இந்த 4 விஷயங்களை செய்தால் ஒவ்வொரு நாள் அதிகாலையும் மகிழ்ச்சியாக விடியும்..!
Lifestyle Tips : நீங்கள் தினசரி காலை பொழுதை மிகவும் மகிழ்ச்சியாக விடிய வேண்டும் என நினைத்தால் இந்த நான்கே 4 விஷயங்களை மட்டும் தவறாமல் கடைபிடித்து வாருங்கள்.
Lifestyle Tips Tamil : காலை பொழுதை மகிழ்ச்சியாக தொடங்கினாலே அன்றைய பொழுது முழுவதும் வெற்றிகரமாக இருக்கும். தினசரி இதனை தவறாமல் கடைபிடித்தால் நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் வெற்றிகள் பல தேடி வரும். எதிர்பார்த்த எண்ணங்கள் எல்லாம் நிறைவேறும். ஆனால், அந்த பாதையில் உங்களை நீங்களே செலுத்துவதில் தான் இந்த வெற்றிகள் எல்லாம் இருக்கின்றன. அதனால், அந்த நான்கு விஷயங்கள் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.
சீக்கிரம் தூங்குதல்
அடுத்தநாள் காலை சிறப்பாக இருக்க வேண்டும் என நினைத்தால் முந்தைய நாள் இரவில் முன்கூட்டியே படுக்கைக்கு சென்றுவிட வேண்டும். டோனா மெக்ஜார்ஜ் என்ற பிரபல வாழ்க்கை முறை ஆசிரியர் இதுகுறித்து பேசும்போது, ஒவ்வொரு நாள் எப்படி இருக்க வேண்டும் என்பதை முந்தைய நாள் படுக்கைக்கு செல்லும் முன் திட்டமிடுங்கள் என்கிறார். இது உங்களின் உற்பத்தி திறனை கூடுதலாக்கும் என கூறும் அவர், காலைக்கடன், உணவு என்ன சாப்பிட வேண்டும், எங்கு சென்று யாரை பார்க்க வேண்டும் என்பதையெல்லாம் தெளிவாக திட்டமிட்டு முன்கூட்டியே உறங்குங்கள் என்கிறார். இப்படியான செயல் அதிகாலை சுமையை குறைக்கும் என்றும் கூறுகிறார்.
மேலும் படிக்க | பெற்றோர்கள் குழந்தைகள் முன் செய்யக்கூடாத விஷயங்கள்! மீறி செய்தால் ஆபத்து..
உடலுக்கு உடற்பயிற்சி
காலையில் எழுந்ததும் தவறாமல் உடற்பயிற்சி செய்வதை கட்டாயமாக்கிக் கொள்ளுங்கள். உணவியல் நிபுணர் மியா சின் பேசும்போது, காலை உடற்பயிற்சி ஒருவரின் அனைத்து ஆற்றலையும் தூண்டிவிடும் என்கிறார். செரிமானம் முதல் அறிவாற்றல் மேம்பாடு வரை அனைத்தும் சிறப்பாக செயல்பட்டு உடல் ஆரோக்கியமாக இருக்கும் என கூறியுள்ளார். மேலும், உடற்பயிற்சியுடன் நாளை தொடங்குவது என்பது ஒருவரின் நேர்மறை ஆற்றலை அதிகரித்து, கவனம் செலுத்துவதையும் அதிகரிக்கும் என்றும் மியா சென் தெரிவித்துள்ளார்.
சத்தான காலை உணவு
அதிக புரதம் நிறைந்த, சமச்சீரான காலை உணவில் தினமும் காலை பொழுதை தொடங்க வேண்டும். ஊட்டச்சத்து ஆலோசகரான ஷெர்ரி ஷென் பேசும்போது, புரதங்கள், கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளுடன் கூடிய சமச்சீரான காலை உணவு உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இரத்த சர்க்கரையை உறுதிப்படுத்தி, கவனத்தை அதிகரித்து, ஆற்றல் அளவையும் மேம்படுத்தும் என கூறியுள்ளார்.
மனதுக்கான பயிற்சி
தினமும் மனதுக்கான பயிற்சி அவசியம் என்கிறார் மனநிலை பயிற்சியாளர் கானர். மூளை சுறுசுறுப்பாக இயங்குவதற்கு தினமும் இத்தகைய பயிற்சிகளை செய்ய வேண்டும் என அறிவுறுத்தும் அவர், உடற்பயிற்சியுடன் தியானம், யோகா ஆகியவற்றுக்கும் நேரம் செலுத்த வேண்டும் என்கிறார். இயற்கை நிறைந்த பகுதிகளில் இந்த பயிற்சியை செய்யும்போது அதற்கான வீச்சு இன்னும் அதிகமாக இருக்கும் என்றும் கானர் தெரிவித்துள்ளார். இதனால் முடிவெடுக்கும் திறன் அதிகரிக்குமாம்.
இந்த நான்கு பயிற்சிகளையும் தினசரி செய்து வந்தால் சீரான கால இடைவெளியில் உங்களின் தன்னம்பிக்கை உயர்ந்திருப்பதுடன், உங்களைப் பற்றி சமூக மதிப்பீடுகளும் உயர்ந்திருக்கும்.
மேலும் படிக்க | தலையில் இரட்டை சுழி இருந்தா இரண்டு பொண்டாட்டியா? உண்மையான அர்த்தம் இதுதான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ