இன்னும் ரூ.2000 நோட்டுகள் உங்களிடம் உள்ளதா? போஸ்ட் ஆபிஸ் மூலம் மாற்றலாம்!
Rs 2000 note: தபால் அலுவலகத்திலிருந்து ரிசர்வ் வங்கி அலுவலகத்திற்கு ரூ.2000 ரூபாய் நோட்டுகளை அனுப்பி நமது வங்கி கணக்கில் டெபாசிட் செய்து கொள்ளலாம்.
Rs 2000 note: உங்களிடம் இன்னும் 2,000 ரூபாய் நோட்டுகள் உள்ளதா? அவற்றை எப்படி வங்கிகளில் மாற்றுவது அல்லது வங்கிக்கு திருப்பி அனுப்புவது என்று யோசிக்கிறீர்களா? இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) படி, பொதுமக்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் 2000 ரூபாய் நோட்டை வரவு வைப்பதற்காக எந்தவொரு தபால் அலுவலகத்திலிருந்தும் அல்லது எந்தவொரு ஆர்பிஐ வெளியீட்டு அலுவலகத்திலிருந்தும் இந்திய அஞ்சல் வழியாக ரூ.2,000 ரூபாய் நோட்டுகளை அனுப்பலாம். மே 19, 2023 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, 2,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்தது. ஆரம்பத்தில், இந்த நோட்டுகளை வங்கிக் கிளைகளில் டெபாசிட் செய்யவும் அல்லது மாற்றுவதற்கும் செப்டம்பர் 30, 2023 வரை கால அவகாசம் இருந்தது, பின்னர் இந்த தேதி அக்டோபர் 7, 2023 வரை நீட்டிக்கப்பட்டது.
அக்டோபர் 9, 2023 முதல் பொதுமக்கள் வங்கிகளில் ரூபாய் நோட்டை மாற்ற முடியாது. ரிசர்வ் வங்கி வெளியீட்டு அலுவலகங்கள், கவுன்டர் எக்ஸ்சேஞ்ச் முறையில் தனிநபர் அல்லது நிறுவனங்கள் ரூ.2000 நோட்டுகளை தங்கள் வங்கி கணக்கில் டெபாசிட் செய்து கொள்ளலாம். ரிசர்வ் வங்கியின் இயக்குநர் ரோஹித் பி தாஸ் கூறுகையில், வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கில் 2000 ரூபாய் நோட்டுகளை வரவு வைக்க, அஞ்சல் சேவைகளை பயன்படுத்துமாறு ஊக்குவித்துள்ளார். மேலும், எந்த வங்கி கிளைகளிலும் மாற்ற முடியாது என்றும், தேவையில்லாமல் அலைய வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
தபால் அலுவலகம் மூலம் ரூ.2000 நோட்டுகளை எப்படி அனுப்புவது?
இந்திய தபால் மூலம் ரிசர்வ் வங்கி வெளியீட்டு அலுவலகங்களுக்கு ரூ.2000 ரூபாய் நோட்டுகளை அனுப்புவதற்கு சில முக்கியமான படிகள் தேவை. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் தேவையான ஆவணங்களை இந்தியா தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். தேவையான ஆவணங்களில் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம்/வாக்காளர் அடையாள அட்டை/பாஸ்போர்ட்/என்ஆர்இஜிஏ அட்டை/பான் கார்டு/அரசுத் துறை அல்லது பொதுத்துறை பிரிவால் வழங்கப்பட்ட அடையாள அட்டை ஆகியவை அடங்கும்.
மேலும், கணக்கு வைத்திருப்பவரின் பெயர், கணக்கு எண், கணக்கு வகை, வங்கி பெயர், கிளையின் பெயர் மற்றும் முகவரி, IFSC குறியீடு போன்ற தகவல்களும் இணைக்கப்பட வேண்டும். தவறான கணக்கு விவரங்கள் அல்லது முழுமையாக KYC இணங்காத கணக்குகளுக்கு RBI பொறுப்பேற்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலே குறிப்பிட்ட ஆவணங்களின் நகல் மற்றும் வங்கிக் கணக்கு நகல் அல்லது பாஸ்புக்கின் முதல் பக்கத்தை இத்துடன் இணைக்க வேண்டும். 2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கும் மாற்றுவதற்கும் வசதியாக 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் அகமதாபாத், புவனேஸ்வர், பெலாபு, பெங்களூர், போபால், சண்டிகர், சென்னை, கவுகாத்தி, ஹைதராபாத், ஜம்மு, ஜெய்ப்பூர், கொல்கத்தா, கான்பூர், லக்னோ, மும்பை, நாக்பூர், நியூ டெல்லி, பாட்னா, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் உள்ளன.
மேலும் படிக்க | EPF கணக்கில் வட்டி: தீபாவளி பரிசாக வருகிறதா பம்பர் தொகை? அதிரடி அப்டேட் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ