அந்தரத்தில் புதுமாப்பிள்ளை; முதலிரவு அறையில் புதுப்பெண் கதறல்

முதலிரவில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Written by - ZEE Bureau | Last Updated : Sep 10, 2021, 11:08 AM IST
அந்தரத்தில் புதுமாப்பிள்ளை; முதலிரவு அறையில் புதுப்பெண் கதறல்

சென்னை ஆவடி அருகே இருக்கும் திருமுல்லைவாயல் ஒரு அதிர்ச்சி சம்பவம் நேர்ந்துள்ளது. அப்பகுதியில் புதுப்மாப்பிள்ளை தூக்கில் தொங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு (Chengalpattu) மாவட்டம் மதுராந்தகம் அருகே இருக்கும் பாலம்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் கதிர் அறுக்கும் டிரைவராக வேலை செய்து வந்தார். கார்த்திகேயனுக்கும், திருமுல்லைவாயல் எஸ். வி. டி நகரில் வசிக்கும் அவரின் அத்தை மகள் நந்தினிக்கும் நேற்று முன்தினம் செங்கல்பட்டில் திருமணம் (Marriage) நடைபெற்றது.

ALSO READ | மீண்டும் ஒரு இளம்பெண்ணின் உயிரை பறித்த வரதட்சணை கொடுமை!

இவர்களுக்கு திருமணம் முடிந்த பின்னர் பெண் வீட்டிற்கு புதுமண தம்பதிகளை அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கு நேற்று முன்தினம் இரவு முதல் இரவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அப்போது முதலிரவு அறையில் புதுமண தம்பதிகள் இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்திருக்கின்றனர். 

பின்னர் அதிகாலை 3:00 மணி அளவில் பாதி தூக்கத்தில் கண்விழித்து பார்த்த புதுமணப்பெண் திடுக்கிட்டு அறையை சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு பார்த்த போது தலைக்கு மேலே கால்கள் தொங்குவதை கண்டு அதிர்ந்து போய் அண்ணாந்து பார்த்து இருக்கிறார்.

கார்த்திகேயன் தூக்கிட்டு சடலமாக தொங்கிக் கொண்டிருந்திருக்கிறார். இதைப்பார்த்ததும் கதறி அழுதிருக்கிறார். நந்தினியின் அலறல் சத்தத்தைக் கேட்டு உறவினர்கள் ஓடிவந்து பார்த்தபோது அவர்களும் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதிருக்கிறார்கள்.

விவரம் அறிந்த திருமுல்லைவாயல் போலீசார் தூக்கில் தொங்கி கொண்டிருந்த கார்த்திகேயன் சடலத்தை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். புது மாப்பிள்ளை கார்த்திகேயன் முதலிரவு அறையிலேயே தற்கொலை செய்து கொள்வதற்கு என்ன காரணம் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல் நாள் திருமண சந்தோசம் மறுநாள் துக்க வீடாக மாறியதில் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ALSO READ | Live-in relationship சட்டவிரோதமானது என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

More Stories

Trending News