குளிர்காலத்தில் சளி, காய்ச்சலுடன் கூடவே தலைவலி பிரச்சனையும் பலருக்கும் இருக்கும். ஆரோக்கியமாக இருந்த நமக்கு ஏன் திடீரென தலைவலி வருகிறது? என கவலைப்பட வேண்டாம். அதற்கான சில அடிப்படை காரணிகளை தெரிந்து கொண்டால், உங்களுக்கு இருக்கும் தலைவலிக்கு எளியமையான முறையில் தீர்வும் கிடைத்துவிடும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தலைவலிக்கான காரணம்:


குளிர்காலம் வந்தவுடன் தலைவலி வருவதற்கு முக்கிய காரணங்களுள் ஒன்று, பகலிரவு சமநிலையில் ஏற்படும் மாற்றம். இது உடலின் வெப்பநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி தலைவலியை உருவாக்குவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். சரி, இதற்கான தீர்வு என்ன? என்பதை பார்க்கலாம். 


ALSO READ | எச்சரிக்கையுடன் இருங்கள்; Omicron இன் ஒரு முக்கிய அறிகுறி இதுதான்


தப்பிக்கும் வழிமுறைகள்: 


* உடல் முழுவதும் மறைக்கக்கூடிய வகையில் இருக்கும் குளிர்கால உடைகளை அணிவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.


* கழுத்துப் பகுதிக்கு அதிகம் அழுத்தம் ஏற்படுத்தும் அசைவுகளில் (Position) அதிக நேரம் இருக்க வேண்டாம். ஒருவேளை உங்களுக்கு அசௌகரியமாக இருந்தால் மசாஜ் அல்லது கழுத்தை சுழற்றுங்கள்.


* தூக்கத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும். முறையற்ற தூக்கத்தை தவிர்க்க வேண்டும். 8 மணி நேரத்துக்கு குறையாமல் தூங்க வேண்டும். மேலும், இரவில் நீண்ட நேரம் கண்விழிக்காமல் முன்கூட்டியே தூங்கச்செல்ல வேண்டும்.


* சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள், ஒரு நாளைக்கு இருமுறையாவது நீராவி பிடிக்கலாம். அந்தப் பிரச்சனை புதிதாக தொடங்குகிறது என்றால், நீங்களும் நீராவி பிடிக்கலாம்.


உணவுமுறை


காய்கறிகள், கீரைகள், பழங்கள் ஆகிய ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். அதுவும், உடல்சூட்டை சரிவிகித அளவில் பராமரிக்கும் உணவுகளாக இருக்க வேண்டும். இல்லையென்றால் மலச்சிக்கல் உருவாக வாய்ப்புள்ளது. உடலின் தன்மைக்கு ஏற்ப சுடுநீரை பருகலாம். உடல் சூட்டை பராமரிக்க சூடான இஞ்சி டீயைக் குடிக்கலாம்.


ALSO READ | ALSO READ | ஒமிக்ரானுக்கு எதிராக மற்றொரு தடுப்பூசி..! ஆய்வில் தகவல்


முக்கிய குறிப்பு; தலைவலி மிகமிக அதிகமாக இருந்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR