சென்னையில் பேய் உலாவுவதாக கூறப்படும் இடங்கள்..இங்கு செல்கையில் உஷாராக இருக்கவும்..!
Haunted Places in Chennai: நம் சென்னை மாநகரின் சில இடங்களில் பேய் உலாவுவதாக கூறப்படுகிறது. அவை என்னென்ன இடங்கள் என்பது தெரியுமா
“சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது..” என்ற வசனத்தை கேட்டிருப்போம்..ஆனால் “சென்னை உங்களை பயம்முறுத்தவும் செய்யும்..” என்பதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தமிழகத்தின் முக்கியமான நகரங்களுக்குள் ஒன்றாக கருதப்படுவது, சென்னை. திருவல்லிக்கேணி, மைலாப்பூர், சைதாப்பேட்டை, பாரீஸ் போன்ற பல இடங்கள் அதன் சிறப்பம்சங்களால் பல சுற்றுலா பயணிகளின் கவனத்தினை ஈர்த்துள்ளன. ஆனால், இங்குள்ள சில இடங்களில் சில மர்மமான சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் அதனால் இது பேய் உலாவும் இடங்களாக கருதப்படுவதாகவும் கூறப்படுகிறது. அவை என்னென்ன இடங்கள் தெரியுமா?
மேலும் படிக்க | இது காதலா? காமமா? ரிலேஷன்ஷிப்பில் குழப்பத்தை தவிர்க்க..சில சிம்பிள் டிப்ஸ்..!
டி மாண்டி காலணி:
படம் இல்லங்க..உண்மையாகவே டி மாண்டி காலணி என்ற ஒரு இடம் சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டை என்ற இடத்தில் உள்ளது. படத்தில் கூறியது போல இந்த இடத்தை சுற்றி பேய் கதைகள் பல உலா வருகின்றன. இந்த இடம், கேட்பாரற்று கிடப்பதால் மிகவும் பழுதான நிலையில் பார்ப்பதற்கே பயங்கரமாக இருக்கும். அதுவும் இரவில்..கேட்கவா வேண்டும்? மேலும் இந்த இடத்திற்கு காவலராக நியமிக்கப்பட்டிருந்த ஒருவர் டியூட்டியில் சேர்ந்த அடுத்த நாளே பிணமாக கண்டெடுக்கப்பட்டார் என கூறப்படுகிறது. இரவில் நிழல் தெரிவதாகவும், அவ்வப்போது யாரும் இல்லாத வீட்டில் கதவுகள் தாழிடப்படும் சப்தங்கள் கேட்பதாகவும் இந்த இடத்திற்கு அருகில் வசிப்போர் கூறுகின்றனர்.
ப்ரோக்கன் ப்ரிட்ஜ்:
அடயாறுக்கு அருகே உள்ளது, இந்த மர்மாமான ப்ரோக்கன் ப்ரிட்ஜ். இதற்கு முடிவுறாத பாலம் என்ற மறுபெயரும் உண்டு. ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் பயன்பாட்டுக்காக கொண்டுவரப்பட்ட இந்த பாலம், 1977ஆம் ஆண்டில் விபத்து காரணமாக உடைந்து விட்டது. இந்த இடத்தில், பெண்களின் அழுகுரல் அல்லது அலரல் சத்தங்களும் அழுகுரல்கலும் இரவில் அடிக்கடி கேட்கும் என அடிக்கடி இந்த இடத்தில் மீன்பிடிக்கும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர். பல இளம் பெண்கள், ப்ரோக்க ப்ரிட்ஜில் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது இதற்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இங்கு சில வருடங்களுக்கு முன்னர் யாரென்றே அடையாளம் காணப்படாத நிலையில் பிணங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் சில தகவல்கள் உள்ளன.
பெசண்ட் அவென்யூ சாலை:
ஆள் அரவமில்லா சாலையில் அர்த்த ராத்திரியில் செல்ல, கண்டிப்பாக அனைவருக்கும் அல்லு விடும். அது போன்ற ஆளில்லா சாலைகளுள் ஒன்றுதான் பெசண்ட் அவென்யூ. சூர்ய ஒளியில் சாதரணமான சாலையாக தோன்றும் இது, இரவில் அமானுஷ்யத்தின் இருப்பிடமாக மாறுவதாக கூறப்படுகிறது. இரவில் இவ்வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகளை யாரோ தலையில் தட்டுவது போலவும், திடீரென்று யாரோ தங்களை வாகனத்தில் இருந்து தள்ளி விடுவதுபோலவும் உணர்வதாகவும் சில காவல் நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். இது கொஞ்சம் ரக்கட் ஆன பேய்தான் போல!
F2 கட்டடம்:
சென்னை விமான நிலையத்தில் இருந்து 15 கி.மீ தொலைவில் இந்த f2 கட்டடம் அமைந்துள்ளது. இந்த கட்டடத்தின் உரிமையாளரின் மகள் இந்த வீட்டிலே தற்கொலை செய்து இறந்துவிட்டதாகவும் இதனால் இதை சுற்றி அந்த பெண்ணின் ஆவி உலாவி வருவதாகவும் சுற்றத்தாரால் நம்பப்படுகிறது. இந்த வீட்டை கடந்து செல்லும் போது, செல்போன் சிக்னல் துண்டிக்கப்படுவதாகவும், ஜன்னலில் இருந்து ஒரு பெணின் அழுகுரல் கேட்பதாகவும் கூறப்படுகிறது.
விப்ரோ:
பிரபலமான ஐ.டி நிறுவனங்களுள் ஒன்று, விப்ரோ டெக்னாலஜீஸ். 80களில் சுடுகாடாக இருந்த இடத்தில்தான் தற்போது இந்த நிறுவனம் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இங்கே காவலுக்கு இருப்பவர்கள் அடிக்கடி இரவில் ஏதோ ஒரு உருவம் உலா வருவதாகவும் இதையடுத்து அதை பார்த்தவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும் கூறப்படுகிறது.
கரிக்காட்டுக்குப்பம்:
2004ஆழிப்பேரலையின் போது பல உயிர்கள் மாய்ந்தன. அதில், கடலை ஒட்டிய பகுதியான கரிக்காட்டுக்குப்பத்தில் இருந்தவர்கள் பலர் இறந்தனர். இப்போது, இந்த இடத்தில் பல கோயில்களும் சில வீடுகளும் மட்டுமே உள்ளன. இந்த பகுதியில் உள்ள கோயிலுக்கு அதிகாலையில் சென்றவர்கள் தரையில் ரத்த துளிகளை கண்டதாகவும் ஆனால் அவை யாருடையது என அடையாளம் காணமுடியவில்லை என்றும் கூறுகின்றனர்.
*மேற்கண்ட இடங்கள் யாவும் தரவுகளையும் தகவல்களையும் அடிப்படையாக வைத்து எழுதப்பட்டவை. இவை உண்மை என்பதற்கோ, இந்த இடங்களில் பேய்கள் உலா வருகிறது என்பதற்கோ எந்த விதமான ஆதாரங்களும் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை. இங்கு பயணித்தவர்கள் கூறியவை மற்றும் இந்த இடங்களில் வாழும் மக்களின் கூற்றை வைத்தே இந்த செய்தி எழுதப்பட்டுள்ளது. இதுகுறித்து எழும் பிரச்சனைகளுக்கு நிர்வாகம் பொருப்பேற்காது*
மேலும் படிக்க | இந்த 6 ராசிக்காரர்களுக்கு காதலே கைகூடாது..! யார் அந்த ராசியே இல்லாத ராசிக்காரர்கள்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ