New Wage Code: புதிய ஊதியக் குறியீடு அமலுக்கு வந்த பிறகு, மாத சம்பளம் பெறும் ஊழியர்களின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் இருக்கும். இந்த ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதிய ஊதியக் குறியீடு (New Wage Code) அமல்படுத்தப்பட்ட பின்னர், ஊழியர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் ஊதியம் (take home salary) குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஊழியர்களின் அடிப்படை குறைந்தபட்ச சம்பளம் அதிகரிக்கக்கூடும் என்ற கருத்தும் உள்ளது.


அக்டோபர் 1 முதல் ஊழியர்கள் காணக்கூடும் மாற்றம் என்ன? 


புதிய ஊதியக் குறியீடு விதிகளின்படி, ஊழியர்களின் அடிப்படை சம்பளம் (Basic Salary) மொத்த சம்பளத்தில் அல்லது நிறுவனத்திற்கான செலவில் (CTC) 50% ஆக இருக்க வேண்டும். இதை விட குறைவாக இருக்கக்கூடாது. தற்போது, ​​பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை குறைவாக வைத்திருக்கின்றன. மேலும் கொடுப்பனவுகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.


ஆனால் புதிய ஊதியக் குறியீடு நடைமுறைப்படுத்தப்பட்டவுடன், தற்போதுள்ள முறை முற்றிலும் மாறும். நிறுவனங்கள் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை சி.டி.சி-யின் 50 சதவிகிதம் அல்லது அதற்கு மேலாக வைத்திருக்கக்கூடாது. மீதமுள்ள 50 சதவீதத்தில், ஊழியர்களால் பெறப்படும் அனைத்து கொடுப்பனவுகளும் வரும்.


ALSO READ: 7th Pay Commission: டி.ஏ உயர்வையடுத்து ஊழியர்களுக்கு கிடைத்த மற்றொரு பம்பர் பரிசு


அடிப்படை சம்பளத்தை ரூ .21,000 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை


இத்தகைய சூழ்நிலையில், பி.எஃப் மற்றும் கிராச்சுட்டியில் பணியாளர்களின் பங்களிப்பு அதிகரிக்கும். ஆனால் டேக் ஹோம் சம்பளம் குறையும். தொழிலாளர் குறியீட்டின் விதிகள் தொடர்பாக, ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தை ரூ .15000-லிருந்து ரூ .21000 ஆக உயர்த்த வேண்டும் என்று தொழிலாளர் சங்கங்கள் கோரியிருந்தன.


இப்படி நடந்தால், தனியார் நிறுவனங்களில் (Private Companies) பணிபுரியும் சம்பள வர்க்கத்தின் சம்பளம் அதிகரிக்கும். தற்போதுள்ள விதிகளின்படி, மாதத்திற்கு ரூ .15,000 க்கு மேல் சம்பாதிக்கும் ஊழியர்களுக்கு பி.எஃப் கட்டாயமில்லை. சம்பளம் ரூ .15,000 க்கு மேல் இருந்தால், சம்பளத்தில் முதலாளியும் ஊழியரும் அவர்கள் விருப்பப்படி பி.எஃப் இல் பங்களிப்பை அளிப்பார்கள். அதாவது அவர்கள் விரும்பினால் பங்களிப்பு அளிக்கலாம், விரும்பினால் அளிக்காமல் இருக்கலாம்.


புதிய ஊதியக் குறியீடு இந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அது ஒத்திவைக்கப்பட்டது. சில மாநிலங்கள் இதை செயல்படுத்த இன்னும் தயாராகவில்லை. ஆனால் இப்போது அதை அக்டோபரில் அரசு செயல்படுத்தக்கூடும்.


புதிய ஊதியக் குறியீடு செயல்படுத்தப்படும்போது, ​​ஊழியர்களின் சம்பள கட்டமைப்பில் பெரிய மாற்றம் இருக்கும். ஆகஸ்ட் 2019 அன்று நாடாளுமன்றம் மூன்று தொழிலாளர் குறியீடுகள், தொழில்துறை இணைப்புகள், வேலையின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் மற்றும் சமூக பாதுகாப்பு தொடர்பான விதிகளை மாற்றியது. இந்த விதிகள் செப்டம்பர் 2020 இல் நிறைவேற்றப்பட்டன.


ALSO READ: 7th pay commission தொடர்பான புதிய செய்திகள்! LTA காலக்கெடு நீட்டிப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR