வங்கி ஊழியர்களுக்கு RBI அளித்த சூப்பர் செய்தி: இனி ஆண்டுக்கு 10 நாட்கள் Surprise Leave!!
வங்கி ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. ரிசர்வ் வங்கி, வங்கி ஊழியர்களுக்கான ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது.
RBI Mandatory Leave: வங்கி ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. ரிசர்வ் வங்கி (RBI) வங்கி ஊழியர்களுக்கான ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. முக்கிய பதவிகளில் பணிபுரியும் வங்கி ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 10 நாட்கள் அறிவிப்பு இல்லாத விடுப்பு அதாவது அச்சரிய விடுப்பு கிடைக்கும் என ரிசர்வ் வங்கி தன்னுடைய உத்தரவில் தெரிவித்துள்ளது.
இந்த புதிய விதி, வணிக வங்கிகளைத் (Commercial Banks) தவிர, கிராமப்புற மேம்பாட்டு வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும்.
10 நாட்கள் முன்னறிப்பு இல்லாத ஆச்சரிய விடுமுறை
ரிசர்வ் வங்கியின் (Reserve Bank) 2015 சுற்றறிக்கையின்படி, கருவூல செயல்பாடுகள், நாணய செஸ்ட், ரிஸ்க் மாடலிங், மாதிரி சரிபார்ப்பு போன்ற பிரிவுகளில் பணிபுரியும் வங்கி ஊழியர்கள் பாதிக்கப்படக்கூடிய முக்கிய பணிகளை செய்பவர்களாக கருதப்படுகிறார்கள். இந்த விதியுடன், 'கட்டாய விடுப்பின்' கீழ் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்களுக்கான விடுப்பு வழங்கப்படும் முக்கியமான பதவிகளுக்கான பட்டியல் ஒன்றும் வழங்கப்படும். இந்த விதியின் கீழ், இந்த வங்கி ஊழியர்களுக்கு இந்த விடுமுறையைப் பற்றி முன்கூட்டியே தெரிந்திருக்காது.
ரிசர்வ் வங்கி உத்தரவுகளை பிறப்பித்தது
இந்த உத்தரவை பிறப்பித்து, ஊரக வளர்ச்சி வங்கி மற்றும் கூட்டுறவு வங்கி உள்ளிட்ட வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி செய்தியை அனுப்பியுள்ளது. இதில், RBI Modified Risk Management Guidelines-ன் கீழ் எதிர்பாராத விடுமுறைகளை வழங்கும் கொள்கையை தயாரிக்க ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. வங்கிகள் தங்கள் இயக்குநர்கள் குழுவின் அங்கீகரிக்கப்பட்ட கொள்கையின்படி முக்கியமான பதவிகளின் பட்டியலைத் தயாரிக்கவும், அவ்வப்போது பட்டியலை மதிப்பாய்வு செய்யவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. ஆறு மாதங்களுக்குள் திருத்தப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு இணங்க வங்கிகளை ரிசர்வ் வங்கி கேட்டுள்ளது.
ALSO READ: ரிசர்வ் வங்கி FD விதிகளை மாற்றியுள்ளது; ‘இதை’ செய்யாவிட்டால் உங்கள் வட்டி குறையும்
ஃபிசிக்கல் வேலைக்கான பொறுப்பு இருக்காது
இந்த விடுப்பின் போது, வங்கி ஊழியர் (Bank Employees) உள் / கார்ப்பரேட் மின்னஞ்சல்களைத் தவிர, ஃபிசிகலாகவோ, ஆன்லைனிலோ எந்த பணியையும் செய்ய வேண்டி இருக்காது. வங்கி ஊழியர்களுக்கு பொது நோக்கத்திற்காக உள் / கார்ப்பரேட் மின்னஞ்சலுக்கான வசதி வழங்கப்படுகின்றது.
'எதிர்பாராத விடுப்பு' கொள்கை
ரிசர்வ் வங்கி, "ஒரு விவேகமான செயல்பாட்டு இடர் மேலாண்மை நடவடிக்கையாக, வங்கிகள் 'எதிர்பாராத விடுப்பு' கொள்கையை செயல்படுத்தும். இதில் முக்கியமான பதவிகளில் அல்லது உணர்திறன் மிக்க செயல்பாட்டு பகுதிகளில் பணியமர்த்தப்படும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு நாளும் கட்டாயமாக ஒரு ஆண்டுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விடுப்புகள் (10 வேலை நாட்களுக்குக் குறையாது) வழங்கப்படும். இந்த ஊழியர்களுக்கு முன் அறிவிப்பு இல்லாமல் இந்த விடுப்பு வழங்கப்படும்.” என்று தெரிவித்துள்ளது.
கட்டாய விடுப்பு கொள்கை மேம்பாடு
ரிசர்வ் வங்கி, ஏப்ரல் 2015 இல், இது தொடர்பான அதன் முந்தைய வழிகாட்டுதல்களில் இத்தகைய விடுப்புக்கான நாட்களின் எண்ணிக்கையை குறிப்பிடவில்லை. இருப்பினும், இது சில நாட்கள், தோராயமாக 10 வேலை நாட்களாக இருக்கக்கூடும் என்று கூறியிருந்தது.
மத்திய வங்கி முக்கியமான பதவிகளிலும் உணர்திறன் மிக்க செயல்பாட்டு பதவிகளிலும் உள்ள ஊழியர்களுக்கான 'கட்டாய விடுப்பு' கொள்கையை மேம்படுத்தி, ஏப்ரல் 23, 2015 தேதியிட்ட சுற்றறிக்கையை ரத்து செய்துள்ளது.
ALSO READ: Bank Alert! ஜூலை மாதத்தில் வங்கி விடுமுறை நாட்கள்; முழு விவரம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR