இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்: எஃப்.டி வட்டி விகிதங்களில் ஏற்றம்
Interest Rates: எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் கனரா வங்கிக்குப் பிறகு, இப்போது கோடக் மஹிந்திரா வங்கியின் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் செய்தி ஒன்று வந்துள்ளது.
கோடக் மஹிந்திரா வங்கியின் எஃப்டி விகிதங்கள்: எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் கனரா வங்கிக்குப் பிறகு, இப்போது கோடக் மஹிந்திரா வங்கியின் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் செய்தி ஒன்று வந்துள்ளது. முன்னணி தனியார் துறை வங்கியான கோடக் மஹிந்திரா பல்வேறு தவணைக்காலங்களின் நிலையான வைப்புத்தொகையின் (FD) வட்டி விகிதங்களை மாற்றியுள்ளது.
கட்டணங்கள் மார்ச் 9 முதல் அமலுக்கு வரும்
வங்கியின் புதிய வட்டி விகிதங்கள் அனைத்து உள்நாட்டு மற்றும் NRE வாடிக்கையாளர்களுக்குமானவை. வங்கியின் புதிய எஃப்டி விகிதங்கள் மார்ச் 9, அதாவது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. புதிய விகிதங்கள் ரூ. 2 கோடி வரையிலான எஃப்டிகளுக்குப் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
மாற்றத்திற்குப் பிறகான புதிய விகிதங்கள்
கோடக் மஹிந்திரா வங்கி 365 முதல் 389 நாட்களில் மெச்யூர் ஆகும் எஃப்டி-க்கான வட்டியை 5 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதற்கு முன் வங்கி இந்த கால அளவிற்கு 4.9 சதவீத வட்டியை செலுத்தி வந்தது.
7 முதல் 30 நாட்கள் வரையிலான எஃப்டிகளுக்கு 2.5 சதவீதமும், 31 முதல் 90 நாட்கள் வரையிலான எஃப்டி-களுக்கு 2.75 சதவீதமும், 91 முதல் 120 நாட்களில் முதிர்ச்சியடையும் எஃப்டிகளுக்கு 3 சதவீதமும் வட்டி வழங்க வங்கி இப்போது முடிவு செய்துள்ளது.
மூத்த குடிமக்களுக்கு கூடுதல் வட்டி கிடைக்கும்
கோடக் மஹிந்திரா வங்கி 181 முதல் 363 நாட்கள் முதிர்வு கொண்ட எஃப்.டி-களுக்கு 4.40 சதவீத வட்டியையும், 364 நாட்கள் முதிர்வு காலத்துடன் கூடிய எஃப்.டி-களுக்கு 4.50 சதவீத வட்டியையும் செலுத்தும். 390 நாட்கள் மற்றும் 23 மாதங்களுக்கும் குறைவான எஃப்.டி-களுக்கு 5.10 சதவிகிதம் செலுத்தப்படும். மூத்த குடிமக்கள் ஒவ்வொரு கால அளவிற்கான எஃப்.டி-களுக்கும் .50 சதவீதம் கூடுதல் வட்டியைப் பெறுவார்கள்.
மேலும் படிக்க | FD பற்றிய முக்கிய விதிகளை மாற்றியது RBI: தெரியாமல் போனால் நஷ்டம் உங்களுக்கு
எஸ்பிஐ-யின் எஃப்.டி வட்டி விகிதங்கள்
7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை - 2.90%
46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை - 3.90%
180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை - 4.40%
211 நாட்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவான காலத்திற்கு - 4.40%
1 வருடத்திற்கு மேல் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு குறைவான காலத்திற்கு - 5.10%
2 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 3 ஆண்டுகளுக்கு குறைவான காலத்திற்கு - 5.20 %
3 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 5 ஆண்டுகளுக்கு குறைவான காலத்திற்கு - 5.45%
5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை - 5.50%
(சோர்ஸ்: www.paisabazaar.com) (மூத்த குடிமக்களுக்கு அனைத்து கால அளவிற்கும் 0.50 சதவீதம் கூடுதல் வட்டி)
எச்டிஎஃப்சி-ல் எஃப்டி வட்டி விகிதம்
7 முதல் 14 நாட்கள் - 2.50%
15 முதல் 29 நாட்கள் - 2.50%
30 முதல் 45 நாட்கள் - 3.00 %
46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை - 3.00 %
61 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை - 3.00 %
91 நாட்கள் முதல் 6 மாதங்கள் வரை - 3.50%
6 மாதங்கள் 1 நாள் முதல் 9 மாதங்கள் வரை - 4.40%
9 மாதங்கள் 1 நாள் முதல் 1 வருடத்திற்கும் குறைவான காலம் - 4.40%
1 வருடம் வரை - 5.00%
1 வருடம் 1 நாள் முதல் 2 ஆண்டுகள் வரை - 5.00%
2 ஆண்டுகள் 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரை - 5.20%
3 ஆண்டுகள் 1 நாள் முதல் 5 ஆண்டுகள் வரை - 5.45%
5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை - 5.60%
(சோர்ஸ்: www.paisabazaar.com) (மூத்த குடிமக்களுக்கு அனைத்து கால அளவிற்கும் 0.50 சதவீதம் கூடுதல் வட்டி)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR