100 ரூபாயில் ஊட்டி முழுவதும் டூர் போகலாம்... அது எப்படி?
Tourist Places In Ooty: ஊட்டியின் முக்கிய சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் சென்று வர இன்று முதல் சுற்றுலா பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
Tourist Places In Ooty: தமிழ்நாடு முழுவதும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் முதல் தொடங்கியது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் முதல் வாரம் வரை நடைபெறுகிறது. இதற்குள் மற்ற வகுப்புகளுக்கும் முழு ஆண்டுத் தேர்வுகள் நிறைவடைந்திருக்கும். எனவே, இந்த ஏப்ரல், மே மாதங்களில் மக்கள் அனைவரும் சுற்றுலா செல்லவே விரும்புவார்கள்.
சுற்றுலாவுக்கு பலரும் உள்ளூர் மற்றும் அருகில் பல தலங்களுக்கு செல்ல திட்டமிடுவார்கள். உதாரணத்திற்கு திருநெல்வேலியில் இருப்பவர்கள் என்றால் குற்றலாம், திருச்செந்தூர், கன்னியாகுமரி போன்ற இடங்களுக்கு செல்ல திட்டமிடுவார்கள். சென்னையில் இருப்போர் மகாபலிபுரம், தடா, பாண்டிச்சேரி ஆகிய இடங்களுக்கு செல்ல நினைப்பார்கள். இருப்பினும் கோடை காலத்தில் செல்வதற்கென தமிழ்நாட்டிலும், பக்கத்து மாநிலங்களான கேரளா, கர்நாடகாவிலும் பல சுற்றுலா தலங்கள் உள்ளன.
உதாரணத்திற்கு தமிழ்நாட்டின் மலை பிரதேசங்களான திருநெல்வேலியின் மாஞ்சோலை, சேலத்தின் ஏற்காடு, நீலகிரியின் ஊட்டி, திண்டுகல்லின் கொடைக்கானல், தேனியின் தென்மலை என பிரபலமான பல இடங்கள் உள்ளன. கேரளாவில் வயநாடு, மூணாறு போன்ற இடங்களும் சுற்றுலா பயணிகள் செல்ல விரும்புவார்கள்.
மேலும் படிக்க | திமுக கூட்டணி இறுதியானது... காங்கிரஸ் கட்சிக்கு 10 இடம் - அடுத்தது என்ன?
மலைகளின் அரசி என அழைக்கப்படும் உதகையில் கோடை கால சீசன் தற்போதே தொடங்கி உள்ளது. இதனை அடுத்து உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து உதகை படகு இல்லம், ரோஜா பூங்கா, அரசு தாவரவியல் பூங்கா, தேயிலை அருங்காட்சியகம் மற்றும் தொட்டபெட்டா மலை சிகரம் போன்ற முக்கிய சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் சென்று வர இன்று முதல் சுற்றுலா பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் உதகை மத்திய பேருந்து நிலையத்தில் கொடி அசைத்து சுற்றுலா பேருந்து சேவையை தொடங்கி வைத்தார். அத்துடன் மலை கிராமங்களுக்கு புதிய பேருந்து வழித்தடத்தையும் தொடங்கி வைத்தார்.
முதற்காட்டமாக இந்த சுற்றுலா பேருந்துகள் சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் காலை முதல் மாலை வரை சுழற்சி முறையில் தொடர்ந்து இயக்கப்பட உள்ளது. இந்த பேருந்துகள் உதகை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து படகு இல்லம், ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா, தேயிலை அருங்காட்சியகம், தொட்டபெட்டா மலை சிகரம் வரை இயக்கப்பட உள்ளது.
இந்த சுற்றுலா பேருந்தில் பெரியோர்கள் 100 ரூபாய், சிறியவர்கள் 50 ரூபாயும் கட்டணமாக செலுத்தி ஒரு முறை டிக்கெட் எடுத்து மாலை வரை பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பேருந்து சேவையை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய கா.ராமச்சந்திரன், "கோடை காலம் தொடங்கியதை எடுத்து சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சுற்று பேருந்து சேவை தொடங்கி இருக்கிறது.
அதிகமான சுற்றுலா பயணிகள் செல்வதால் நல்ல லாபம் கிடைக்கிறது. மேலும் நீலகிரி மாவட்டத்தில் அதிமுக ஆட்சி காலத்தை விட திமுக ஆட்சிக் காலத்தில்தான் அதிக பேருந்துகள் விடப்பட்டிள்ளது. தற்போது உள்ள பழைய பேருந்துகள் அனைத்தும் படிப்படியாக மாற்றப்பட்டு புதிய பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் படிக்க | தமிழகம் பாஜக பக்கம் திரும்புவதற்கான நல்ல சூழல் உருவாகி உள்ளது - வானதி சீனிவாசன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ