காதல் உறவாக இருந்தாலும் சரி, திருமண உறவாக இருந்தாலும் சரி ஒரு உறவை ஆரோக்கியமானதாக கொண்டுபோவதும், அதனை டாக்சிக்காக மாற்றுவது அந்த இருவரின் கைகளில் தான் உள்ளது.  எவ்வளவு தான் நீங்கள் துணையின் மீது அக்கறையும், அன்பும் கொண்டிருந்தாலும் சரி அவர்களுக்கான இடத்தை அவர்களுக்கு கொடுக்க வேண்டும், எல்லா விஷயத்திலும் நீங்கள் தலையிடாமல் அவருக்கான சுதந்திரத்தை நீங்கள் முழுமையாக கொடுக்க வேண்டும்.  உறவில் எவ்வித ஒளிவு மறைவும் இருக்கக்கூடாது என நினைப்பது சரியானது தான் இருப்பினும் பிரைவசி என்பது ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டியது, அந்த ப்ரைவசியில் நீங்கள் ஊடுருவ நினைப்பது உங்கள் உறவில் கட்டாயம் விரிசலை ஏற்படுத்தும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.  உங்கள் துணையின் ப்ரைவஸிக்கு நீங்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டியது அவசியம் ஒரு உறவில் சில சமயங்களில் பொறாமை மற்றும் பாதுகாப்பின்மை ஏற்படுவது இயல்பானது, ஆனால் நாம் சில எல்லையை கடக்கும்போது ​​​​அனைத்தும் தவறாகிவிடும்.  துணையின் தனிப்பட்ட விருப்பத்தை உணர்ந்து, சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல் உங்கள் துணையின் மீதும் உங்கள் உறவின் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 40 வயதிற்கு மேல் அழகாகவும், இளமையாகவும் இருக்க செய்ய வேண்டியவை!


1) உறவில் இருப்பவர்கள் ஒருவர் நலனில் ஒருவர் அக்கறை கொள்வது இயல்பு, உங்கள் துணையின் செயல்களை நீங்கள் கட்டுப்படுத்தத் தொடங்கும் தருணத்தில் உங்கள் உறவு டாக்சிக்காக மாற தொடங்குகிறது.  ஒவ்வொருவரும் தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் தனக்கான இடத்தை விரும்புகிறார்கள், அப்படி இருக்கையில் அவர்களின் துணை அவரை கட்டுப்படுத்தத் தொடங்கும் போது அவர்களது ​உறவு முறிந்துகூட போக வாய்ப்புள்ளது.  எனவே, நீங்கள் ஒருவரை நேசிக்கிறீர்கள் என்றால் அவர் மீதும் உங்கள் உறவின் மீதும் நம்பிக்கை வையுங்கள்.


2) ஆரோக்கியமான உறவு என்றால் எப்போதும் தனது துணையின் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டு காதல் மொழி பேசி கொஞ்சுவது கிடையாது.  உங்கள் துணைக்கு நீங்கள் எந்தளவு சுதந்திரம் கொடுக்கிறீர்கள் எந்தளவிற்கு சம உரிமை கொடுக்கிறீர்கள் என்பதை வைத்து தான் ஆரோக்கியமான உறவா அல்லது டாக்சிக்கான உறவா என்பதை கணிக்க முடியும்.  உங்கள் துணைக்கு எப்போது தனிப்பட்ட இடம் தேவை என்பதை அறிவது முக்கியம், உங்கள் துணை தனியாக சிறிது நேரம் கேட்டால் எதைப்பற்றியும் யோசிக்காமல் அந்தந்த சூழ்நிலையில் அவர்களை புரிந்து கொண்டு அவர்களுக்கு தேவையானதை செய்யுங்கள்.


3) உங்கள் துணை மீது பொஸசிவ் ஆக இருப்பதை காட்டிலும் அவருக்கு நீங்கள் பாதுகாப்பாக இருப்பது  எப்போதும் சிறந்தது.  அதிகப்படியான பொஸசிவ் சந்தேகத்திற்கு வழிவகுக்கும், எப்படிப்பட்ட தீயவர்களுடனும் வாழ்ந்து விடலாம் ஆனால் சந்தேகப்படுபவர்களிடம் ஒரு நொடி கூட வாழ முடியாது, சந்தேகம் உறவை அழிக்கும் கொடிய தீ.  உங்கள் துணைக்கு நீங்கள் எப்போது ஒரு சுமையாக இருக்கக்கூடாது, துணையின்  போனைச் சரிபார்ப்பது, அவர்கள் யாருடனாவது பேசிக்கொண்டிருக்கும்போது இடையில் குறுக்கிடுவது மற்றும் அவர்களின் ஒவ்வொரு செயலையும் சந்தேகிப்பது போன்ற செயல்கள் உங்கள் உறவை நரகமாக்கிவிடும்.


4) உறவுகள் என்பது உங்கள் சுமையை உங்கள் துணையின் தோள்களுக்கு மாற்றுவது என்று பல நேரங்களில் மக்கள் கருதுகின்றனர், இது முற்றிலும் தவறானது.  உறவில் ஒருவர் இன்னொருவரை சார்ந்திருப்பதை விட ஒவ்வொருவரும் அவர்களது துணைக்கு ஆதரவாக மட்டுமே இருக்க வேண்டும்.  உங்கள் துணையை நீங்கள் சார்ந்து இருப்பது உங்கள் பிணைப்பை வலுவிழக்கச் செய்யும், எப்போதும் உங்கள் துணைக்கு ஒரு நல்ல ஆதரவாக மட்டுமே இருக்க முயற்சி செய்யுங்கள்.


5) உங்கள் துணையுடன் எப்போதும் நேர்மையான முறையில் மற்றும் மனதில் பட்டதை தெளிவாக பேசுங்கள், உங்கள் உண்மையான உணர்வுகளை உங்கள் துணையிடம் தயக்கமின்றி தைரியமாக தெரியப்படுத்துங்கள்.  உங்கள் மனதில் என்ன நினைக்கிறீர்கள் எதை நினைத்து குழப்பமடைகிறீர்கள் என்பதை உங்கள் துணைக்கு  தெரியப்படுத்துங்கள், மனம் விட்டு பேசும்போது உங்களின் மனக்கசப்புகள் அனைத்தும் நீங்கிவிடும்.


மேலும் படிக்க | தன்னம்பிக்கை மிக்கவராக மாற வேண்டுமா? 3 தாரக மந்திரம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ