இனி தத்கல் ரயில் டிக்கெட்டுகள் விரைவாக பதிவு செய்வது எப்படி?

ஐஆர்சிடிசி விதித்துள்ள நிபந்தனைகள் மூலம் இனிமேல் ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்தால் காலதாமதம் ஆகாமல் உடனடியாக உங்கள் வங்கி கணக்கில் பணம் வந்துவிடும்.
ரயிலில் பயணம் செய்பவர்கள் ஏதேனும் காரணத்தால் ரயில் டிக்கெட் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது ரத்து செய்யப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலோ டிக்கெட்டுக்கான பணத்தைத் திரும்பப் பெற நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும். ஆனால் இப்போது அவ்வாறு நீங்கள் நெடுநேரம் காத்திருக்க வேண்டிய தேவையில்லை, இப்போது ரயில்வே நிர்வாகம் நீங்கள் ரத்து செய்த டிக்கெட்டுக்கான பணத்தை உடனடியாக நீங்கள் திரும்ப பெறுவதற்கான சேவையை வழங்குகிறது. ஐஆர்சிடிசி ஆனது இப்போது ஐஆர்சிடிசி-ஐபே என்கிற பெயரில் சொந்த பேமெண்ட் அம்சத்தை அறிமுகப்படுத்தியது, இந்த சேவை ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் உங்களுக்கு நேரம் அதிகம் மிச்சமாகிறது, மேலும் டிக்கெட் ரத்து செய்யப்பட்டவுடன், அதன் ரீஃபண்ட் உடனடியாக உங்கள் வங்கி கணக்கில் வந்து சேர்ந்துவிடும்.
மேலும் படிக்க | சென்னை மெட்ரோ ரயிலில் பணிபுரிய வேலைவாய்ப்பு!
ஐஆர்சிடிசி-ஐபே-லிருந்து ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான வழிமுறைகளை இங்கே காண்போம். ஐபே மூலம் முன்பதிவு செய்ய, முதலில் www.irctc.co.in இல் உள்நுழையவும். அடுத்ததாக நீங்கள் மேற்கொள்ளும் பயணம் தொடர்பான இடம் மற்றும் தேதி போன்ற விவரங்களை நிரப்பவும், அதன் பின்னர் நீங்கள் பயணிக்க ஏற்ற ரயிலை தேர்ந்தெடுக்கவும். டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போது, பேமெண்ட் முறையில் 'ஐஆர்சிடிசி ஐபே' என்கிற ஆப்ஷனை காணலாம். அந்த ஆப்ஷனை தேர்வு செய்து, 'பே அண்ட் புக்' என்பதை க்ளிக் செய்யவும், இப்போது பணம் செலுத்துவதற்கான கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது யூபிஐ விவரங்களை நிரப்பவும். பின்னர் உங்களுக்கான டிக்கெட் முன்பதிவு செய்யப்படும், அதன் உறுதிப்படுத்தல் உங்களுக்கு மெசேஜ் அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.
மேலும் அடுத்த தடவை நீங்கள் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பேமெண்ட் விவரங்களை மீண்டும் நிரப்ப வேண்டியதில்லை, உடனடியாக பணம் செலுத்தி டிக்கெட்டுகளை மட்டும் முன்பதிவு செய்துகொள்ளலாம். ஐஆர்சிடிசி அதிகாரிகள் கூறுகையில், முன்னர் நிறுவனத்திற்கு சொந்த பேமெண்ட் எதுவும் இல்லை, அதற்கு மாற்றாக வேறொரு பேமெண்ட் வசதியை பயன்படுத்த வேண்டியிருந்தது. அதேபோல திக நேரமும் செலவானது, இனிமேல் நேரமும் மிச்சமாகும், பணம் அக்கவுண்டிற்கு வர நேரமும் ஆகும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க | Indian Railways: அப்பாடா, இனி டிக்கெட் முன்பதிவின் போது இதை செய்ய வேண்டாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR