தன்னம்பிக்கை மிக்கவராக மாற வேண்டுமா? 3 தாரக மந்திரம்

நீங்கள் தன்னம்பிக்கை மிக்கவராக மாற வேண்டும் என்றால் 3 தாரக மந்திரத்தை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 18, 2022, 06:28 AM IST
  • நீங்களும் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்
  • சோதனைகளை மாற்ற உங்களால் மட்டுமே முடியும்
  • 3 தாரக மந்திரங்களை தினம்தோறும் பின்பற்றுங்கள்
தன்னம்பிக்கை மிக்கவராக மாற வேண்டுமா? 3 தாரக மந்திரம் title=

ஆரோக்கியம்

நீங்கள் தன்னம்பிக்கை மிக்கவராக இருக்க வேண்டும் எனில், நீங்கள் ஆரோக்கியத்தில் அதீத கவனம் செலுத்த வேண்டும். எத்தகைய மனிதனையும் ஆரோக்கியம் இன்மை நிலைகுலையச் செய்துவிடும். அதனால், நீங்கள் ஆரோக்கியமாக இருக்க உணவு, உடற்பயிற்சி, மன ஆரோக்கியம் ஆகியவற்றில் கவனம் செலுத்துங்கள். அதிகாலை விழித்தல், நேரமாக உறங்கச் செல்லுதல், ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்ளுதல் இன்றியமையாதது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்

நேர்மறை சிந்தனை

ஆரோக்கியம் நன்றாக இருக்கும்பட்சத்தில் உங்களை நேர்மறை சிந்தனைவாதியாக மாற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஏற்படும் அத்துனை விஷயங்களிலும் இருக்கும் நேர்மறை விஷயங்களை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றில் கிடைக்கும் அசௌகரியமான விஷயங்களை அனுபவங்களாக கருதிக் கொள்ளுங்கள். நல்ல விஷயங்களை நினைத்து, நல்ல விஷயங்களை பேசும்போது உங்கள் எண்ணம் கூர்மையாகவும், தெளிவாகவும் இருப்பீர்கள்

மேலும் படிக்க | Astro: வாழ்க்கையை புரட்டிப் போடும் குரு சாண்டள யோகம்; சில எளிய பரிகாரங்கள் 

எதிர்மறையை தவிர்த்தல்

எக்காரணத்தைக் கொண்டும் எதிர்மறை சிந்தனையை தவிர்த்துவிடுங்கள். இது உங்களையும், உங்கள் சுற்றுப்புறத்தையும் எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்காது. எதிர்மறை சிந்தனை உடைய நபர்களுடன் இருப்பதும் உங்களுக்கு ஆபத்தானது. முதலில் நீங்கள் எதிர்மறை சிந்தனைவாதியாக இருக்கிறீர்களா? என்பதை சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள். கோபம், ஆக்ரோஷம், ஒருவரை பற்றி புறம்பேசுதல், எடுக்கும் முடிவில் தெளிவின்மை ஆகியவை இருந்தால் எதிர்மறை சிந்தனை உங்களிடத்தில் இருக்க வாய்ப்புள்ளது. இதில் இருந்து மீள்வதற்கான முயற்சியை மேற்கொள்ளுங்கள்

விரைவில் நீங்கள் மிகவும் தன்னம்பிக்கை மிக்கவராக மாறி, வாழ்கையில் வெற்றி பெறுவீர்கள்

மேலும் படிக்க | ஞானக்காரகரின் அருளால் அருமையான வாழ்க்கை அமையப்போகும் 3 ராசிக்காரர்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News