Healthy Habits : மனிதராக பிறந்து விட்ட நம் அனைவருக்குமே வாழ்வில் குறிக்கோள் என்ற ஏதேனும் ஒன்று இருக்கும். வாழ்வில் சாதித்து, முன்னேறியிருப்பவர்களை பார்க்கையில், நமக்கும் அப்படிப்பட்ட ஒரு நபராக மாற வேண்டும் எனும் எண்ணம் மேலோங்கும். அப்படி, வாழ்வில் வெற்றி பெற்றவர்கள், தினசரி கடைப்பிடிக்கும் 7 பழக்க வழக்கங்கள் குறித்து இங்கு பார்க்கலாமா?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குறிக்கோளை நியமித்தல்:


நீங்கள் நினைப்பது போல, பெரிய குறிக்கோள் அல்ல. சிறியதாக, ஒரு நாளைக்குள் செய்து முடிக்க வேண்டிய குறிக்கோள்களை முதலில் நியமிக்க வேண்டும். முதலில் அவற்றை எழுதி வைத்து, அதை அந்த நாளில் முடிக்க முடிகிறதா என்று பார்க்க வேண்டும். அப்படி முடிந்தால் உங்களுக்கு தேவையான அடுத்தக்கட்ட குறிக்கோளை நியமிக்கலாம். 


நேர மேலாண்மை:


நேரம் என்பது, வெற்றியை நோக்கி ஓடும் நபர்களுக்கு இன்றியமையாததாகும். இவர்கள், எது முதன்மையான வேலை, எது தேவையற்ற வேலை என்று பிரித்து அறிந்து அதற்கு ஏற்றவாறு தங்களின் நேரத்தை நியமித்துக்கொள்வர். தங்களின் நேரத்தை வீணடிக்கும் எந்த வேலையையும் இவர்கள் விரும்ப மாட்டார்கள். 


கற்றல் திறன்:


வெற்றியாளர்கள் புதுப்புது விஷயங்களை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என முயற்சிபர். இவர்களுக்கு தங்களிடம் இருக்கும் திறனை தாண்டி இன்னும் பல திறன்களை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். இந்த கற்றல் திறனால் அவர்கள் மேம்படுவதோடு மட்டுமன்றி அவர்களின் வாழ்வும் பெரிய அளவில் மேம்படும். 


விடாமுயற்சி:


வாழ்வு, எப்போதும் நமக்கு தங்க தட்டில் தாம்பூலத்தை எடுத்து வந்து தராது என பலர் கூற கேட்டிருப்போம். அனைவருக்கும் வாழ்வில் ஏற்றத்தாழ்வுகள் என்பது வரும். வெற்றியாளர்களுக்கும் அப்படி சில தருணங்கள் வரலாம். ஆனால், என்ன நடந்தாலும் என் இலக்கில் இருந்து தவற மாட்டேன் என்ற மன உறுதியுடன் இருப்பவர்கள் இது போன்ற சின்ன சின்ன இடர்களால் மனம் தளராமல் விடாமுயற்சியை மேற்கொள்வார்கள். 


நெட்வொர்க்கிங்:


வெற்றியாளர்கள், தங்களுக்கென தனியாக ஒரு நண்பர்கள் கூட்டத்தை வைத்திருந்தாலும் தன்னுடன் ஒத்துப்போகும், தன்னை போல யோசிக்கும் நபர்களின் உறவுகளையும் கைவிடமாட்டார்கள். தொழில்ரீதியாக, அலுவல் ரீதியாக பிறருடன் இருக்கும் தனது உறவை மேம்படுத்தி, நெட்வர்க்கிங்கை பெருக்கி கொள்வர். 


மேலும் படிக்க | வெற்றி பெற்ற தொழிலதிபர்களின் 9 தினசரி பழக்க வழக்கங்கள் இதுதான்..!


உடல் மற்றும் மன நலன்:


வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என நினைப்பவர்களுக்கு, தான் நன்றாக இருதால்தான் தன்னை சுற்றி இருப்பவர்களை நன்றாக பார்க்க முடியும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும். இதனாலேயே, தனது உடல் மற்றும் மனநலனில் அதிக கவனம் செலுத்தி, தன்னை தானே நன்றாக பார்த்துக்கொள்வர். 


தொண்டு:


பெரிதாக சாதிக்க நினைப்பவர்களுக்கு பணம் மட்டும் ஒற்றை குறிக்கோளாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தான் சம்பாதித்ததை, தனக்கு கிடைத்ததை தேவைப்படுபவர்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பது இவர்களின் எண்ணமாக இருக்கும். 


தியானம்:


தினசரி தியானம் செய்வது நமது மன நலனை மேம்படுத்த உதவும். ஒரு குறிக்கோளை நோக்கி பயணிக்கும் போது அது ஏற்கனவே உங்களுக்கு கிடைத்தது போலவும், அதனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பது போலவும் நினைத்து பார்க்க வேண்டும். இதனால், அந்த விஷயம் உங்களுக்கு கிடைப்பதோடு மட்டுமன்றி அதை நோக்கி ஓடுவதற்கு இது உங்களுக்கு பெரிய உந்துதலாகவும் இருக்கும். 


மேலும் படிக்க | நீங்கள் காதலில் விழுந்து விட்டீர்களா? ‘இந்த’ 8 அறிகுறிகள் இருக்கான்னு பாருங்க!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ