில் சேர, இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றவும்:

1. அதிகாரப்பூர்வ இணையதளமான www.pmkisan.gov.in என்ற வலைதளத்தை பார்வையிடவும் மற்றும் New Farmer Registrationவிருப்பத்தை கிளிக் செய்யவும்.

2. தொடர உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

3. நீங்கள் நகர்ப்புறத்தில் விவசாயியாக இருந்தால், "Urban Farmer" விருப்பத்தைத் தேர்வு செய்யவும்; கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு, "Rural Farmer Registration" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

4. உங்கள் ஆதார் எண், தொலைபேசி எண் ஆகியவற்றை வழங்கவும், உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

5. உங்கள் நிலம் பற்றிய விவரங்களை உள்ளிடவும்.

6. உங்கள் நிலம் தொடர்பான ஆவணங்களை பதிவேற்றி சேமிக்கவும்.

7. கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு, "Get OTP" என்பதைக் கிளிக் செய்து, பெறப்பட்ட OTPயைச் சமர்ப்பிப்பதன் மூலம் செயல்முறையை முடிக்கவும்.

பிரதம மந்திரி கிஸான் யோஜனா (PM-Kisan Yojana)

டிசம்பர் 1, 2018 முதல் செயல்படும் இந்தத் திட்டம், நிலம் வைத்திருக்கும் விவசாயி குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 மூன்று சம தவணைகளில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மத்திய தகுதியான விவசாயக் குடும்பங்களைக் கண்டறிந்து, அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகப் பணம் மாற்றப்படும்.

மேலும் படிக்க | மீண்டும் பழைய ஓய்வூதியம்!! ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் ஜாக்பாட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News