தீபாவளிக்கு தட்கல் டிக்கெட்டுகளை உறுதிசெய்வது எப்படி?
ஏசி பெட்டிக்கான முன்பதிவு காலை 10:00 மணிக்கும், ஏசி அல்லாத பெட்டிகளுக்கான தட்கல் முன்பதிவு காலை 11.00 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் வெளியூர்களில் தங்கி வேலை பார்க்கும் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்தினருடன் பண்டிகையை கொண்டாட விரும்புவார்கள். பெரும்பாலான மக்கள் ரயில்வழி போக்குவரத்தையே பெரிதும் தேர்ந்தெடுக்கின்றனர், பண்டிகை காலம் நெருங்கி விட்டதால் இனிவரும் தினங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என இந்திய ரயில்வே கணித்துள்ளது மற்றும் உடனடி பயணத்திற்கு தட்கல் டிக்கெட் பெற விரும்பும் பயணிகளுக்காக தட்கல் முறையை தொடங்கியுள்ளது.
தட்கல் டிக்கெட் பெற விரும்பும் பயணிகள் அவர்களது பயணத்திற்கு ஒரு நாள் முன்னதாகவே ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துவிடுவார்கள். 3எஸ்சி வகுப்பிற்கான தட்கல் முன்பதிவு காலை 10:00 மணிக்கும் , ஸ்லீப்பருக்கான தட்கல் முன்பதிவு காலை 11:00 மணிக்கும் தொடங்கும், ஆன்லைனிலும் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ஏசி பெட்டிக்கான முன்பதிவு காலை 10:00 மணிக்கும், ஏசி அல்லாத பெட்டிகளுக்கான தட்கல் முன்பதிவு காலை 11.00 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது தட்கல் டிக்கெட்டுகளை உறுதிசெய்வது எப்படி என்பது பற்றி காண்போம்.
மேலும் படிக்க | ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தீபாவளி பரிசு, அரசு தொடங்கிய சிறப்பு திட்டம்
- தட்கல் டிக்கெட்டுகள் சீக்கிரமே முடிந்துவிடும், இந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முயற்சிப்பவர்கள் பயணிகளின் தகவல், பயண விவரங்கள், போன்ற அனைத்து தொடர்புடைய தகவல்களையும் தயாராக வைத்து அப்டேட் செய்ய வேண்டும்.
- ஐஆர்சிடிசி இணையதள பக்கத்திற்கு சென்று ப்ரொபைல் பகுதிக்கு சென்று, பயணிகளின் விவரங்கள் கொண்ட மாஸ்டர் லிஸ்டை உருவாக்க வேண்டும். தட்கல் டிக்கெட்டை நீங்கள் வாங்க விரும்பினால், தனி ' பயணப் பட்டியலை உருவாக்க வேண்டும்.
- ஸ்டேஷன் கோட்கள், ரயில் சென்றடையும் நிலையங்கள் என அனைத்தையும் தட்கல் முன்பதிவை செய்வதற்கு முன் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
- பெரும்பாலான நேரங்களில் லோயர் பெர்த்கள் கிடைப்பது கடினமாக இருக்கும், அதனால் பெர்த் ஆப்ஷன்கள் எதுவுமின்றி தட்கல் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வது எளிதானது.
மேலும் படிக்க | தாம்பரம் to திருநெல்வேலி; தீபாவளி சிறப்பு ரயில் முன்பதிவு தொடங்கியது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ