வழுக்கை தலையில் முடி வளருமா... வழுக்கை வராமல் இருக்க பின்பற்ற வேண்டிய பழக்கங்கள்
இன்றைய காலகட்டத்தில் தவறான உணவு பழக்கம் காரணமாக முடி உதிர்தல் மற்றும் வழுக்கை என்பது பொதுவான பிரச்சனையாகிவிட்டது. இதன் காரணமாக, மக்கள் தன்னம்பிக்கையை இழந்து விடுகிறார்கள்.
இன்றைய காலகட்டத்தில் தவறான உணவு பழக்கம் காரணமாக முடி உதிர்தல் மற்றும் வழுக்கை என்பது பொதுவான பிரச்சனையாகிவிட்டது. இதன் காரணமாக, மக்கள் தன்னம்பிக்கையை இழந்து விடுகிறார்கள். இளமையில் முடி உதிர்தல் மற்றும் வழுக்கை பல வகைகளில் இளைஞர்களை பாதிக்கும். தங்கள் வழுக்கையை மறைக்க பல வழிகளை பின்பற்றுகிறார்கள். ஆனால் அனைவரின் மனதிலும் எழும் ஒரு கேள்வி வழுக்கை தலையில் முடி வளருமா? சரியான உணவு மற்றும் எண்ணெய்களின் பயன்பாடு வழுக்கைத் தலையில் புதிய முடி வளர உதவுமா?, எல்லாவற்றுக்கும் மேலாக, வழுக்கை வராமல் தடுப்பது எப்படி... இந்தக் கேள்விகளுக்கெல்லாம் இங்கே பதில்களைத் தெரிந்து கொள்வோம்.
வழுக்கை தலையில் முடி வளர என்ன செய்ய வேண்டும்?
சரிவிகித உணவின் முக்கியத்துவம்
முடி உதிர்தலுக்கு பெரும்பாலும் ஊட்டச்சத்து குறைபாடு தான் காரணமாக உள்ளது. சில அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உணவில் சேர்த்துக் கொண்டால், அது முடி வளர்ச்சிக்கு (Hair Care Tips) உதவும்.
கூந்தல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள்
புரதம்: தலைமுடியின் முக்கிய கூறு புரதம். முட்டை, பருப்பு வகைகள் மற்றும் பால் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகள் முடியின் வேர்களை பலப்படுத்துகின்றன.
இரும்பு மற்றும் துத்தநாகம்: இரும்பு மற்றும் துத்தநாகம் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. பச்சை காய்கறிகள், நட்ஸ் வகைகள் மற்றும் விதைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பயோட்டின்: பயோட்டின் முடியை அடர்த்தியாகவும் வலுவாகவும் ஆக்குகிறது. முட்டையின் மஞ்சள் கரு, பருப்புகள் மற்றும் முழு தானியங்கள் இவற்றின் நல்ல ஆதாரங்கள்.
வைட்டமின் டி: சூரிய ஒளி மற்றும் மீன் மற்றும் காளான் போன்ற வைட்டமின் டி நிறைந்த உணவுகள் கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
மேலும் படிக்க | அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும்... பயோடின் நிறைந்த சில சூப்பர் உணவுகள்
தலைமுடியில் எண்ணெய் தடவுவதால் ஏற்படும் நன்மைகள்
எண்ணெய் மசாஜ் முடி வேர்களுக்கு ஊட்டமளிக்கிறது மற்றும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. குறிப்பிட்ட சில எண்ணெய்கள் முடி வளர்ச்சியை விரைவுபடுத்த உதவியாக கருதப்படுகின்றன.
தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெய் முடி வேர்களை ஆழமாக வளர்த்து, முடி உடைவதைத் தடுக்கிறது.
ஆமணக்கு எண்ணெய்: இதில் ரிசினோலிக் அமிலம் உள்ளது, இது முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
வெங்காயச் சாறு கலந்த எண்ணெய்: வெங்காயச் சாற்றை உச்சந்தலையில் தடவினால் முடியின் வேர்க்கால் புத்துயிர் பெறும்.
பாதாம் மற்றும் ஆலிவ் எண்ணெய்: இந்த எண்ணெய்கள் முடியின் ஈரப்பதத்தை காத்து, முடி உதிர்வதைத் தடுக்கும்.
வழுக்கைத் தலையில் புதிய முடி வளருமா?
சரிவிகித உணவு மற்றும் எண்ணெய் மசாஜ் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு முடி உதிர்வைத் தடுக்கும். வழுக்கை ஏற்பட்ட உடன், உணவில் சரியான கவன செலுத்தினால், அதனை மேலும் அதிகரிக்காமல் தடுக்கலாம். இருப்பினும், வழுக்கைத் தலையில் புதிய முடி வளரும் என்ற கூற்று முற்றிலும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. மரபணு அல்லது ஹார்மோன் மாற்றங்களால் வழுக்கை ஏற்பட்டால், முடி மாற்று அல்லது PRP சிகிச்சை போன்ற மருத்துவ சிகிச்சைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நிபுணர் ஆலோசனை
முடி உதிர்வு அதிகமாக இருந்தால், நிபுணர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும். அவர்கள் உங்கள் முடி பிரச்சனைக்கான மூல காரணத்தை புரிந்துகொண்டு சரியான சிகிச்சையை பரிந்துரைக்கலாம்.
சரிவிகித உணவு மற்றும் எண்ணெய்கள் முடி ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும், ஆனால் வழுக்கை தலையில் புதிய முடி வளர உதவும் உறுதியான தீர்வாக இருக்காது. வழுக்கை பிரச்சனை தீர, உங்கள் பிரச்சினையின் மூல காரணத்தைப் புரிந்துகொள்வதும், சரியான மருத்துவ சிகிச்சையைப் பின்பற்றுவது முக்கியம். வழக்கமான பராமரிப்பு, சரிவிகித உணவு மற்றும் நிபுணர் ஆலோசனையுடன் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
மேலும் படிக்க | குளிர்காலத்தில் தலைமுடி பிரச்சனையை ஈஸியாக டீல் செய்ய டிப்ஸ்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ