ஏசி இல்லையா? கவலை வேண்டாம்! இந்த வழிகளில் வீட்டை கூலிங்காக வைத்து கொள்ளலாம்!
தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பலரது வீடுகளிலும் ஏசியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஏசி இல்லாமல் வீட்டை எப்படி கூலிங்காக வைத்திருப்பது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
கோடை காலத்தில் பலரும் மின்வெட்டால் சிரமப்பட்டு வருகின்றனர். மறுபுறம், அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக மக்கள் நிறைய பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு அதிகமாக உள்ளது. பல மாவட்டங்களில் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளது. இப்படி தொடர்ந்து அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக பலரது வீடுகளில் ஏசி வாங்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது. ஆனாலும், அனைவராலும் ஏசி வாங்க முடியாது. இந்நிலையில், வீட்டில் ஏசி இல்லாவிட்டாலும் அறையை எப்படி குளிர்ச்சியாக வைத்திருப்பது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஏசி இல்லாமல் அறையை எப்படி குளிர்ச்சியாக வைத்திருப்பது என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். இதற்காக நீங்கள் அதிக பணத்தை செலவழிக்க வேண்டிய அவசியம் இல்லை. சில வழிகள் மூலம் வீட்டை குளிர்ச்சியாக மாற்றலாம். உங்கள் அறையின் எதிர் திசையில் உள்ள ஜன்னல்களை எப்போதும் திறந்து வைக்கவும். இதன் மூலம் புதிய காற்று வீட்டிற்கு உள்ளே வரும். இந்த நடைமுறை காற்று ஓட்டத்தை அதிகப்படுகிறது, மேலும் அறையில் உள்ள வெப்பமும் வெளியேறுகிறது. ஒரு பக்கத்திலிருந்து புதிய காற்று வரும் போது, மறுபுறம் வெப்பக் காற்று வெளியேறும்.
உங்கள் வீட்டு ஜன்னல் மற்றும் கதவுகளிலிருந்து சூரிய ஒளி காரணமாக அதிக வெப்பம் வீட்டிற்குள் வந்தால் அதனை தடுக்க வெளிர் நிற திரைச்சீலைகளைப் பயன்படுத்தவும். இதன் மூலம் அதிக வெப்பம் வீட்டிற்குள் வருவதை தடுக்க முடியும். மேலும், வீட்டிற்குள் உள்ள குளிர்ச்சி வெளியேறாமல் இருக்கும். வீட்டில் ஏர் கண்டிஷனர் இல்லை என்றால், டேபிள் பேன் முன்பு ஐஸ் கிண்ணத்தை வைப்பதன் மூலம் ஏர் கண்டிஷனரில் இருந்து வரும் கூலிங் காற்றை உருவாக்க முடியும். இது அறை முழுவதும் கூலிங் தருகிறது மற்றும் வெப்ப காற்றில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
வெயில் காலங்களில் டேபிள் பேன் அதிகம் பயன்படுத்தாமல் சீலிங் பேன் பயன்படுத்துவது நல்லது. இது உங்கள் அறையை குளிர்ச்சியாக வைத்திருக்கும். கோடைக்காலத்தில் உங்கள் சீலிங் ஃபேன் எதிர் கடிகார திசையில் சுழல்கிறது, எனவே காற்று ஓட்டம் கீழ்நோக்கி இருக்கும், இது காற்றை குளிர்விக்கிறது மற்றும் அறையை குளிர்ச்சியாக மாற்றும். மேலும் வீட்டு ஜன்னல்களுக்கு அருகில் செடிகளை வைப்பது நல்ல காற்றோட்டத்தை ஏற்படுத்தும். இது நேரடி சூரிய ஒளியை வீட்டிற்குள் வராமல் தடுக்கும். அதே போல வீட்டிற்கு வெளிபுறமும் நிறைய மரங்கள் மற்றும் செடிகளை நடவும், இதனால் நீங்கள் வெப்பத்தில் இருந்து விடுபடுவீர்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கும் நல்லது.
வெயில் காலத்தில் நாம் பயன்படுத்தும் உடைகளும் அதிக வெப்பத்திற்கு காரணமாக அமைகின்றன. பருத்தி மற்றும் கைத்தறி போன்ற துணிகள் உடலுக்கு மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். மதிய நேரத்தில் அடுப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், ஏனெனில் அவை வீட்டின் உட்புற வெப்பநிலையை கணிசமாக அதிகரிக்கும். சூரிய ஒளியை பிரதிபலிக்கும் வகையில் உங்கள் வீட்டு கூரையை வெள்ளை நிறத்தில் மாற்றுவது அல்லது பச்சை கூரையை நிறுவுவது அதிக வெப்பம் வீட்டிற்குள் வருவதை தடுக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ