தண்ணீரில் பூரி சமைப்பது எப்படி? எண்ணெய் இனி வேண்டாம்..!
Puri Cooking Tips : பூரி சுடுவதற்கு எண்ணெய் லிட்டர் கணக்காக பயன்படுத்துகிறீர்கள் என்றால், இனி நீங்கள் தண்ணீரிலேயே பூரியை சுட்டு எடுக்கலாம்.
Cooking Tips Tamil : பூரியை பிடிக்காதவர்கள் இருப்பார்களா?. பொசுபொசுவென எண்ணையில் போட்டு எடுத்தவுடன் உருளைக் கிழங்கு மசாலாவுடன் சேர்த்து சூடாக சாப்பிடும்போது, அருகில் இருப்பவர்களின் நாவில் எச்சிலே ஊறிவிடும். அந்தளவுக்கு சுவையும், ஊட்டச்சத்து மிக்க பூரிக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருமே ரசிகர்கள் தான். பெரும்பாலான வீட்டில் குழந்தைகளுக்கு பிடித்தமான உணவு பூரி. அதனாலேயே சின்ன குழந்தைகள் இருக்கும் வீட்டில் அடிக்கடி பூரி சமைப்பார்கள். இது ஆரோக்கிய உணவு என்றாலும் எண்ணெய்யில் சமைத்து சாப்பிடுவதால் சில ஆரோக்கிய பிரச்சனைகளும் அவரவர் உடல்நிலையை பொறுத்து வரும்.
ஒருமுறை பூரியை சாப்பிட்டாலே பிரச்சனை வருமா என்றால் இல்லை. எண்ணெயில் சுடும் பூரியை அடிக்கடி சாப்பிடும்போது தான் ஆரோக்கிய பிரச்சனைகள் வரும். இதற்கு வேறு வழியே இல்லையா?, பூரியை எண்ணெயில் மட்டும் தான் சமைக்க முடியுமா? என்று கேட்டால் அதற்கான பதில் இல்லை. வெறும் தண்ணீரைக் கொண்டு கூட பூரியை சமைக்க முடியும். இதில் பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் உண்மை. பூரியை கொதிக்க வைத்த நீரில் போட்டு சுட்டால் எண்ணெயில் போட்டு எடுத்தால் எப்படி வருமோ, அதனைப் போலவே பொசுபெசுவென வரும்.
மேலும் படிக்க | வினேஷ் போகத் மட்டுமல்ல, பொதுவாகவே பெண்களுக்கு எடை சீக்கிரம் அதிகரிக்க காரணங்கள்..!
தண்ணீரில் பூரி சமைக்க டிப்ஸ்
மாவு பிசையும் முறை :
வழக்கமாக பூரிக்கு மாவு பிசையும்போது கோதுமை அல்லது மைதா மாவில் எண்ணெய் சேர்த்து, கொஞ்சம் தண்ணீரையும் சேர்த்து பிசைவோம். ஆனால், இவற்றுக்கு பதிலாக கேரட், வெண் பூசணி, தக்காளி, வெந்தயக்கீரை, பசலைக்கீரை, மணத்தக்காளி கீரை ஆகியவற்றின் ஏதேனும் ஒன்றின் சாறை எடுத்து கோதுமை மாவுடன் சேர்ந்து நன்கு பிசைய வேண்டும். அதோடு கெட்டி தேங்காய் பால் சேர்த்துக் கொள்ளுங்கள்.
தண்ணீரில் பூரி சமைக்கும் முறை :
பின்னர், பிசைந்த மாவை பூரிக்கட்டையில் வைத்து தேய்த்து வைத்துக் கொள்ள வேண்டும். தேய்கும்போது மைதாவை சேர்க்க வேண்டாம். இதன்பிறகு கடாயில் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் கொதிக்கிறது என்றவுடன் நீங்கள் தேய்த்து வைத்திருக்கும் மாவை ஜல்லிக்கரண்டியில் வைத்து கொதிக்கும் நீரில் இறக்கி பூரியை அப்படியே வேக வைக்க வேண்டும். மாவு கலக்கும்போது எந்த சாறை கலக்குகிறீர்களோ அந்த கலரில் தான் பூரி வரும். இப்போது ரெடியான பூரியை எடுத்து உங்களின் ருசிக்கு ஏற்ற கிரேவி, குழம்பு வைத்து சாப்பிடலாம்.
மேலும் படிக்க | 5 மாசத்துல உங்கள் வாழ்க்கை 5 வருஷம் முன்னாடி போய்டும்! ‘இதை’ பண்ணுங்க!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ