டூத்பேஸ்ட் ஹேக்குகள் மூலம் பல நீக்க முடியாத கறைகளை பட்ஜெட் செலவில்லாமல் நீக்க முடியும். என்னது வீட்டில் இருக்கும் டூத்பேஸ்ட்கள் மூலம் கறைகளை நீக்க முடியுமா? அதுவும் வெள்ளி நகைகள் மற்றும் ஆடைகளில் இருக்கும் அழுக்குகளையா? என்ற கேள்வி பலருக்கும் எழலாம். சிலருக்கு இந்த டிப்ஸ் விந்தையாக கூட இருக்கும் நிலையில், அது எப்படி? என பார்க்கலாம்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டூத்பேஸ்ட்களின் ஹேக்குகள் : 


1. வெள்ளி நகைகளின் மீது இருக்கும் அழுக்குகளை நீக்கி, பளபளப்பாக்க வேண்டும் என நினைத்தால் ஒரு துளி பேஸ்ட் எடுத்து வெள்ளி நகை மீது முழுமையாக தடவிவிட வேண்டும். அழுக்கு இருக்கும் இடத்தில் லேசாக பிரஷைக் கொண்டு அழுத்தி தேய்க்கவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் வெள்ளி நகையை கழுவி உலர வைக்கவும். இப்போது பார்த்தீர்கள் என்றால் உங்களின் வெள்ளி நகை பிரகாசிக்கும். 


மேலும் படிக்க | இளசுகளை கவரும் புதுவகை உறவு... Open Marriage என்றால் என்ன? - முக்கிய சிக்கல்கள்


2. வீட்டில் குழந்தைகள் இருந்தால் நிச்சயம் சுவற்றில் க்ரேயன் கிறுக்கல்கள் எல்லாம் இருக்கும். அவர்கள் எல்லா இடத்திலும் கோலம் போட்டு வைத்திருப்பார்கள். அப்படியான இடத்தில் நீங்கள் பற்பசையை தடவி பின்னர் தேய்க்கவும். இதனையடுத்து ஈரத்துணியால் அந்த இடத்தை சுத்தம் செய்தால், சுவர் கிளீனாக இருக்கும்.


3. சில சமயங்களில் வீட்டில் இருக்கும் துணிகளில் இருக்கும் கறைகள் மிகவும் கடினமானவையாகவும், நீக்க முடியாதவையாகவும் இருக்கும். இதற்கு மார்க்கெட்டில் பல்வேறு சொலுயூசன்கள் இருக்கும் நிலையில், வீட்டில் இருக்கும் டூத்பேஸ்ட் வழியாகவே அவற்றை சரிசெய்துவிட முடியும். கறை இருக்கும் இடத்தில் துளியளவு டூத்பேஸ்ட் தடவி, பிரஷ் மூலம் தேய்க்கவும். இதன்பின்னர் சுத்தமான தண்ணீரில் அந்த துணியை நீங்கள் கழுவினால், கறை முழுவதுமாக நீங்கியிருக்கும்.  


4. வெள்ளை நரை முடியை மறைக்க நீங்கள் டை அடிப்பீர்கள். அப்போது அந்த டை உடலின் சில இடங்களில் பட்டுவிடும். அது உடனடியாக குளித்தால்கூட போகாது. அப்படியான சமயங்களில் டை படித்திருக்கும் இடங்களில் டூத்பேஸ்ட் எடுத்து கொஞ்சம் தடவி, தேய்க்கவும். பின்னர் தண்ணீரைக் கொண்டு கழுவும்போது அந்த டை அந்த இடத்தில் மறைந்துவிடும். 


5. ஹேர் டிரையர், டிரிம்மர் உள்ளிட்ட மெஷின்களை அடிக்கடி பயன்படுத்தும்போது அதில் அழுக்குகள், துரு படிமங்கள் படித்திருக்கும். இதனை எப்படி சுத்தம் செய்வது என நீங்கள் யோசித்துக் கொண்டிருந்தால், அதற்காகவே டூத்பேஸ்ட் ஹேக் இருக்கிறது. அதனை துளியளவு எடுத்து துருப்பு படிமங்கள் மற்றும் அழுக்குகள் இருக்கும் இடத்தில் தேய்க்கவும். பின்னர் கழுவினால் அந்த இடம் சுத்தமாக இருக்கும்.


மேலும் படிக்க | தொலை தூர காதலை வலுவாக்குவது எப்படி? ரிலேஷன்ஷிப் டிப்ஸ்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ