பலாப்பழ பிரியாணி சுவையானது மட்டுமல்ல, வைட்டமின்கள்-ஏ, வைட்டமின்-பி 6 மற்றும் வீட்டமின்-சி என பல சத்துக்களைக் கொண்டது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பலாப்பழ பிரியாணியை எப்படி சமைப்பது என்ற செய்முறை குறிப்பை இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுவையும் ஆரோக்கியமும்: முக்கனிகளில் ஒன்று பலாப்பழம் (Jackfruit). பலாப்பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் அது தேவாமிர்தம் தான்.  பலாப்பழத்தை அப்படியே பழமாகவும் சாப்பிடலாம்.  காயாக இருக்கும் பலாவை விதவிதமான பதார்த்தங்களாக சமைக்கலாம். பலா காயாக இருந்தாலும் சரி, பழுத்துவிட்டாலும் சரி, பல்வேறு உணவு பதார்த்தங்களை சமைக்கலாம்.


சரி, பலாப்பழ பிரியாணி (Jackfruit Biryani) சாப்பிட்டிருக்கிறீர்களா? நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பலாப்பழ பிரியாணியை எப்படி சமைப்பது என்ற செய்முறை குறிப்பை சொல்கிறோம்.  இந்த பிரியாணி சுவையானது மட்டுமல்ல, வைட்டமின்கள்-ஏ, வைட்டமின்-பி 6 மற்றும் வீட்டமின்-சி என பல சத்துக்களைக் கொண்டது. 


மண மணக்கும், மனம் மயக்கும் பலாப்பழத்தில் உள்ள சத்துக்கள் அனைத்தும் இந்த பிரியாணியில் இருக்கிறது, கூடுதல் சுவையுடன்.   நோயெதிர்ப்பு உயிரணுக்களை அதிகரிக்கும் வைட்டமின்-சி கொண்ட இந்த பலாப்பழ பிரியாணியை சாப்பிட்டால், நோயெதிர்ப்புத் திறனையும் அதிகரித்துக் கொள்ளலாம், காய்ச்சல் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம் என்றால், பழம் நழுவி பாலில் விழுந்தது போல நன்றாகத் தானே இருக்கும்?


சரி.. வாருங்கள்.!! பலாப்பழத்தை எப்படி பிரியாணி செய்வது என்று தெரிந்துக் கொள்வோம்..


தேவையான பொருட்கள்:


  • 2 கப் பாசுமதி அரிசி, 

  • பலாப்பழம்,   

  • நறுக்கிய வெங்காயம், 

  • இஞ்சி, 

  • பச்சை கொத்தமல்லி, 

  • பச்சை மிளகாய், 

  • சிவப்பு மிளகாய், 

  • கரம் மசாலாப் பொடி, 

  • சீரகம், 

  • அரை கப் தயிர்,, 

  • தேவைக்கேற்ப உப்பு, 

  • நெய் 2 டீஸ்பூன், 

  • முந்திரி திராட்சை, 

  • குங்குமப்பூ, 

  • அரை கப் பால், 

  • புதினா.


செய்முறை:
முதலில், பாசுமதி அரிசியை சிறிது நேரம் ஊற வைத்தப் பிறகு அத்துடன்பச்சை ஏலக்காய், பிரிஞ்சி இலை, இலவங்கப்பட்டை, கிராம்பு மற்றும் சீரகம் சேர்த்து வேகவைக்கவும். இப்போது வாணலியில் நெய் சேர்த்து சீரகம், வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து 1 நிமிடம் வரை வதக்கவும். நன்றாக வதங்கிய பிறகு, தயிர், சிவப்பு மிளகாய் மற்றும் கரம் மசாலா சேர்க்கவும். பலாப்பழத்தை தனியாக வறுத்து, அதில் உப்பு, பச்சை கொத்தமல்லி புதினா சேர்த்து 5 நிமிடம் மூடி வைக்கவும். 


அதன் பிறகு  பலாப்பழக் கலவையின் மேல் அரிசியை பரப்பிவிட்டு,  கொத்தமல்லி மற்றும் புதினாவை நறுக்கி தூவவும். நெய்யில் வெங்காயத்தை நன்றாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.    நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு, திராட்சை, பாலில் ஊறவைத்த குங்குமப்பூ ஆகியவற்றை சேர்த்து வாணலியை 1 முதல் 2 நிமிடங்கள் மூடி வைத்து லேசான தீயில் சமைக்கவும்.  இதோ இரண்டே நிமிடத்தில்  மணக்கும் பலாப்பழ பிரியாணி உங்களுக்காக தயார்....    


(மொழியாக்கம் -  மாலதி தமிழ்ச்செல்வன்)