ஏசியில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருந்தால் இந்த பாதிப்புகள் வரலாம்!

AC Side Effects: தினசரி ஏசியில் அதிக நேரம் இருந்தால் வறண்ட சருமம் முதல் பல தோல் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். ஏசியில் அதிக நேரம் இருந்தால் என்ன என்ன பாதிப்புகள் வரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

 

1 /7

தற்போது கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில் ஏசி அறையில் இருப்பது வெப்பத்தில் இருந்து தற்காத்து கொள்ள உதவுகிறது. ஆனால் நீண்ட நேரம் ஏசியில் இருப்பது ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம்.   

2 /7

நீண்ட நேரம் ஏசி பயன்படுத்தப்படும் இடங்களில் குறைந்த ஈரப்பதம் இருக்கும், இது தோல் மற்றும் கண்களில் வறட்சி மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும்.   

3 /7

ஏசியில் இருந்து வரும் காற்று சிலருக்கு சுவாச மண்டலத்தை எரிச்சலூட்டும். இதனால் ஆஸ்துமா, ஒவ்வாமை மற்றும் சுவாச தொற்று போன்ற நிலைமைகளை மோசமாக்கும். மேலும் காய்ச்சல் ஏற்படும் அபாயமும் உள்ளது.   

4 /7

நீண்ட நேரம் ஏசியில் இருந்தால் உடல் வெப்பநிலை குறைவதற்கு வாய்ப்புள்ளது. இது தசைப்பிடிப்பு, மூட்டு விறைப்பு மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.  

5 /7

ஏசியில் இருந்து வரும் கூலிங் காற்றை நீண்ட நேரம் சுவாசித்தால் நோயெதிர்ப்பு மண்டலத்தில் பாதிப்புகள் வரலாம். இதனால் தொற்றுநோய்களுக்கு ஆளாக வாய்ப்புள்ளது.   

6 /7

ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்தை பராமரிக்க, நீண்ட நேரம் ஏசியில் இருப்பதை தவிர்க்கவும். அடிக்கடி ஏசி ஏசியை விட்டு வெளியே செல்வது நல்லது.  

7 /7

ஏசி அறைகளில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பது மந்தமான நிலையை ஏற்படுத்தி, உடலை சோம்பேறி ஆக்குகிறது.