கூகிள் 3D விலங்குகள்: புலி, கரடி, சிங்கம் என அனைத்தையும் வீட்டுக்கு கூபிட்டு வரலாம்!!
நாய்கள், புலிகள் மற்றும் பிற விலங்குகளின் 3D மாதிரிகள் உடன் புகைப்படம் எடுத்து உங்கள் நேரத்தை வேடிக்கையாக மாற்றுங்கள்!!
நாய்கள், புலிகள் மற்றும் பிற விலங்குகளின் 3D மாதிரிகள் உடன் புகைப்படம் எடுத்து உங்கள் நேரத்தை வேடிக்கையாக மாற்றுங்கள்!!
கொரோனா வைரஸ் தாக்கம் உலகளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசமான நிலையைக் கட்டுக்குள் கொண்டுவர முக்கிய நடவடிக்கைகளை பல உலக நாடுகளில் ஊரடங்கு நடவடிக்கை கடைபிடிக்கபட்டு வருகிறது. இந்த முடிவு, அனைவரையும் வீடுக்குலேயே முடங்கி கிடக்க வைத்துள்ளது. இதனால், மக்கள் பலருக்கும் மன உளைச்சளுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் இவர்களை குஷி படுத்த கூகிள் நிறுவனம் புதிய அம்சத்தைக் மக்களுக்காக வெளியிட்டுள்ளது. அதுதான், கூகிள் 3D ஹோலோகிராம். வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் குழந்தைகளை மகிழ்விக்க புதிய தொழில்நுட்ப அம்சத்தைக் கூகுள் தனது கூகிள் வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
கூகிள் 3 டி அனிமல்ஸ் அம்சம் 2019 ஆம் ஆண்டில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. டைகர், நாய், வாத்து மற்றும் டைனோசர் என அனைத்தையும் கூகிள் 3D ஹோலோகிராம் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் காட்டு விலங்குகளை நமது வீட்டிற்கே அழைத்து வந்துள்ளது. தற்போது, பயனர்கள் அலிகேட்டர்கள், ஆங்லர் மீன், பிரவுன் கரடி, பூனை, சீட்டா, நாய், வாத்து, கழுகு, பேரரசர் பென்குயின், ஜெயண்ட் பாண்டா, ஆடு, ஹெட்ஜ்ஹாக், குதிரை, சிங்கம், மக்காவ், ஆக்டோபஸ், சுறா, ஷெட்லேண்ட் போனி, பாம்பு, புலி, ஆமை மற்றும் ஓநாய். விலங்குகளைத் தவிர, கூகிள் 3 டி அம்சம் செவ்வாய், பூமி, புளூட்டோ மற்றும் பிற கிரகங்களுக்கும் வேலை செய்ய முடியும்.
IOS மற்றும் Android இயங்குதளங்களுக்கான கூகிள் தேடலில் கூகிள் 3D அம்சம் கிடைக்கிறது. இது பயன்படுத்த மிகவும் எளிதானது மற்றும் நாடு தழுவிய முடக்க காலகட்டத்தில் சில வளர்ந்த யதார்த்தங்களை அனுபவிக்க சில எளிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
கூகிள் 3D விலங்குகள் அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது?
உங்கள் ஸ்மார்ட்போனில் கூகிள் தேடலைத் (Google Search) திறக்கவும். Android-ல், இந்த அம்சம் Chrome மற்றும் Google பயன்பாடு இரண்டிலும் இயங்குகிறது.
பின்னர் உங்களுக்கு விருப்பமான விலங்கைத் தேர்ந்தெடுங்கள்.
முதல் பக்கத்தில் விக்கிப்பீடியா விளக்கத்துக்குக்கீழ் புலியின் 3D உருவம் இடம் பெற்றிருக்கும். அதன் அருகில் கொடுக்கப்பட்டிருக்கும் View in 3D ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
இது 3D விலங்கு என்பதினால் உங்கள் விரல் அசைவுகளுக்கு ஏற்றவாறு அனைத்து பக்கத்திலும் இந்த படத்தை நீங்கள் திருப்பி பார்க்க முடியும்.
உங்கள் வீட்டிற்குள் விலங்கை வரவழைக்க View in your space ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
கூகிள் பயன்பாட்டிற்கு உங்கள் மொபைல் கேமிரா ஆக்சஸ் அளிக்கவும்.
இதன் பின் உங்கள் கேமரா ஓபன் செய்யப்படும் நீங்கள் இருக்கும் அறையிலேயே இந்த விலங்கின் தோற்றம் தெரியும்.
இது ஒரு வேடிக்கையான செயலாக இருந்தாலும், விலங்குகளைப் பற்றியும் அவற்றின் நடத்தை பற்றியும் கற்றுக் கொள்ளும் குழந்தைகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.