ஓய்வூதியத் திட்டம்: அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகளால் பல ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மகாத்மா காந்தி பென்ஷன் யோஜனா (Mahatma Gandhi Pension Scheme) என்கிற பெயரில் உத்தரப்பிரதேச அரசு புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் நோக்கம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பலனை வழங்குவதுதான். முதியோர்களை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றுவதற்காக மாநில அரசு இத்திட்டத்தை செயல்படுத்துகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இத்திட்டத்தின் கீழ், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஓய்வூதியத் திட்டப் பயன் அளிக்கப்படுகிறது. உ.பி அரசின் இந்தத் திட்டமானது ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் முதியோர்களுக்கு ஓய்வூதியமாக வழங்குகிறது. மேலும் இந்தத் தொகை அமைப்பு சாரா தொழிலாளர்களின் கணக்கிற்கு நேரடியாக அனுப்பப்படுகிறது.


மேலும் படிக்க | LIC Jeevan Tarun Policy: வெறும் ரூ.171 முதலீட்டில் ரூ. 28.24 லட்சம் பெறலாம்!


தகுதி என்னவாக இருக்க வேண்டும்
லேபிள் கார்டு வைத்திருக்கும் தொழிலாளர்கள் மகாத்மா காந்தி ஓய்வூதியத் திட்டத்திற்கு தகுதியுடையவர்கள் ஆவார்கள். இதனுடன், 60 வயதுக்கு மேல் இருப்பதும் கட்டாயமாகும். இது தவிர, மத்திய மற்றும் மாநில அரசின் எந்த ஓய்வூதியத் திட்டத்தையும் பயன்படுத்திக் கொண்டிருக்க கூடாது.


இந்த திட்டத்தில் என்ன பலன்கள் கிடைக்கும்
* ஓய்வூதியம் பெறும் கணவர் இறந்துவிட்டால், இந்தத் தொகை ஒவ்வொரு மாதமும் மனைவிக்கு வழங்கப்படும். 


* இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தத் திட்டத்தில் ஓய்வூதியத் தொகை அதிகரிக்கப்படும்.


விண்ணபிக்க எந்தெந்த ஆவணங்கள் தேவைப்படும்
இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பினால், உங்களிடம் "ஆதார் அட்டை, வங்கிப் புத்தகம், இருப்பிடச் சான்றிதழ், தொழிலாளர் அட்டை மற்றும் மத்திய மற்றும் மாநில அரசின் எந்தவொரு துறையிலிருந்தும் ஓய்வூதியம் பெறவில்லை என்கிற சான்றிதழ், ஒவ்வொரு ஆண்டும் வாழ்க்கைச் சான்றிதழ்" இருக்க வேண்டும். அதேபோல் ஓய்வூதியதாரரின் மரணம், ஒரு மாதத்திற்குள் குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாகும். இது தவிர, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ரேஷன் கார்டு, மொபைல் எண் ஆகியவை இருக்க வேண்டும்.


எப்படி விண்ணப்பிப்பது?
மகாத்மா காந்தி யோஜனா ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க, தொழிலாளர் துறையை தொடர்பு கொள்ள வேண்டும். இங்கே நீங்கள் படிவத்தை சரியாக பூர்த்தி செய்து ஆவணங்களுடன் சமர்ப்பிக்கவும். தகுதியுடையவர்கள் என கண்டறியப்பட்டால், இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதிய பலன் ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும்.


மேலும் படிக்க | இலவச ரேஷன் பெறுபவர்களுக்கு ஜாக்பாட், இரண்டு மடங்கு ரேஷன் கிடைக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ