ஃபாஸ்டேக் முறையை ரத்து செய்து புதிய கட்டண வசூல் முறையை கொண்டு வர அரசு தயாராகி வருகிறது, இதன்மூலம் அதிகப்படியான சுங்கச்சாவடி கட்டணத்திலிருந்து வாகன ஓட்டிகள் தப்பிக்கலாம்.  அரசு தற்போது மேற்கொள்ளப்போகும் நடவடிக்கையின் மூலம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் விரைவுச்சாலையில் வாகனங்கள் கார் எத்தனை கிலோமீட்டர்கள் ஓடுகிறதோ அதற்கான கட்டணத்தை மட்டுமே நீங்கள் செலுத்தினால் போதும்.  கிலோமீட்டர்களுக்கு தகுந்தாற் போல கட்டணம் வசூலிக்கும் முறையானது ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, ரஷ்யா போன்றவற்றில் வெற்றிகரமாக செயலில் இருந்து வருகிறது, இதன் காரணமாக இந்தியாவிலும் இதே செயல்முறையை நடைமுறைப்படுத்த அரசு எண்ணியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இந்த 2 ரூபாய் நாணயம் உங்களிடம் இருந்தால், நீங்களும் லட்சாதிபதி ஆகலாம்



இப்போது சுங்கச்சாவடியில் எப்படி கட்டணம் செலுத்துகிறோம் என்றால், ​​ஒரு சுங்கச்சாவடியில் இருந்து மற்றொரு சுங்கச்சாவடிக்கு செல்லும் தூரம் முழுவதும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  இப்போது நீங்கள் முழுமையான தூரம் செல்லாமல் இடையிலேயே நின்றாலும் நீங்கள் முழுமையான கட்டணத்தை செலுத்த வேண்டும்.  ஆனால் இப்போது அரசு நடைமுறைப்படுத்தவிருக்கும் திட்டத்தின் மூலம் நெடுஞ்சாலையில் உங்களது வாகனம் எத்தனை கிலோமீட்டர் தூரம் செல்கிறதோ அந்த தூரத்திற்கு ஏற்ப மட்டும் நீங்கள் கட்டணம் செலுத்தினால் போதுமானது.



ஜெர்மனியில் உள்ள அனைத்து வாகனங்களிலும் கிட்டத்தட்ட 98.8 சதவீதம் வாகனங்களிலும்  செயற்கைக்கோள் வழிசெலுத்தல் அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது, சுங்கச்சாவடியில் வாகனம் நுழைந்தவுடன் வரி கணக்கீடு தொடங்கப்படுகிறது.  தற்போது, ​​இந்தியாவில் 97 சதவீத வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் மூலம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது, இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படும் முன்னர் போக்குவரத்து கொள்கையிலும் சில மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியமான ஒன்றாகும்.


மேலும் படிக்க | இந்த தொகை வரை UPI இல் RuPay கிரெடிட் கார்டு பயன்படுத்துவதற்கு கட்டணம் இல்லை 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ