7th Pay Commission DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் தகவல் ஒன்று மத்திய அரசு தரப்பில் இருந்து வெளியாகியுள்ளது. மத்திய அரசு சமீபத்தில் அகவிலைப்படியை உயர்த்தியிருந்தது. இப்போது, அதாவது ஏப். 30 அன்று, ஊழியர்களின் கணக்கில் அதன் முழு தொகை வரப் போகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீங்களும் மத்திய அரசு பணியாளராக இருந்தால், ஏப்ரல் மாதத்தில் உங்கள் கணக்கில் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் முழுமையாக வரப் போகிறது. உயர்த்தப்பட்ட சம்பளத்தை அகவிலைப்படியுடன் இந்த மாதம் அரசு வழங்கும். 1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இதன் நேரடிப் பலனைப் பெறுவார்கள். இத்துடன், 3 மாத நிலுவைத் தொகையும் கிடைக்கும்.


அகவிலைப்படி உயர்வு


கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து, நுகர்வோர் விலை குறியீடு எண் சுமார் 132.3 ஐ எட்டியது. அதன் பிறகு அரசாங்கம் அகவிலைப்படியை 4 சதவீதம் அதிகரித்துள்ளது. மார்ச் 24 அன்று, அரசாங்கம் அகவிலைப்படியை 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தியது.


மேலும் படிக்க | அரசு ஊழியர்கள் அதிர்ச்சி... இந்த முறையும் ஏமாற்றம் தான்!


இதனால், ஒவ்வொரு மாதமும் 1200 ரூபாய் கூடுதலாகப் பெறுவீர்கள் என்று சொல்லப்படுகிறது. உயர்த்தப்பட்ட சம்பளத்துடன், இந்த ஊழியர்களுக்கு 3 மாத நிலுவைத் தொகையும் கிடைக்கும். உதாரணமாக, ஒரு மத்திய ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.30,000 என்றால், அவருடைய சம்பளம் ரூ.1200 உயர்த்தப்படும். இதனுடன், ஆண்டு அடிப்படையில் பார்த்தால், அவர்களின் மொத்த சம்பளம் ரூ.14,400 அதிகரிக்கும்.


இது தவிர, அமைச்சரவை செரூ, 1.20 லட்சம் பெறுவது எப்படி?யலாளர் அதிகாரிகள் குறித்து பார்த்தால், அவர்களின் சம்பளம் மாதம் 10,000 ரூபாய் அதிகரிக்கும். அமைச்சரவை செயலாளரின் அடிப்படை சம்பளம் மாதம் ரூ.2.50 லட்சமாகும். இதன்படி கணக்கிட்டால், அவரது சம்பளத்தில் ஆண்டு அடிப்படையில் சுமார் 1.20 லட்சம் உயர்வு இருக்கும்.


அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை அதிகரிக்கிறது


நாடு முழுவதும் பணவீக்க உயர்வுக்கு ஏற்ப ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை மத்திய அரசு மேம்படுத்துகிறது. இதனுடன், ஊழியர்களின் சம்பளமும் அதற்கேற்ப உயர்த்தப்படுகிறது. அரசாங்கம் அகவிலைப்படியை ஆண்டுக்கு இருமுறை உயர்த்துகிறது. இந்த பணம் அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. 


மேலும் படிக்க | Sukanya Samriddhi Yojana ஜாக்பாட் அப்டேட்: அதிகரிக்கும் நன்மைகள், 200% வருமானம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ