NPS Assured Return Scheme: நாட்டின் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு அற்புதமான திட்டம் வரவுள்ளது. ஓய்வூதிய கட்டுப்பாட்டாளரான PFRDA, தேசிய ஓய்வூதிய திட்டத்தின் (NPS) கீழ் குறைந்தபட்ச உறுதி செய்யப்பட்ட வருவாய் திட்டத்தை (MARS) கொண்டு வர உள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் தொடங்கியுள்ளன. அதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

PFRDA ஆலோசகரை நியமிக்கும்


ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) இந்த திட்டத்தை வடிவமைக்க ஆலோசகர்களுக்கு முன்மொழிவு (RFP) கோரிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த ஆண்டு, PFRDA-வின் பாண்டியோபாத்யாய், ’ஓய்வூதிய நிதி மற்றும் செயல் நிறுவனங்களுடன் (actuarial firms) பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், திட்டம் தயாரிக்கப்படும். பிஎஃப்ஆர்டிஏ சட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் உறுதி செய்யப்பட்ட வருவாய் திட்டம் அனுமதிக்கப்படுகிறது. ஓய்வூதிய நிதி திட்டங்களின் கீழ் நிர்வகிக்கப்படும் நிதி marked-to-market செய்யப்படுகின்றது. இதில் சில ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகின்றன. அவற்றின் மதிப்பீடு சந்தை நிலையைப் பொறுத்தது.’ என்று  கூறியிருந்தார்.


இது ஆலோசகர்களின் பணியாக இருக்கும்


PFRDA இன் RFP வரைவின் படி,உத்தரவாதமான வருமானத்துக்கான ஒரு திட்டத்தை உருவாக்குவதற்கு, ஒரு ஆலோசகரின் நியமனத்தால், PFRDA மற்றும் சேவை வழங்குநருக்கு இடையே, முதன்மை நபர்-முகவர் இடையிலான உறவு போன்ற ஒரு உறவு ஏற்படக்கூடாது.


பிஎஃப்ஆர்டிஏ சட்டத்தின் அறிவுறுத்தல்களின்படி, சந்தாதாரர் NPS-ன் கீழ் 'குறைந்தபட்ச உறுதியளிக்கப்பட்ட வருவாயை' வழங்கும் திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். இது போன்ற திட்டத்தை, ரெகுலேட்டருடன் சேர்ந்து, பதிவுசெய்யப்பட்ட ஓய்வூதிய நிதி மூலம் அளிக்க வேண்டும்.


ALSO READ:  ஓய்வூதிய சந்தாதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி! முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்!


இத்தகைய திட்டம் இதுவரை உருவாக்கப்படவில்லை


தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) மற்றும் அடல் பென்ஷன் யோஜனா (APY) ஆகியவற்றை உருவாக்குவதிலும், அவற்றின் அம்சங்களை சேர்ப்பதிலும் PFRDA பல பணிகளைச் செய்துள்ளது. ஆனால் இவை அனைத்தும் மத்திய அரசின் திட்டங்கள்.


PFRDA கொண்டுவர திட்டமிட்டுள்ள திட்டம் அதன் முதல் சொந்த திட்டமாக இருக்கும். PFRDA இதுவரை எந்த உத்தரவாத திட்டத்தையும் கொண்டுவந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஓய்வூதிய திட்டத்தின் உத்தரவாதம் சந்தையுடன் இணைக்கப்படும் என்று PFRDA கூறுகிறது. முதலீடு மீதான வருவாயின் உத்தரவாதப் பகுதியை நிதி மேலாளர்கள் தீர்மானிக்க வேண்டும்.


யாருக்கு NPS பயன்படும்? 


மத்திய அரசு (Central Government) அதன் ஊழியர்களுக்கு 1 ஜனவரி 2004 அன்று NPS ஐ கட்டாயமாக அமல்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பிறகு அனைத்து மாநிலங்களும் தங்கள் ஊழியர்களுக்கு NPS ஐ ஏற்றுக்கொண்டன. 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்தத் திட்டம் தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கும் அளிக்கப்பட்டது. ஓய்வுக்குப் பிறகு, ஊழியர்கள் NPS இன் ஒரு பகுதியை திரும்பப் பெறலாம். 18 முதல் 60 வயதிற்குட்பட்ட எந்தவொரு நபரும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தை எடுக்கலாம்.


ALSO READ: வரி விலக்கு முதல் நிதி நிர்வாகம் வரை: NPS அளிக்கும் நன்மைகள் ஏராளம்!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR