ஆதார் தொடர்பான புகார்களை எவ்வாறு தாக்கல் செய்வது?
ஆதார் சேவைகள் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்கு help@uidai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பி தகவலை பெறலாம்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யூஐடிஏஐ) ஆதார் சேவைகள் தொடர்பான புகார்களை பதிவு செய்ய இந்திய குடிமக்களை அனுமதிக்கிறது, ஆதார் சேவை குறித்த பிரச்சனைகளுக்கு எதிராக மக்கள் அழைப்பு மூலம், மின்னஞ்சல் மூலம் அல்லது ஆதாரின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் புகார்களை பதிவு செய்யக்கூடிய வழிமுறையை யூஐடிஏஐ உருவாக்கி கொடுத்திருக்கிறது.
1) ஆதார் அட்டைதாரர்கள் யூஐடிஏஐ-ஐ 1947 என்கிற இலவச எண்ணின் மூலம் தொடர்புகொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.
2) யூஐடிஏஐ-ன் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சேவைகள் தொடர்பான புகார்களுக்கு விரைவில் பதில் தரக்கூடிய ஒரு அம்சம் தான் யூஐடிஏஐ சாட்போட். இது யூஐடிஏஐ இணையதளத்தின் முதன்மைப் பக்கத்திலும் வலது கீழே உள்ள குடியுரிமை போர்ட்டலிலும் கிடைக்கிறது. இதில் 'ஆஸ்க் ஆதார்' எனும் நீல நிற ஐகானைக் கிளிக் செய்வதன் மூலம் சாட்போட்உடன் தொடர்பு கொள்ளலாம், மேலும் இது ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளை ஆதரிக்கிறது.
மேலும் படிக்க | பான் மற்றும் ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு அரசின் எச்சரிக்கை!
3) யூஐடிஏஐ இணையதளத்தில் 'புகாரைப் பதிவு செய்' பிரிவின் கீழ் புகார் அளிக்கலாம். இதற்காக மக்கள் தங்கள் 14 இலக்க பதிவு ஐடி மற்றும் தேதி மற்றும் நேரத்தை dd/mm/yy மற்றும் hh:mm:ss) வடிவத்தில் டைப் செய்ய வேண்டும். மேலும் அதில் தனிப்பட்ட விவரங்களான பெயர், மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை நிரப்ப வேண்டும். லொகேஷனில் பின்கோடை நிரப்ப வேண்டும் மற்றும் கீழே நீங்கள் வசிக்கும் கிராமம்/நகரம்/நகரத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன்பிறகு புகாரின் வகை போன்ற தகவல்களை தேர்ந்தெடுத்து நிரப்ப வேண்டும்.
4) ஆதார் சேவைகள் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்கு help@uidai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பி தகவலை பெறலாம்.
5) ஆதார் தொடர்பான புகார்கள் அல்லது புகார்களை சமர்ப்பிப்பதற்காக கார்டுதாரகள் அவர்கள் வசிக்கும் மாநிலத்திற்கு ஏற்ப அந்தந்த அலுவலகங்களுக்கு சென்று புகாரை தெரிவிக்கலாம்.
6) மேலும் மக்கள் தபால் மூலமாகவும் புகார்களை பதிவு செய்யலாம், ஆதார் குறித்த புகார்களை தெரிவிக்க யூஐடிஏஐ தலைமையகங்கள் அல்லது ஆர்ஓ-களில் அஞ்சல்/ஹார்ட்காப்பி மூலம் பதிவு செய்யலாம்.
மேலும் படிக்க | உங்கள் கார் கடன் EMI-களை குறைப்பதற்கான வழிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ