முதுகில் கூன் விழுவதற்கு வயதை காரணமாக கூறுவர், சிலர். ஆனால், வயதானவர்களுக்கு விழும் கூனிற்கும் இளம் வயதில் இருப்பவர்களுக்கு விழும் கூனிற்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது. இது இளம் வயதில் கூன் விழுவது அவரவரது வாழ்வியல் சூழல்களை பொறுத்து அமையும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதுகில் கூன் விழுவதற்கான காரணம் என்ன? 


முதுகில் கூன் ஏற்படுவதற்கு பல காரணங்கள்  உள்ளது. அதில் முக்கிய காரணமாக கருதப்படுவது, “கழுத்துப் பகுதியில் உள்ள எலும்புகள் பழுதுபடுவதே” என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நாம் தலையில் வைத்து அதிக பளு தூக்குவதாலும், தலையை கவிழ்ந்த நிலையில் நீண்ட நேரம் வேலை செய்வதும் வேறு சில காரணிகளாக அமைந்துள்ளன. இதனால், கழுத்து எலும்புகள் பாதிக்கப்பட்டு, முதுகில் கூன் விழுவதற்கு காரணமாக அமைந்துள்ளன. இதனால், முதுகு எலும்பு தேய்மானம் அடைந்து கூன் விழும் தோற்றத்தை நமக்கு ஏற்படுத்துகிறது. இதனால், நம் உடலில் வம்சி இடைத்தட்டான் எனப்படும் ஒருதசை அடிபட்டு அது இருக்க வேண்டிய இடத்தில் இருந்து விலகி விடுகிறது. 


இதனால் மேலும் கீழும் இந்த வம்சிக்கள் நேரடியாக ஒன்றுடன் ஒன்று உராய்கிறது. இது, நாளடைவில் எலும்பு தேய்மானம் ஏற்படும். இந்த நிகழ்வினால் முதுகு எலும்பு அமைப்பு இயல்பான நிலையில் இருந்து விலகி முன்னோக்கி சாயும். இதனால் நமக்கு கூன் போன்ற தோற்றம் ஏற்படும். இதை சரி செய்ய மருத்துவ முறைகள் பல உள்ளன. 


மேலும் படிக்க | “எவ்வளவு சம்பளம் எதிர்பார்க்கிறீர்கள்?” என்ற கேள்விக்கு சரியான பதில் என்ன?


‘டெக் நெக்’ பற்றி தெரியுமா..? 


தற்போதுள்ள இளைஞர்கள் பலரும் இந்த ‘டெக் நெக் அல்லது டெக்ஸ்ட் நெக்’ என்பவற்றால் பாதிக்கப்படுகின்றனர். இது, நாம் நெடு நேரம் மொபைல், லேப்டாப், டேப்லட் போன்ற மின்னணு சாதனங்களை குணிந்து உபயோகிப்பதால் ஏற்படும். இதனால் நமக்கு கழுத்து வலி ஏற்படும். அதுவும், ஓரிரண்டு நாட்களில் மறைந்து விடும் கழுத்து வலி அல்ல பல நாட்கள் நம்மை பாடாய் படுத்தி எடுக்கும் கழுத்து வலியாக அது மாறிவிடும். இதனாலும் கழுத்தில் சிலருக்கு கூன் விழலாம். 


இதை சரி செய்வது எப்படி? 


‘டெக் நெக்’கை சரி செய்வதற்கு பல எளிய வழிமுறைகள் உள்ளன. இதை நமது வாழ்வில் தினசரி கடைப்பிடித்து வந்தாலே சரி நம்மால் இந்த கழுத்து வலியையும் அதனால் ஏற்பட்ட கூனையும் சரி செய்து விட முடியும். 


>நேராக அமருவது: எந்த சாதனத்தை உபயோகப்படுத்தினாலும் அதை குணிந்து யூஸ் செய்வதை தவிர்க்கவும். உதாரணத்திற்கு மொபைலை பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதை குணிந்து உபயோகிக்காமல் கண்களுக்கு நேராக வைத்து உபயோகிக்கவும். அலுவலகத்தில் உங்களது நாற்காலி, நீங்கள் உபயோகிக்கும் லேப்டாப் டேபிளை விட உயரமாக இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். 


>பிரேக் எடுக்க வேண்டும்: ஸ்க்ரீன் டைமில் இருந்து அடிக்கடி இடைவேளை எடுப்பது, கூன் விழ விடாமல் தடுக்கும். இது கண்களுக்கும் நல்லது. அப்படி பிரேக் எடுக்கும் போது உங்களது கழுத்து தசைகள் மற்றும் தோள்பட்டை தசைகளை கை கொண்டு மசாஜ் செய்து ரிலாக்ஸ் செய்யுங்கள். 


>கழுத்திற்கான பயிற்சிகள்: கழுத்து வலியை சரி செய்ய, பல மசாஜ்கள் இருக்கின்றன. சில பயிற்சிகளும் இருக்கின்றன. அடிக்கடி கைகளை முன்னிருத்தி உங்கள் கழுத்துக்களை சைத்து இறுக்கத்தை சரி செய்வது ஒரு வித உடற்பயிறிசிதான். இது கழுத்து பகுதியில் தசை பிடிப்பு எதுவும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். 


மேலும் படிக்க | யாரிடம் வேண்டுமானாலும் பேசுங்கள்-‘இந்த’ 4 பேரிடமிருந்து மட்டும் விலகியிருங்கள்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ