நமது அன்றாட வாழ்க்கையில் ஸ்டைலான மற்றும் ஆரோக்கியமான கூந்தலை பராமரிப்பது கடினமானதாக உள்ளது.  ஆனால் சில எளிய வழிகளில் தினசரி முடி பராமரிப்புகள் மூலம் நமது அன்றாட வேலைகளுக்கு இடையில் முடி பராமரிப்பில் கவனம் செலுத்த முடியும்.  ஆரோக்கியமான முடியை வளர்ப்பது நமக்கு வெளியில் அழகு சேர்த்தாலும், உடலுக்கு நன்மை பயக்குகிறது. ஆரோக்கியமான முடி பராமரிப்பு ஒட்டுமொத்த நல்வாழ்வை பிரதிபலிக்கிறது. முடி ஆரோக்கியத்தை பராமரிக்க புரதங்கள், பயோட்டின் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவை எடுத்து கொள்வது அவசியம்.  கெரட்டின் போன்ற புரதங்கள் முடியின் முதுகெலும்பாக செயல்படுகின்றன.  அதே நேரத்தில் பயோட்டின் மற்றும் இரும்பு ஆகியவை வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும், சரியான ஆக்ஸிஜன் ஓட்டத்தை உறுதி செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. முடி நன்கு வளர உங்கள் உணவில் முட்டை, மீன், பால், கீரை மற்றும் முழு தானியங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சுவை, மணம், ஆரோக்கியம்... சும்மா பட்டையை கிளப்பும் இலவங்கப்பட்டை


ஷாம்பு


உங்கள் முடிக்கு சரியான, மென்மையான ஷாம்பு மற்றும் கண்டிஷனரைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் முடி மற்றும் தலையின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுக்கலாம். கடுமையான இரசாயனங்கள் மற்றும் சல்பேட்டுகள் இல்லாத பொருட்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் முடியின் சேதத்தை குறைத்து ஒட்டுமொத்த முடியின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தலாம். உங்கள் தலையில் மற்றும் முடியில் அழுக்கு மற்றும் அதிகப்படியான எண்ணெய் இல்லாமல் இருப்பதை உறுதி செய்யவும். தினசரி தலைக்கு குளிப்பது முடி கொட்டும் அபாயத்தை அதிகப்படுத்தினாலும், முடியில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்ய உதவுகிறது.


முடி பராமரிப்பு


முடி கொட்டும் பிரச்சனையை தடுக்க முதன்மையான முறை ட்ரையர்களை பயன்படுத்தாமல் இருப்பது ஆகும்.  முடிக்கு அதிக வெப்பத்தை கொடுப்பது முடி கொட்டுவதை அதிகமாக்குகிறது.  உங்கள் தலைமுடியின் வலிமையைப் பராமரிக்கவும், உச்சந்தலையில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கவும் இயற்கையான முறையில் முடியை உலர்த்துவது நல்லது.  மேலும், முடி உடைவதை தடுக்க ஈரமான முடியில் சீப்பு கொண்டு சீவுவதை தவிர்க்கவும். உங்கள் விரல்கள் கொண்டு ஈரமான முடியை சரி செய்யவும்.


இரவு நேர முடி பராமரிப்பு


இரவு நேரத்தில் முடி கொட்டுவதை தடுக்க பட்டு அல்லது சாடின் கொண்ட தலையணையை பயன்படுத்தவும். இரவில் தூங்கும் போது தலைக்கு எண்ணெய் தடவுவதை தவிர்க்கவும்.  சில சமயங்களில் இதனால் பூஞ்சை தொற்று ஏற்படலாம், மேலும் பொடுகும் ஏற்படலாம். உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருங்கள், இது உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. போதுமான தண்ணீர் குடிப்பது ஒட்டுமொத்த முடி ஆரோக்கியத்திற்கு பங்களிக்கிறது. பயோட்டின், பி-வைட்டமின் முடி ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது


முடியை அடிக்கடி தொடாதீர்கள்


முடியை நன்கு சீவிய பிறகு நாம் அடிக்கடி முடியைத் தொடுகிறோம். முடி நன்றாக இருக்கிறதா? நன்றாக அமைக்கப்பட்டுள்ளதா? என உறுதி செய்ய முடியைத் தொடவும். இருப்பினும், அவ்வாறு செய்வது அலங்காரத்தை கெடுத்துவிடும்.  குறிப்பாக உங்களுக்கு வியர்வை நிறைந்த கைகள் அல்லது எண்ணெய் பிசுபிசுக்கு இருந்தால் முடியை அடிக்கடி தொடுவதை தவிர்க்கவும்.  எனவே, உங்கள் தலைமுடியைத் தொடும் போது, ​​உங்கள் கைகளில் இருந்து வியர்வை மற்றும் எண்ணெய் முடியில் சேரும். இதனால், கூந்தலும் சேதமடைவதுடன், சிகை அலங்காரமும் சேதமடைகிறது. எனவே, சிகை அலங்காரத்தை பராமரிக்க அடிக்கடி முடியைத் தொடுவதைத் தவிர்க்கவும்.


மேலும் படிக்க | உடல் அழற்சியா? வீக்கமா? தீர்மானிக்கும் உணவுகள் இவை... ஆரோக்கியமே நிம்மதி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ