கிரீன் டீ குடித்தால் உடல் எடை குறையுமா? ஒரு நாளைக்கு எத்தனை கப் குடிக்க வேண்டும்?
Green Tea Health Benefits: உங்களுக்கு கிரீன் டீ குடிக்கும் பழக்கம் இருக்கிறதா? ஒரு நாளைக்கு எத்தனை கிரீன் டீ குடிக்க வேண்டும் என்று தெரியுமா?
உடல் எடையை குறைக்க நினைப்போர், கொழுப்பை கரைக்க நினைப்போர் கிரீன் டீ குடிப்பதை வழக்கமாக கொண்டிருப்பர். Camellia sinesis எனப்படும் தேயிலை செடியில் இருந்து தயாரிக்கப்படும் டீ தான் கிரீன் டீ என அழைக்கப்படுகிறது.
கிரீன் டீ:
பிற டீ-யில் இருப்பது போல அன்றி, கிரீன் டீயில் குறைவான அளவிலேயே கஃபைன் சத்துக்கள் அடங்கியிருக்கும். இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் சத்துக்கள் அதிகம் அடங்கியுள்ளன. உடல் எடையை குறைக்க விரும்புவோர், கொழுப்பை கரைக்க விரும்புவோர், இதை தினசரி குடிக்க வேண்டும் என்று சிலர் பரிந்துரைக்கின்றனர். இது ஏன்? அப்படி கிரீன் டீயில் என்னதான் உள்ளது? கிரீன் டீயை ஒரு நாளைக்கு எத்தனை முறை குடிக்க வேண்டும்?
குறைந்த ரத்த அழுத்தம்:
கிரீன் டீயில் catechins எனும் சத்து உள்ளது. இது உடலின் குறைந்த ரத்த அழுத்தத்தை உடனடியாக சரிசெய்ய உதவும் என சில மருத்துவ ஆராய்ச்சிகளில் கூறப்படுகிறது. 130MM Hgக்கு மேல் ரத்த அழுத்தம் கொண்டுள்ளவர்கள் கிரீன் டீ குடிப்பதால் அவர்களின் இந்த ரத்த அழுத்த பிரச்சனை சில மணி நேரங்களுக்கு சரி செய்யப்படும் என கூறப்படுகிறது. இது குறித்து 2014ஆம் ஆண்டு ஐரோப்பிய நாட்டில் உள்ள ஒரு ஆய்வகம் ஆய்வு நடத்தியது. இதில், ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்பட்டவர்களுக்கு குறைந்த ரத்த அழுத்தம் உடனடியாக சரியாவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சர்க்கரை அளவு:
2021ஆம் ஆண்டு 18 வயதிற்கு மேற்பட்டவர்களை வைத்து சீனாவில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், சர்க்கரை நோய் கொண்டிருந்தவர்களின் இன்சுலின் அளவு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் அனைவரும் கிரீன் டீ குடித்தனர். இவர்களுக்கு ரத்தத்தில் கலந்திருந்த சர்க்கரையின் அளவு குறைந்து காணப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதனால், கிரீன் டீ குடிப்பதால் சர்க்கரை நோயையும் சமநிலையில் வைத்துக்கொள்ளலாம். சர்க்கரை நோய் வராமல் தடுக்கவும் வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க | வெயிட் லாஸ் பண்ண திட்டமா? அப்போ இந்த பச்சை நிற ஜூஸ் போதும்
உடல் எடையை குறைக்க உதவுமா?
சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வில், க்ரீன் டீ குடிப்பதனால் நமது உடலில் உள்ள கொழுப்பு கரைந்து உடல் எடை குறைய வழி வகுக்கும் என கூறப்படுகிறது. மேலும், நம் உடலில் உள்ள மெட்டபாலிசம் சத்தை அதிகரித்து கொழுப்பை உற்பத்தி செய்யும் ஹார்மோன்களையும் கட்டுக்குள் வைப்பதாக கூறப்படுகிறது.
மன நலனுக்கு நல்லது:
பலர், “எனக்கு டென்ஷனாக இருக்கும் போது, தலை வலிக்கும் போது டீ குடித்தால் சரியாகி விடுவேன்” என கூறுவதுண்டு. சாதாரண டீயில் மட்டுமல்ல, கிரீன் டீயிலும் அந்த மேஜிக் உள்ளது. 2017ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கிரீன் டீ குடிப்பவர்கள் அறிவு சார்ந்த விஷயங்களில் தெளிவுடன் செயல்படுவதாக தெரிய வந்துள்ளது. கிரீன் டீ குடிப்பவர்கள் பதற்றம் குறைந்து நிதானமாக செயல்படுவதாகவும் அவர்கள் நினைவு திறனும் அதிகரித்து காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 2022ஆம் ஆண்டு 12ல் இருந்து 18 வயதுடையவர்களை வைத்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அவர்கள் அனைவரும் ஒரு நாளைக்கு 6 கப் கிரீன் டீ குடிக்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு, மன சோர்வை கொடுக்கும் ஹார்மோன்கள் குறைவாக உற்பத்தியானதாகவும் இவர்களுக்கு பதற்றம் மற்றும் மன அழுத்தம் ஆகியவை குறைவாக காணப்பட்டதாகவும் அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஒரு நாளைக்கு எத்தனை கப் கிரீன் டீ குடிக்க வேண்டும்?
கிரீன் டீயில் பல நன்மைகள் இருப்பினும் இதை அதிகம் குடிப்பதால் சில உடல் உபாதைகளும் ஏற்படும். 6 அல்லது அதற்கு அதிகமான கப் கிரீன் டீ குடிப்பதால் வயிறு உபாதை ஆவது, செரிமான கோளாறுகள் ஏற்படுவது, தூக்கமின்மை, சரும பாதிப்பு உள்ளிட்டவை ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்பதை மனதில் கொண்டு, கிரீன் டீயையும் அளவுடனே பருக வேண்டும் என சுகாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
மேலும் படிக்க | Weight Loss Tips: 10 நாட்களில் 5 கிலோ எடை குறைக்கலாம், இதை மட்டும் செஞ்சா போதும்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ