ஒருவரின் செல்வ வளத்துக்கு காரணமாக இருப்பவர். ஜோதிட சாஸ்திரத்தின்படி, நற்பலன்களை வழங்குவதில் குரு பிரதானமானவர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குரு பார்த்தாலே கோடி நன்மை என்று சொல்லும்போது, அவரின் அருட்பார்வை விழுந்தால் ஒருவரின் செல்வ செழிப்பு அற்புதமாக இருக்கும். ஆனால், ஒருவர் கொடுத்தால், அதை கெடுக்க மற்றொருவர் இருப்பார். அதுதானே விதியின் வலிமை.


ஒருவரின் ஜாகத்தில் இரண்டாம் வீடு, அதன் அதிபதி, பதினோராம் வீடு அதன் அதிபதி, இவர்களின் பலம் பலவீனம். அதற்கும் மேலாக குரு எனும் தனகாரகனின் பலத்தை வைத்தே ஒருவரின் செல்வச் செழிப்பு முடிவு செய்யப்படும்.


தனபாவகமான இரண்டாம் வீட்டின் காரக கிரஹம் குரு பகவான் தான். ஒரு ஜாதகரின் ஜாதகத்தில், இரண்டாம் அதிபதியும், 11ம் அதிபதி இருவரும் 6ம் இடம் அல்லது எட்டாமிடம் அல்லது 12ம் இடம் இவற்றில் மறைந்திருந்தால், அந்த ஜாதகர் மற்றவர்களின் தயவை எதிர்பார்த்தே வாழ முடியும்.


மேலும் படிக்க | சனியின் ராசி மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமழை பொழியும் 


அதாவது அவரது வருமானம் மற்றும் வாழ்க்கை மற்றவரை சார்ந்தே இருக்கும். இவர்கள் தொழில் செய்தாலும், மற்றவரை சார்ந்த தொழிலாகவே இருக்கும்.


ஜாதகத்தில் இரண்டாம் அதிபதி 12 ல் மறைந்தும், 12ம் அதிபதி லக்னத்தில் அமர்ந்தும், மாரக கிரஹ பார்வை இருந்தால், அவருக்கு செல்வ வளம் இருக்காது. எப்போதும் வறுமையே சூழ்ந்திருக்கும்.


லக்னாதிபதி லக்னத்தில் அமர்ந்திருந்தால், பொருளாரீதியில் நல்ல நிலையில் இருப்பதற்கான அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம். அதேபோல, லக்னாதிபதிக்கு சூரியனுடனான தொடர்பும் செல்வத்தைக் கொடுக்கும்.


மேலும் படிக்க | செவ்வாய் - சனி கூட்டணி: மே 17 வரை சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்


பாக்யஸ்தானமான ஒன்பதாம் இடத்தின் அதிபதிக்கும் இரண்டாம் இடத்துக்கும் தொடர்பு இருக்கும் எனில் ஜாதகருக்கு பணப் பிரச்சனைகள் இருக்காது.


இரண்டாம் அதிபதி ஒன்பதாம் அதிபதியுடன் இணைந்து பதினொன்றில் சந்திரன் குரு சேர்க்கை பெற்று அமர்ந்திருந்தால், அந்த ஜாதகர், பெரிய அளவு பின்புலம் இல்லாதவராக இருந்தாலும் நல்ல பணம் சம்பாதிப்பார்.


அதேபோல, ஜாதகத்தில் இரண்டாம் இடத்தில் குரு இருந்து, அவருடன் சுக்கிரனுக்கு இருப்பதுபோல ஜாதக அமைப்பு இருந்தால் அந்த ஜாதகர் சொந்த முயற்சியில் செல்வம் சேர்ப்பவர்


அதேபோல, ஜாதகத்தில் பதினோராம் கட்டத்தில் சுப கிரகம் ஒன்று இருந்தாலும் பணப் பிரச்சனை இல்லாத வாழ்க்கை என்று சொல்லலாம்.


மேலும் படிக்க | ராகு ஏற்படுத்தும் பித்ரு தோஷம் மற்றும் ஜார்த்வ தோஷத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் 
 
ஏழாம் அதிபதியும் சுக்கிரனுக்கும் இணைந்து, 11ம் அதிபதி தொடர்பு இருக்குமெனில் வாழ்க்கைத் துணை மூலம் செல்வம் சேரும்


கர்ம காரக கிரஹங்களான சூரியன், குரு , சனி, புதன் இவர்களின் பலம் ஒருவரின் நிதி நிலைமை, பொருளாதாரம மேம்பாடு என்பது அவர்கள் பார்க்கும் வேலை மூலம் ஏற்படும் என்பதை சொல்லும்.


லக்னாதிபதி, சூரியன், சந்திரன் என்பது ஜாதகரின் அதிர்ஷ்டத்தை முடிவு செய்யும். அதேபோல, லக்னாதிபதிக்கு . இரண்டாம், ஒன்பதாம், பதினோராம் அதிபதிகளுடன் இருக்கும் தொடர்புகளே ஒருவருக்கு நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கவும், அதில் வெற்றி பெறவும், அதன் மூலம் பணம் மற்றும் சொத்து சேர்க்கைக்கும் அடிப்படையாகும்.


சந்திரன், குரு, புதன், சுக்கிரன் எனும் நால்வரும் கேந்திரங்களில் அமைந்தால் ஜாதகர் பெரும் செல்வந்தராகும் பாக்கியம் பெற்றவர் ஆகிறார் என்பது ஜாதக ஜோதிடத்தின் விதி.


ஆனால், குரு கொடுத்தாலும், சுப கிரகங்களின் அருட்பார்வை இருந்தாலும், அதை அனுபவிப்பதற்கும், எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லை என்பது போன்ற எண்ணத்தை ஏற்படுத்துவதும் சனீஸ்வரரின் கையில் இருக்கிறது.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | 2025 வரை ஏழரை நாட்டு சனியின் கிடுக்கிப்பிடியில் சிக்கித் தவிக்கப் போகும் ராசி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR