இனி ஆதாரில் திருத்தம் செய்ய எங்கும் அலைய வேண்டாம்! வந்தது புதிய வசதி!
ஆதார் அட்டைகளில் பெயர், பிறந்த தேதி, முகவரி, போன்ற எதையாவது திருத்தம் செய்ய வேண்டுமானால் வங்கிகளுக்கோ அல்லது தலைமை தபால் நிலையங்களுக்கோ தான் செல்ல வேண்டிய தேவையில்லை.
இந்திய குடிமகன்களாகிய ஒவ்வொருவருக்கும் வாக்களர் அட்டை எப்படி முக்கியமாக இருந்ததோ அதுபோன்று தற்போது ஒவ்வொருவருக்கும் ஆதார் அட்டை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை கூட 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் தான் உள்ளது, ஆனால் ஆதார் அட்டை 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கும் கொடுக்கப்படுகிறது. அப்படி இவ்வளவு முக்கியம் வாய்ந்ததாக கருதப்படும் ஆதார் அட்டையில் ஏதேனும் சிறு தவறு நேர்ந்தால் கூட அது பாதகமாகிவிடும், அதேசமயம் ஆதார் அட்டையில் ஏதேனும் பிழை இருப்பின் அதனை திருத்தம் செய்வது குறித்து அச்சப்படவேண்டிய தேவையில்லை. ஆதார் அட்டையில் திருத்தத்தங்களை மேற்கொள்ள அரசு பல்வேறு வழிவகைகளை செய்திருக்கிறது.
இதுவரை நாம் ஆதார் அட்டைகளில் பெயர், பிறந்த தேதி, முகவரி, போன்ற எதையாவது திருத்தம் செய்ய வேண்டுமானால் வங்கிகளுக்கோ அல்லது தலைமை தபால் நிலையங்களுக்கோ தான் செல்ல வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது நீங்கள் அப்படி வெளியில் அலைய வேண்டிய தேவையில்லை, ஆதார் அட்டையில் திருத்தம் மேற்கொள்ள உங்கள் ஊரிலேயே இருக்கும் தபால் நிலையத்தின் கிளைகளுக்கு சென்றே மாற்றி கொள்ளமுடியும். தற்போது தபால் துறை கிராமின் தாக் சேவாக்களிடம் டிரான்ஸாக்ஷன் செய்வது உள்ளிட்ட பல சேவைகளுக்கான அணுகலை வழங்கியுள்ளது, அதனால் நீங்கள் எதற்காகவும் வெளியில் அலையவேண்டியதில்லை, இதனால் உங்களது நேரமும் மிச்சப்படும்.
மேலும் படிக்க | சேமிப்பு கணக்கை NRE கணக்காக மாற்ற முடியுமா? NRI, NRE, NRO-வித்தியாசம் என்ன?
தபால் துறை தற்போது கிராமங்களில் செயல்பட்டு வரும் அஞ்சல் அலுவலர்களை டிஜிட்டல் மயமாக்கி பல்வேறு சேவைகளை வழங்க வழிவகை செய்துள்ளது. இங்கு கிராம மக்கள் ஆர்டி டெபாசிட், சுகன்யா சம்ரித்தி யோஜனா செபாசிட் போன்ற பல சேமிப்பு திட்டங்களில் பணத்தை டெபாசிட் செய்துகொள்ளவும், ஜிடிஎஸ் மூலம் ஆதார் அட்டையை பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. முதற்கட்டமாக 130 தபால் நிலையங்களில் மட்டுமே இந்த வசதி கிடைத்துள்ளது, இரண்டாம் கட்டமாக மீதமுள்ள தபால் நிலையங்களிலும் இந்த வசதி கிடைக்கும். இங்குள்ள வங்கிகளில் ஆதார் அட்டையில் எத்தகைய திருத்தம் செய்யவேண்டுமோ அதனை செய்துகொள்ளலாம் வேண்டுமென்றால் இங்கு புதிய ஆதார் கார்டையும் பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும் படிக்க | UPI விதிகளில் மாற்றம்? ஒருநாளில் எவ்வளவு தொகை டிரான்ஸாக்ஷன் செய்யலாம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ