Weight Loss Tips: 10 நாட்களில் 5 கிலோ எடை குறைக்கலாம், இதை மட்டும் செஞ்சா போதும்!!

Weight Loss Tips: பத்தே நாட்களின் உடல் எடையை ஐந்து கிலோ குறைக்க வேண்டுமா? இதோ, இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையை பின்பற்றினால் போதும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 14, 2022, 03:03 PM IST
  • உடல் எடையை குறைக்க இந்த முறைகளை பின்பற்றவும்.
  • காலை சிற்றுண்டியில் ஓட் மீல், பழங்கள் ஆகியவற்றை உட்கொள்ளுங்கள்.
  • இவை குறைந்த கலோரி கொண்ட உணவாகும்.
Weight Loss Tips: 10 நாட்களில் 5 கிலோ எடை குறைக்கலாம், இதை மட்டும் செஞ்சா போதும்!! title=

உடல் எடையை குறைக்கும் வழிமுறைகள்: உடல் எடை அதிகரிப்பது இந்நாட்களில் உலக மக்களை பாடாய் படுத்தும் ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணங்களில் ஒன்று நமது உணவுமுறையாகும். நாம் உட்கொள்ளும் உணவும், நமது வாழ்க்கை முறையும் இதன் முக்கிய காரணிகளாக அமைகின்றன. குறிப்பாக எண்ணெ பொருட்கள், உடல் பருமனை அதிகரித்து, உடலில் பல நோய்கள் ஏற்பட காரணமாகின்றன. இது உடல் எடை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக அமைகின்றது. 

மக்கள் உடல் எடையை குறைக்க பல வித முயற்சிகளை செய்கிறார்கள். ஜிம்முக்கு சென்று உடல் வியர்வை சிந்தி எடையை குறைக்க முயல்கிறார்கள். இவற்றால். விரைவாக உடல் எடையை குறைக்க முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். எனினும், உடல் எடையை குறைக்க மிக எளிய வழியும் உள்ளது. ஆம், உங்கள் வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலம் எடையை எளிதாகக் குறைக்கலாம். எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

உடல் எடையை குறைக்க இந்த முறைகளை பின்பற்றவும்

அதிகாலை

காலையில் சுமார் 5 மணிக்கு எழுந்து கிரீன் டீயுடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள். தினமும் சுமார் 3-5 கிமீ நடக்கவும். இது உங்கள் உடலை வியர்க்க வைக்கும். பின்னர் வீட்டிற்கு வந்து காலை சிற்றுண்டியில் ஓட் மீல், பழங்கள் ஆகியவற்றை உட்கொள்ளுங்கள். இவை குறைந்த கலோரி கொண்ட உணவாகும். இதனால் உங்கள் வயிறு நிரம்பும், உங்கள் தொப்பையும் குறையும்.

மேலும் படிக்க | உயரம் குறைவானவரா? உங்கள் குழந்தை உயரமாக வளர இதை செய்தால் போதும் 

மதிய உணவு

மதிய உணவில் ஒரு அரசனைப் போல உணவு உட்கொள்ள வேண்டும் என்று கூறப்படுகின்றது. ஆனால் உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இந்த கூற்று பொருந்தாது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் மதியம் 2 சப்பாத்தி, சிறிது சாதம், புரதம் நிறைந்த பருப்பு மற்றும் பச்சை காய்கறிகளை சாப்பிட வேண்டும். மதிய உணவை உட்கொண்ட பிறகு, கண்டிப்பாக மோர் அல்லது லஸ்ஸி அருந்தவும். இந்த வழிகளில் உடலுக்கு அதிக புரதம் கிடைக்கும். 

இரவில் இவற்றை உட்கொள்ளலாம்

இரவு உணவு எப்போதும் மிகவும் முக்கியமான உணவாகும். இதில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இரவு உணவில் எப்போதும் லேசான உணவை உட்கொள்ள வேண்டும். இதனால் சரியான நேரத்தில் தூக்கம் வரும். 

உங்கள் இரவு உணவில் காய்கறிகளின் சாலட், பழங்களை உட்கொள்ளலாம். இரவில் உட்கொள்ள சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஏற்றது. அதில் கலோரிகள் குறைவாக உள்ளன. மேலும் அதில் மாவுச்சத்து நிறைந்துள்ளது. இதில் நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது. மேலும் இது ஜீரணிக்க எளிதானது மற்றும் கொழுப்பைக் குறைக்கும். 

இப்படிப்பட்ட ஆரோக்கியமான உணவுகளின் மூலம் நாம் நமது உடல் எடையை எளிதாக குறைக்கலாம். எந்த நேரத்தில், எந்த உணவை எவ்வளவு உட்கொள்ள வேண்டும் என்பதை அறிவது மிக முக்கியமாகும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இந்த ஒரு இலை போதும் சர்க்கரை நோய் குணமாகும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News