சொத்து சம்மந்தமாக சில சட்ட விதிகள் உள்ளது, அதன்படி ஒரு வீட்டில் 12 ஆண்டுகள் தொடர்ந்து வாழ்ந்த பிறகு, அந்த குத்தகைதாரர் அந்த சொத்தின் மீது உரிமை கோரலாம்.  பல பெரும் நகரங்களில், பெரிய வீட்டினை கொண்ட மக்கள் பலரும், தங்கள் வீட்டின் காலி அறையை அல்லது வீட்டின் பாதி போர்ஷனை அல்லது முழு வீட்டையும் யாருக்காவது வாடகைக்கு கொடுப்பார்கள்.  இவ்வாறு வீட்டை வாடகைக்கு கொடுப்பதனால் அவர்களின் வருமானம் பெருகும்.  டெல்லி-மும்பை போன்ற பெருநகரங்களில் ஒரு வீட்டை வாங்குவது என்பது சாதாரணமானது அல்லது, இதுபோன்ற பெருநகரங்களில் சொத்துக்களை வாங்குவது மிகவும் விலை உயர்ந்தது.  மற்ற நகரங்களை விடவும் இதுபோன்ற பெரு நகரங்களில் உள்ள வீடுகளின் வாடகைக்கு அதிகமாக இருக்கும்.  இருப்பினும் வெளிநாடுகளில் வசிக்கும் பலர் தங்கள் நகரங்களில் வீடுகளை வாடகைக்கு கொடுத்துவிட்டு அதனை பற்றி பெரிதாக கவனிப்பதில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Old Pension Scheme முக்கிய செய்தி: வெளியானது படிவம்: இதுதான் கடைசி தேதி


பாதகமான உடைமைச் சட்டம் அதாவது சட்டவிரோதமான நில ஆக்கிரமிப்புச் சட்டம் ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்டது.  12 ஆண்டு கால சட்டம் அரசு சொத்துகளுக்கு பொருந்தாது, இது மிகவும் பழைய சட்டத்தின் கீழ் செய்யப்படுகிறது.  இதனால் பல நேரங்களில் உரிமையாளர்கள் தங்கள் சொத்துக்களை இழக்க நேரிடுகிறது.  ஒரு வீட்டில் நீண்ட காலமாக வாடகைக்கு வசிப்பவர்கள் இதுபோன்ற உரிமைகளை கோரா நேரிடும் என்பதால் வீட்டின் சொந்த உரிமையாளர்கள் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டியது அவசியம்.  வீட்டின் உரிமையாளர் வீட்டை வாடகைக்குக் கொடுக்கப் போகிறீர்கள் என்றால், கண்டிப்பாக வாடகை ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.  இந்த வாடகை ஒப்பந்தம் 11 மாதங்களுக்கு செய்யப்பட வேண்டும் மற்றும் ஒவ்வொரு 11 மாதங்களுக்கும் இந்த ஒப்பந்தத்தை நீங்கள் புதுப்பிக்க வேண்டும்.  அடுத்ததாக குத்தகைதாரரை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.  


மேலும் வாடகைக்கு இருப்பவர் உங்கள் சொத்தில் சட்டவிரோதமாக எவ்வித ஆக்கிரமிப்பும் செய்யப்படவில்லை என்பதை நீங்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம்.  உங்கள் வீட்டில் வாடகைக்கு இருக்கும் நபர்கள் உங்கள் சொத்தை ஆக்கிரமிக்க முயற்சி செய்வதாக நீங்கள் உணர்ந்தாள், உடனே அவர்களை காலி செய்ய என்ன முறை என்பதை நீங்கள் பார்க்க வேண்டும்.  வாடகைதாரர் வாடகை செலுத்தவில்லை என்றால், அவரது மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பை துண்டிக்க கூடாது.  அத்தகைய சூழ்நிலையில், அவர் தனது தொடர்பை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளலாம்.  குத்தகைதாரரை உங்கள் சொத்தை விட்டு வெளியேற்ற அதுதொடர்பான நோட்டீஸ்களை நீங்கள் அவருக்கு தொடர்ந்து அனுப்பலாம்.  நோட்டீஸ் கிடைத்தும், அவரை வீட்டை காலி செய்யவில்லை என்றால், சிவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.  அதன் பிறகு நீங்கள் சட்டப்பூர்வமாக வீட்டைக் காலி செய்யும் உரிமையைப் பெறுவீர்கள்.  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 103 ஐபிசியின் கீழ், உங்கள் வீட்டில் வாடகைக்கு இருப்பவர் உங்கள் வீட்டை ஆக்கிரமித்திருந்தால், அவரை வெளியேற்றுவதற்கு நீங்கள் சட்டப்படி உதவியை பெறலாம்.


மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு ஆபர்களை அள்ளி வழங்கும் வங்கிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ