இன்றைய கால கட்டத்தில் குழந்தைகளுக்கு உயர்தரக் கல்வியை கொடுக்க, அதிக நிதி தேவைப்படும் நிலையில், அதற்கான திட்டமிடல் உங்களது நிதி சுமை சமாளிக்க பெரிதும் கை கொடுக்கும். நிதி இலக்குகள் பற்றிய சமீபத்திய விரிவான ஆய்வில், 30-40 வயதிற்குட்பட்ட 45% தந்தைகளும், 40-50 வயதுக்குட்பட்ட 62% தந்தைகளும் குழந்தைகளுக்கு தரமான கல்வி கொடுப்பதை அவர்களின் முதன்மையான "முன்னுரிமை இலக்கு" என்று குறிப்பிட்டுள்ளனர். ஓய்வூதியத் திட்டமிடல் என்பது 21% என்ற அளவில் உள்ள நிலையில், கல்விக்கான திட்டமிடலில், நடுத்தர வர்க்கத்தினர் அதிக கவனம் செலுத்துகின்றனர் என்பதையே இது காட்டுகிறது. இன்றைய காலகட்டத்தில், ஆயுட்காலம் அதிகரித்து, அதைத் தொடர்ந்து ஓய்வூதியக் காலங்கள் நீட்டிக்கப்பட்ட நிலையில், ஒருவரின் ஓய்வுக்கால சேமிப்பை அதிகரிப்பது பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையிலும்ஓய்வூதிய திட்டமிடலை விட கல்விக்கே முன்னுரிமை அளிக்கின்றனர்.
கல்விச் செலவுகள் அபரிமிதமான விகிதத்தில் உயர்ந்து வருவது உண்மைதான் என்றாலும், பீதி அடையத் தேவையில்லை. நாம் திட்டமிடுவதைத் தாமதப்படுத்தும்போது அல்லது நீண்ட கால இலக்குகளுடன் மிகவும் பழமைவாதமாக இருப்பது, குறுகிய கால இலக்குகளுடன் பாதகங்களை சிந்திக்காமல் முதலீடு செய்வது, தற்காலிக நன்மை கருதி முதலீடு போன்ற பொதுவான முதலீட்டுத் தவறுகளை மீண்டும் செய்யும் போது சிக்கல் எழுகிறது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
உங்கள் பிள்ளையின் கல்வியை வெற்றிகரமாகத் திட்டமிடுவதற்கான திறவுகோல், சேமிக்கும் நடவடிக்கையை சீக்கிரம் தொடங்குவதாகும். உதாரணமாக, உங்கள் பிள்ளைக்கு இப்போது 5 வயதாகிறது என எடுத்துக் கொண்டால் அடுத்த ஆண்டு முதல் வகுப்பைத் தொடங்க உள்ளது. இந்த கட்டத்தில் மூன்று வகையில் சேமிக்க தொடங்குவது (Investment Tips) ஒரு புத்திசாலித்தனமான அணுகுமுறை, அதாவது குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால முதலீடுகள் இதில் அடங்கும்.
குறுகிய கால சேமிப்பு திட்டம் என்பது உங்கள் குழந்தையின் பள்ளிக் கட்டணத்தின் முதல் மூன்று ஆண்டுகளுக்குச் செலுத்தத் தேவையான நிதியைக் கொண்டிருக்கும். மூன்று ஆண்டுகள் என்பது பணவீக்கத்தைத் தாக்கும் வருமானத்தைப் பெறுவதற்குப் பொருத்தமற்ற குறுகிய கால முதலீட்டு எல்லை என்பதால், உங்கள் வருமானம் மற்றும் செலவினங்களை நன்கு திட்டமிடுவதன் மூலம் உங்கள் மாதாந்திர பணப்புழக்கத்தில் இருந்து இந்த செலவை வழங்குவது நல்லது.
இதனுடன், 4 முதல் 7 ஆம் வகுப்பு வரை உங்கள் குழந்தையின் கல்விக்கு நிதியளிக்கும் வகையில் நீங்கள் திட்டமிடலாம். இந்த இலக்கிற்காக, 3 - 4 வருட காலக்கெடுவில் 9-10% வருமானத்தை வழங்கக்கூடிய பரஸ்பர நிதியில் SIP முதலீட்டை தொடங்கலாம். ஆண்டுச் செலவு, இந்த கட்டத்தில் ஆண்டிற்கு ரூ. 1.8 லட்சம் (மற்றும் பணவீக்க விகிதம் 10%), 4 ஆண்டுகளில் தோராயமாக ரூ. 8.75 லட்சமாக இருக்க வேண்டும். அதாவது நீங்கள் இங்கு மாதத்திற்கு ரூ.15,000 முதலீடு செய்ய வேண்டும்.
மேலும் படிக்க | RBI Repo Rate: ரெப்போ விகிதம் தொடர்பாக ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
கடைசியாக, உங்கள் குழந்தையின் 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான கல்விக்கு நிதியை உருவாக்க, சிறிய அல்லது மிட்-கேப் ஃபண்டுகளில் ( நீண்ட காலத்திற்கு 15% வரை வழங்கக்கூடிய திறன் கொண்டவை) நீங்கள் தீவிரமாக முதலீடு செய்யலாம். உங்கள் குழந்தைக்கு 13 வயதாகும் போது கல்விக்காக கணிசமான தொகை ரூ. 19 லட்சம் தேவைப்படும். SIP மாதம் ரூ. 10,000 இதற்கு போதுமானது. மேலே உள்ள எடுத்துக்காட்டில், நன்கு திட்டமிடப்பட்ட மாதாந்திர SIP ரூ. 25,000/மாதம் 4 ஆண்டுகளுக்கு, அதைத் தொடர்ந்து ரூ. 10,000/மாதம் அடுத்த 4 ஆம் வகுப்பு வரை உங்கள் குழந்தையின் முழுக் கல்விக்கும் நிதியளிக்க போதுமானதாக இருக்கும்.
முடிவில், இந்த சேமிப்பு திட்டங்களுக்கு நீங்கள் செலுத்தக்கூடிய தொகை உங்கள் சொந்த வருமானம், செலவுகள் மற்றும் அபிலாஷைகளைப் பொறுத்தது; ஆனால் "சேமிக்க தொடங்குதல்" என்ற எளிய செயல், பல ஆண்டுகளுக்கு உங்கள் நிதி நிலைமையை சமாளிக்க கூடிய ஒரு சிறந்த திட்டமிடல். ஒரு தகுதிவாய்ந்த ஆலோசகர் இந்த விஷயத்தில் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருப்பார். நிதி ஆலோசகரின் உதவியுடம் சிறப்பாக திட்டமிடுவது, எதிர்கால நிதி தேவைகளுக்கான உத்திரவாதத்தை கொடுக்கும்.
உங்கள் பிள்ளையின் கல்லூரிக் கல்விக்குத் திட்டமிட, இதேபோன்ற முறையான முதலீட்டு உத்தி பின்னர் பயன்படுத்தப்படலாம். மேலும், உங்கள் பிள்ளையின் கல்லூரிக் கல்விக்காக நீங்கள் எவ்வளவு விரைவில் திட்டமிடத் தொடங்குகிறீர்களோ, அவ்வளவு தீவிரமாக நீங்கள் முதலீடு செய்ய முடியும் - அதன் விளைவாக, நிதி நன்மைகள் மற்றும் ரூபாய் செலவு-சராசரி நன்மைகள் அதிகமாக இருக்கும்.
மேலும் படிக்க | உங்கள் EPFO கணக்கில் இருந்து பணத்தை எடுக்க இவை கட்டாயம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ