பயோட்டின் கூந்தலுக்கு இன்றியமையாத ஊட்டச்சத்து ஆகும். பயோட்டின் வைட்டமின் பி7 என்று அழைக்கப்படுகிறது. இது முடியை வலுவாகவும், ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் பராமரிக்க உதவுகிறது. இது முடி உதிர்வதைத் தடுக்கிறது, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. தினசரி பயோட்டின் நிறைந்த உணவை உட்கொள்வது உங்கள் தலைமுடியை பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க ஒரு சிறந்த வழியாகும். பயோட்டின் உங்கள் கூந்தலை ஆரோக்கியமாக பராமரிப்பதோடு மட்டுமல்லாமல், சருமம் மற்றும் நகங்களை பளபளப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது. பயோட்டின் சப்ளிமெண்ட்ஸ் சந்தையில் எளிதில் கிடைக்கின்றன, ஆனால், உங்கள் உணவின் மூலம் இந்த சத்தினை பெறுவது மிகவும் சிறந்ததாக இருக்கும்.
பயோடின் நிறைந்த உணவை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
பயோட்டின் தலைமுடியின் வேர்களை பலப்படுத்துகிறது மற்றும் அவற்றின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதனை உட்கொள்வதால் முடி உதிர்தல் பிரச்சனை குறைகிறது. தொடர்ந்து பயோட்டின் உட்கொள்வதால் கூந்தல் மென்மையாகவும், அடர்த்தியாகவும், வலுவாகவும் இருக்கும். பயோட்டின் தலைமுடிக்கு வேரில் இருந்து ஊட்டமளித்து ஆரோக்கியமாக வைக்கிறது. இது உங்கள் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது முடி வேர்களுக்கு போதுமான ஊட்டச்சத்தை வழங்குகிறது.
பயோட்டின் நிறைந்த சில உணவுகள்
1. பாதாம், வேர்க்கடலை மற்றும் வாதுமை பருப்புகள்
2. முட்டை (குறிப்பாக முட்டையின் மஞ்சள் கரு)
3. கேரட்
4. மீன் உணவுகள் குறிப்பாக சால்மன் வகை மீன்
5. சர்க்கரை வள்ளிக் கிழங்கு
6. பச்சை இலை காய்கறிகள்
7.வாழைப்பழம்
8. பீன்ஸ் பருப்பு வகைகள
9. பால் மற்றும் பால் பொருட்கள்
மேலும் படிக்க | 1 வாரத்தில் சரும ஆரோக்கியம் மேம்பட இந்த வீட்டு வைத்தியங்கள் போதும்
பயோட்டின் குறைபாட்டின் அறிகுறிகள்
உங்கள் உடலில் பயோட்டின் குறைபாடு இருந்தால், கீழ்கண்டஅறிகுறிகளின் மூலம் அடையாளம் காணலாம்...
1. கூந்தல் வறண்டு, பளபளப்பின்றி காணப்படுதல்
2. கூந்தல் அதிகம் உதிர்தல்
3.தலைமுடி உடைதல்
4. சருமத்தில் வறட்சி மற்றும் எரிச்சல்
5. நகங்கள் பலவீனமடைந்து உடைதல்
ஆரோக்கியமான உடலுக்கு அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் தேவை. அனைத்து வகையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உடலில் வெவ்வேறு செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றில் ஒன்று பயோட்டின். பயோட்டின் ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக கூந்தல் வளர்ச்சி பாதிக்கப்படுவதோடு, பல தீவிர நோய்களுக்கு ஆளாக நேரிடலாம். உடலில் பயோட்டின் குறைபாட்டை லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உடலில் பயோடின் ஊட்டச்சத்து குறைபாடு ஆரோக்கியத்தில் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக கூந்தல் வளர்ச்சி, கண்கள் மற்றும் நகங்கள் பாதிக்கப்படுகின்றன. பயோடின் கூந்தல் வளர்ச்சியை மட்டுமல்ல பல நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சருமத்தை சாப்ட்டாக, பளபளப்பாக வைக்கணுமா... இந்த 5 ஜூஸ்களை குடிங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ