Hair care Tips Tamil | குளிர்காலம் வந்தாலே ஆரோக்கியத்தை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் தான் வைரஸ் பாக்டீரியாக்கள் எல்லாம் புதிதாக உருவாகி, எல்லோரையும் தொந்தரவுபடுத்தும். பொதுவாக சளி காய்ச்சல் வருவதை போலவே தலைமுடி பிரச்சனைகளும் வரும். பொடுகு, முடி கொட்டுதல், தலைமுடி உடைதல் உள்ளிட்ட பிரச்சனைகளையும் நீங்கள் எதிர்கொள்ள நேரிடும். இப்படியான நேரங்களில் எல்லாம் நீங்கள் பதட்டப்படவே கூடாது. ஆரோக்கியமான டிப்ஸை தெரிந்து வைத்துக் கொண்டால் முடி தொடர்பான எந்த பிரச்சனைகள் வந்தாலும் ஈஸியாக சரிசெய்து கொள்ளலாம். அதனால் குளிர்காலத்தில் தலைமுடிக்கு பிரச்சனை வராமல் இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
குளிர்காலத்தில் தலைமுடி ஆரோக்கியமாக வைத்திருக்க டிப்ஸ்
1. ஈரப்பதமாக்குங்கள்
கோடையை விட குளிர்காலத்தில் நம் தலைமுடி வறண்டு போகும். ஈரப்பதத்திற்கு எண்ணெய் அல்லது கிரீம் தடவவும். நீங்கள் எந்த கிரீம் வேண்டுமானுலம் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அது உங்கள் விருப்பம். ஆனால் நீங்கள் உபயோகிக்கும் கிரீன் உங்கள் தலைக்கு குளிர்ச்சியை கட்டாயம் கொடுத்து, ஈரப்பதத்தை கொடுப்பவையாக இருக்க வேண்டும்.
மேலும் படிக்க | சருமம்-முடி இரண்டையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளும் 5 உணவுகள்! என்னென்ன தெரியுமா?
2. கண்டிஷனிங்
கண்டிஷ்னிங் பயன்படுத்தலாம். குளிர்காலத்தில் உங்கள் தலைமுடி ஆரோக்கியத்துக்கு இது ஒரு சிறந்த ஆப்சன். உங்கள் முடி வறண்ட மாதிரியே இருந்தாலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் கண்டிஷ்னிங் பயன்படுத்தலாம். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை கண்டிஷ்னிங் செய்து கொள்ளலாம். அதிக சூடான நீரில் முடியைக் கழுவுவதைத் தவிர்க்கவும்.
3. தொப்பி போடவும்
குளிர்காலத்தில் நீங்கள் எப்போதும் தொப்பி போட்டுக் கொள்வது நல்லது. ஏனென்றால் இந்த நேரத்தில் உலர்ந்த காற்று அதிகமாக இருக்கும். அது உங்கள் தலைமுடியை சீக்கிரம் வறண்டு போக செய்யும். எனவே தொப்பி போட்டுக் கொண்டீர்கள் என்றால் எப்போதும் உங்கள் தலைமுடி வறண்டு போகாமல் ஆரோக்கியமாக இருக்கும்.
4. தண்ணீர் குடிக்கவும்
உடலுக்கு ஆரோக்கியமான உணவை கொடுத்தாலே நீங்கள் பிரதயேகமாக தலைமுடியை கவனிக்க வேண்டிய அவசியமிருக்காது. போதுமான அளவுக்கு தண்ணீர் குடித்தல், காய்கறி பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுதல் ஆகியவை உடல் ஆரோக்கியத்துடன் தலைமுடி ஆரோகியத்துக்கும் உதவியாக இருக்கும். தினமும் உங்கள் உயரம், உடல் எடைக்கு ஏற்ப போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறீர்களா? என்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.
5. நீராவி சிகிச்சை
தலைக்கு நீராவி சிகிச்சை என்ற ஒன்று இருக்கிறது. அதனை செய்யும்போது தலையில் இருக்கும் தேவையற்ற அழுக்குகள், கிருமிகள் எல்லாம் அழிந்துவிடும். இந்த சிகிச்சை தலைமுடி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், உங்களையும் புத்துணர்ச்சியாக உணர வைக்கும். நீராவி சிகிச்சைக்குப் பிறகு நீங்களே சுறுசுறுப்பாக உணர்வீர்கள். உடலும், தலையும் ஏதோ ஒன்றின் பிடியில் இருந்து விடுபட்டதுபோல் உங்களை உணர வைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க நயன்தாரா ‘இதை’ குடிப்பாராம்! என்ன தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ