PM KISAN :விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்; மோடி அரசு முக்கிய அறிவிப்பு
நீங்கள் இ-கேஒய்சியை நிறைவு செய்தால் மட்டுமே பிஎம் கிசான் யோஜனாவின் அடுத்த தவணை அதாவது 11வது தவணையின் பணம் கிடைக்கும்.
பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் கீழ், விவசாயிகள் 11வது தவணை தொகையை பெற உள்ளனர். கிசான் சம்மான் நிதியின் 11வது தவணையை மே 31ம் தேதி பிரதமரால் மீண்டும் வழங்க உள்ளதாக விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார். ஆனால் இந்த 11வது தவணையை பெறுவதற்க்கு விவசாயிகள் இ-கேஒய்சியை முடிக்க வேண்டியது கட்டாயமாகும்.
மத்திய அரசு முக்கிய அறிவிப்பு
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் பலன்களைப் பெற மத்திய அரசு இப்போது கட்டாய இ-கேஒய்சி காலக்கெடுவை நீட்டித்துள்ளது. முன்னதாக அதன் கடைசி தேதி 22 மே 2022 ஆக இருந்தது. தற்போது இதற்கான காலக்கெடு மே 31, 2022 வரை நீட்டிக்கப்படுவதாக பிஎம் கிசான் போர்டல் (pmkisan.gov.in) இல் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | SBI அற்புதமான சலுகை, ஷாப்பிங் செய்து 70% தள்ளுபடி பெறுங்கள்
இ-கேஒய்சி இல்லாமல் 11வது தவணை பணம் கிடைக்காது
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் விவசாய பயனாளிகள் தங்கள் எதிர்கால தவணைகளை உறுதி செய்ய ஒரு முக்கியமான செயல்முறையை முடிக்க வேண்டும். எதிர்காலத்தில் செலுத்தப்படும் தவணை முறை நிதியை பெற விவசாயிகள் இ-கேஒய்சி செயல்முறையை இந்த மாத இறுதிக்குள் அதாவது மார்ச் 31, 2022க்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இல்லை என்றால் அவர்களால் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டம் மூலம் வழங்கப்பட உள்ள 11வது தவணையைப் பெற முடியாது.
இ-கேஒய்சி எவ்வாறு செய்வது என்பதை விரிவாக பார்ப்போம்.
செயல்முறை எண். 1: முதலில் உங்கள் மொபைல் அல்லது லேப்டாப்பில் பிஎம் கிசான் இணையதளத்தை (pmkisan.gov.in) திறக்கவும். இங்கே இ-கேஒய்சி இன் இணைப்பு வலது பக்கத்தில் காணப்படும்.
செயல்முறை எண் 2 : இங்கே ஆதார் உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு தேடல் பொத்தானைத் தட்டவும். இப்போது உங்கள் மொபைலில் 4 இலக்க ஓடிபி வரும். கொடுக்கப்பட்ட பெட்டியில் டைப் செய்யவும்.
செயல்முறை எண். 3: மீண்டும் ஆதார் அங்கீகாரத்திற்கான பொத்தானைத் தட்டுமாறு கேட்கப்படுவீர்கள். அதைத் கிளிக் செய்யவும், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் மற்றொரு 6 இலக்க ஓடிபி வரும். அதை நிரப்பி சமர்ப்பி என்பதைத் கிளிக் செய்யவும்.
செயல்முறை எண். 4: இதற்குப் பிறகு உங்கள் இ-கேஒய்சி முடிக்கப்படும் அல்லது தவறானது என்று காணப்படும். அப்படி காணப்பட்டால், ஆதார் சேவை மையத்திற்குச் சென்று சரி செய்து கொள்ளலாம். இ-கேஒய்சி ஏற்கனவே முடிந்துவிட்டால், இ-கேஒய்சி ஏற்கனவே முடிந்துவிட்டது என்ற செய்தி திரையில் காட்டப்படும்.
ஜூன் 30 வரை சோசியல் அப்டே நடைபெறும்
மே 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை சமூக தணிக்கை அரசால் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தணிக்கையில், தகுதியானவர்கள் மற்றும் தகுதியற்றவர்கள் பற்றிய தகவல்கள் கிராம சபை மூலம் சேகரிக்கப்படும். அதன் பிறகு, பட்டியலில் இருந்து தகுதியற்றவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு, தகுதியானவர்களின் பெயர்கள் சேர்க்கப்படும்.
மேலும் படிக்க | PF தொகையை மாற்றணுமா: வீட்டில் இருந்தபடியே செய்யலாம், எளிய செயல்முறை இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR