Maths Tips And Tricks: கல்வி முறையில் மிகவும் கடினமான பாடங்களில் ஒன்றாகக் கணிதம் கருதப்படுகிறது. பெரும்பாலான குழந்தைகள் கணிதப் பாடத்தை நினைத்தாலே பயப்படுகிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கணிதம் கற்ற வைப்பது மிகவும் கடினம். அதற்குக் காரணம், மற்ற பாடங்களை போல கதைகள் மற்றும் படங்களை மேற்கோள் காட்டி கணிதப் பாடம் இருப்பதில்லை. அதனால் பெரும்பாலான குழந்தைகள் கணிதம் கற்றுக் கொள்வதில் உற்சாகம் காட்டுவதில்லை. மாறாக கணிதப் பாடம் என்றாலே குழந்தைகள் அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் தான் கணிதம் ஒரு கடினமான பாடமாக தெரிகிறது. ஆனால் தொடர்ந்து சில முயற்சிகள் செய்யும் போது கணிதப் பாடம் மிகவும் எளிதானது என்பது புரிந்து விடும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கணிதம் என்பது ஒரு கலை வடிவம்


கணிதம் என்பது ஒரு கலை வடிவம். மற்ற பாடங்களை மனப்பாடம் செய்து மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். ஆனால் கணிதப் பாடத்தில் மட்டும் நீங்கள் பார்முலாவை தெரிந்துக்கொண்டால் போதும், 100 சதவீத மதிப்பெண் வாங்கி விடலாம்.


கணிதப் பாடத்தை எளிமையாக கற்றுக் கொடுக்கும் வழிகள்


எல்லாவற்றையும் முயற்சி செய்தும் தங்கள் குழந்தைகளை கணிதப் பாடத்தை நேசிக்க வைப்பதில் வெற்றிபெறாத பெற்றோர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், அவர்களின் கணிதத் திறனை மேம்படுத்துவதற்கும் பல வழிகள் உள்ளன. உங்களுக்கான சில வழிகாட்டுதல்கள் குறித்து இங்கே கூறுகிறோம்.


மேலும் படிக்க - பெற்றோர்களுக்கான டிப்ஸ்: குழந்தைகளை காலையில் சீக்கிரம் எழ வைப்பது எப்படி?


அன்றாட வாழ்க்கையில் கணிதம் எவ்வாறு பயன்படுகிறது


கணிதத்தை சுவாரஸ்யமாக்க விளையாட்டுகள், புதிர்கள் மற்றும் செயல்பாடுகளுடன் இணைக்க வேண்டும். அன்றாட வாழ்க்கையில் கணிதம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைக் குழந்தைகளுக்குக் காட்டுங்கள். 


விளையாட்டுகள் மூலம் கணிதத்தை கற்றுக் கொடுங்கள்


சுடோகு, செஸ் போன்ற பலகை விளையாட்டுகள் மூலம் குழந்தைகளுக்கு வேடிக்கையாக கணிதத்தை பயிற்சி முறையில் சொல்லிக் கொடுங்கள். உங்கள் குழந்தை கணித சவால்கள் தீர்க்க சில புதிர்களை உருவாக்கவும். அந்த புதிர்கள் மிக எளிமையாக இருக்க வேண்டும்.


எண்ணுவதை முதலில் கற்றுத் தாருங்கள்


கணிதம் கற்றல் எண்ணுதலுடன் தொடங்குவதால், எண்ணுவதை முதலில் கற்றுத் தாருங்கள். உன்னிடம் எத்தனை புத்தகம் இருக்கிறது? உன்னுடைய ஃபிரண்ட்ஸ் எத்தனை பேர்? என எண்ணி சொல்ல சொல்லுங்கள்.


அதேபோல பேக்கிங் செய்யும் போது பொருட்களை வைப்பது, ஷாப்பிங் செய்யும் போது கணக்கிடுவது, சுற்றுலா செல்லும் போது, வாங்கும் சின்ன சின்ன பொருட்களுக்கான செலவுகளை கூட்டி சொல்லவது போன்ற செயல்களில் அவர்களை ஈடுபடுத்துங்கள்.


மேலும் படிக்க - பெற்றோர்களே உஷார்..! குழந்தைகளுக்கு ‘இந்த’ 5 உணவுகளை கண்டிப்பாக தரக்கூடாது..!


குழந்தைகளுக்கு எளிதாகப் புரியும் படி கற்றுக் கொடுங்கள்


குழந்தைகள் விளையாடும் போது சில பொருட்களை ஒன்றாக சேர்த்து எண்ணச் சொல்லவும். காட்சி, படங்கள், கருவிகள் மூலம் எண்ணுவது எப்படி என்பதைக் கற்றுக் கொடுங்கள். குழந்தைகளுக்கு எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.


கணிதமேதைகள் பற்றி சுவாரஸ்யமான கதைகளை சொல்லுங்கள்


கதைசொல்லல் மூலம் கணிதத்தை கற்றுக்கொடுக்க, கணிதம் தொடர்பான கதைப்புத்தகங்களைப் படியுங்கள். சிறந்த கணிதமேதைகள் பற்றி சுவாரஸ்யமான கதைகளையும் நீங்கள் குழந்தைகளுக்கு சொல்லலாம். இது விஷயத்தைப் பற்றி மேலும் அறிய அவர்களை உற்சாகப்படுத்தலாம். சில நேரங்களில் சிறந்த ஆளுமைகளின் கதைகள் குழந்தைகளை அவர்களின் பாதையில் செல்ல ஊக்குவிக்கின்றன.


குழந்தைகளை கட்டாயப்படுத்தாதீர்கள் 


குறுகிய காலத்திற்கு தினசரி கணிதப் பயிற்சிக்கான ஒரு வழக்கத்தை அமைக்கவும். ஒருவேளை சிலநேரம் உங்கள் குழந்தை கணிதத்தை வெறுத்தால், மணிக்கணக்கில் அதைப் படிக்கும்படி கட்டாயப் படுத்தாதீர்கள். மாறாக, குறுகிய இடைவெளியில் கணிதத்தைக் கற்றுக்கொள்ள அவர்களை ஊக்குவிக்கவும். 


மேலும் படிக்க - உங்கள் குழந்தையின் கல்வி செலவுகளை எளிதாக சமாளிக்க ‘சில’ டிப்ஸ்!


சிறிய இடைவெளி தாருங்கள்


ஒவ்வொரு முறையும் கணிதப் பாடம் படித்த பிறகும் கதை வாசிப்பது, ஓவியம் வரைவது அல்லது விளையாடுவது போன்ற சிறிய இடைவெளிகளை எடுக்கச் சொல்லுங்கள். 


கற்றுக் கொண்டார்களா? என்பதை மறுபரிசீலனை செய்யவும்


நீங்கள் தினம் சொல்லித்தரும் கணிதத்தை அவர்கள் கற்றுக் கொண்டார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உதாரணமாக, தினமும் கணிதப் பாடத்திற்கு 2 மணிநேரம் ஒதுக்கினால், முந்தைய நாள் குழந்தை கற்றுக்கொண்டதை மறுபரிசீலனை செய்ய 30 நிமிடங்கள் ஒதுக்குங்கள். காலப்போக்கில் நம்பிக்கையையும் திறமையையும் வளரும்.


குழந்தைகளை பாராட்டுங்கள், நம்பிக்கை அளியுங்கள்


உங்கள் குழந்தை கணிதப் பாடத்தில் முன்னேற்றம் அடையும் போது அல்லது கணித பிரச்சனைகளை வெற்றிகரமாக தீர்க்கும் போது பாராட்டுங்கள் மற்றும் பாசிடிவான நம்பிக்கையை வழங்குங்கள். அவர்களின் சாதனைகள் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அதைக் கொண்டாடுங்கள். பொறுமையாகவும் ஆதரவாகவும் இருங்கள். 


மேலும் படிக்க - குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு தேவையான 'சூப்பர்' உணவுகள்!


குழந்தைகளிடம் விரக்தியைக் காட்டாத்தீர்கள்


உங்கள் குழந்தைகள் கணிதப் பாடத்துடன் போராடினால், அவர்களிடம் விரக்தியைக் காட்டுவதைத் தவிர்க்கவும். தவறுகள் செய்வது கற்றல் செயல்முறையின் ஒரு பகுதி தான், டென்ஷன் ஆக வேண்டும். இந்தமுறை நீ நன்றாக செய்வாய் என ஊக்குவிப்பதன் மூலம் குழந்தையும் உற்சாகம் அடையும்.


யூடியூப் மூலம் பயிற்சி செய்ய உதவுங்கள்


கணிதப் பாடம் காற்று தரும் குழந்தைகள் சோர்வடைந்தால், சில சமயம் அவர்களுக்கு Youtube வழியாக காட்சிகள் மூலம் சொல்லித் தரலாம்.


வாழ்க்கையில் வெற்றி பெற கணிதம் அவசியம்


கணிதம் என்பது வெறும் பாஸ் செய்ய மட்டும் இல்லை. அது உங்கள் வாழ்க்கையில் வெற்றி தேவைப்படும் என சொல்லுங்கள். மேலும் குழந்தைகளுடன் சேர்ந்து நீங்களும் புதிய விடியங்களை கற்றுக்கொள்ளலாம். அது சுவாரஸ்யமாகவும் ஈர்க்கக்கூடியதாகவும் இருக்கும்.


மேலும் படிக்க - அலட்சியம் வேண்டாம்.... குழந்தைகளின் மன வளர்ச்சியை பாதிக்கும் விட்டமின் B12 குறைபாடு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ