Hair Style Tips For Women : முடி அழகாக இருந்தால் ஒருவரின் லுக்கே மாறிவிடும் என்பதால், எல்லோரும் ஹேர் ஸ்டைலுக்காக பிரத்யேகமாக நேரத்தை செலவிடுகின்றனர். குறிப்பாக, விரும்பும் ஸ்டைல் வேண்டும் என்பதற்காக ஹேர் ஹீட்டர் மூலம் ஹீட் செய்கின்றனர். உண்மையில் முடியை ஹீட் செய்தால் அவை சேதமடைந்துவிடும். பெண்கள், ஆண்கள் என எல்லோருக்கும் இது தெரியும். குறிப்பாக அடிக்கடி முடியை ஹீட் செய்யும் பெண்களுக்கு இது நன்றாகவே தெரியும் என்றாலும் அழகுக்காக அவர்களால் இதை செய்யாமல் இருக்க முடிவதில்லை. இருப்பினும், ஒரு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால் ஹேர் கர்லிங் அயர்ன் மற்றும் ஸ்ட்ரெய்னரை விட்டுவிட வேண்டிய அவசியம் இருக்காது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹேர் ஹீட்டரில் இருந்து முடியை பாதுகாப்பது எப்படி? 


முடியை ஹீட் செய்வதற்கு முன்பு ஹேர் கிரீம், ஸ்பிரே என ஏதாவது ஒன்றை பயன்படுத்துங்கள். மார்க்கெட்டில் இதற்காகவே பிரத்யேகமாக பல பிராண்டுகள் விற்பனையாகின்றன. அவற்றில் உங்களுக்கு உகந்த பிராண்டை தேர்வு செய்து அப்ளை செய்து கொள்ளுங்கள். முடியை பாதுகாக்க இதை மட்டும் செய்தால் போதுமா என்றால் இல்லை. நீங்கள் ஹேர் ஹீட்டரில் இருக்கும் வெப்பநிலையை கவனிக்க வேண்டும். மெல்லிய கூந்தலுக்கு, சுமார் 300°F (150°C) வெப்பநிலையும், தலைமுடி தடிமனாக இருந்தால், 350°F (175°C) வெப்பநிலையும் செட் செய்து கொள்ளலாம்.


மேலும் படிக்க | விளையாட்டு வீரர்கள் மட்டும் எப்படி ஒரே இரவில் 4 கிலோ எடையை குறைகின்றனர்?


இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் முடியை ஸ்டைலிங் செய்ய விரும்பும் பெண்கள் ஹேர் டிரையரை குறைந்த வேகத்தில் பயன்படுத்துவதே சிறந்தது. அந்த வேகத்தில் வைத்து நீங்கள் விரும்பும் கூந்தல் அமைப்பை பெறும் வரை அட்ஜெஸ் செய்து கொள்ளலாம். ஒருவேளை வேகமாக வைத்தால் முடி சேதமாவதுடன் கூந்தல் ஸ்டைலும் கிடைக்காமல் போகலாம். அடிக்கடி ஹேர் ஸ்டைலிங் செய்ய வேண்டியிருந்தாலும், உடனுக்குடன் முடியை ஹீட் செய்வதை தவிர்ப்பது நல்லது. இன்னும் சொல்லப்போனால் வாரத்துக்கு இரண்டு முறை ஹேர் ஹீட்டிங் செய்வது நல்லதும்கூட. இப்படி செய்யும்போது தலைமுடியின் ஈரப்பதத்தை பராமரிப்பது அவசியம். தலைமுடியின் ஈரப்பதம் பாதுகாக்க ஷியா பட்டர் போன்றவற்றை பயன்படுத்தலாம்.  இது முடியை மென்மையாகவும், ஈரப்பதத்துடனும் பாதுகாப்பாக வைத்திருக்கும். 


முடியை பத்திரமாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டும்?


நீங்கள் முடியை இறுக்கமாக கட்டுவதை தவிர்க்க வேண்டும். தலைமை முடியை மென்மையாக ஹேண்டில் செய்யுங்கள். முடியை பிடித்து இழுப்பது, கசக்குவது போன்றவற்றை செய்யாதீர்கள். மென்மையான பல் சீப்புகளை பயன்படுத்துங்கள். முடியின் வேர்களை பாதிக்கும் வகையில் அழுத்தம் கொடுத்து தலையை சீவ வேண்டாம், அழகான முடியை பெறுவதற்கு இதுபோன்ற அடிப்படை ஆரோக்கிய அம்சங்களை பின்பற்றுவது அவசியம் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.


மேலும் படிக்க | பேய் படங்களை விரும்பி பார்ப்பீர்களா? ‘இந்த’ மாதிரியான ஆளாக இருப்பீங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ