இன்றைய கூகுள் டூடுலில் டிக்மார்கா ஃபோல்ஸ்டிக்!!
கண்ணாடி வேதியலாளர் மார்கா ஃபோல்ஸ்டிக்கின் 103 வது பிறந்தநாளை கொண்டாடிய கூகுள் டூடுல்!!
கண்ணாடி வேதியலாளர் மார்கா ஃபோல்ஸ்டிக்கின் 103 வது பிறந்தநாளை கொண்டாடிய கூகுள் டூடுல்!!
இன்று (சனிக்கிழமை) கூகுள் நிறுவனம் தனது டூடுலில் கண்ணாடி வேதியியலாளர் டிக்மார்கா ஃபோல்ஸ்டிக்கின் 103 வது பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் அவரின் புகைப்படத்தை டூடுலில் வைத்து மரியாதை செலுத்தியுள்ளது.
டிக்மார்கா ஃபோல்ஸ்டிக் 1915 ஆம் ஆண்டு 16-ம் தேதி பிறந்தார். இவரின் ஃபோல்ஸ்டிக் என்ற பெயரில் 40 காப்புரிமைகளை வைத்திருக்கிறார். மேலும், இவர் 44 ஆண்டுகளாக ஸ்கோட் AG உடன் பணிபுரிந்தார். இவர் ஸ்கொட் ஏஜி, கண்ணாடி மற்றும் கண்ணாடி மட்பாண்டங்களின் ஒரு சர்வதேச தயாரிப்புக் குழுவில் முதல் பெண் நிர்வாகியாக பணிபுரிந்தார்.
நிறுவனத்தில் தனது பதவிக் காலப்பகுதியில், 300 க்கும் அதிகமான ஒளியியல் கண்ணாடிகளை அவர் வடிவமைத்துள்ளார். இவர் ஒளி SF 64 லென்ஸ்-ஐ கண்டுபிடித்து 1973 இல் சர்வதேச அங்கீகாரம் பெற்றார். பின்னர் இவர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவர் பயணம் மற்றும் மாநாடுகளிலும், கூட்டங்களிலும் உரையாற்றி வந்தார். அழைத்துச் சென்றார்.
பின்னர் இவர், 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி 82 வயதில் உடல்நல குறைவால் உயிரிழந்தார்.