ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் முகத்தில் முடி வளருவது சகஜமான ஒன்று. இது, அவர்களின் உடலில் உள்ள ஏதேனும் உடல் கோளாறுகளால் வளரலாம். பலர் இதை நீக்க வேக்ஸ் செய்வது, த்ரெட்டிங் செய்வது போன்ற விஷயங்களை செய்வர். இதை இயற்கையான முறையை வைத்தும் கையாளலாம்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெண்களுக்கு முகத்தில் முடி வளருவது ஏன்?


ஹார்மோன் கோளாறுகள், பிசிஓஎஸ் உள்ளிட்ட உடல் நல பிரச்சனைகளால் முகத்தில் முடி வளரும். வாய்க்கு மேல் மட்டுமல்ல, தாடை பகுதி, கழுத்து பகுதி உள்ளிட்ட இடங்களில்தான் பெரும்பாலான முடிகள் வளரும். அது மட்டுமன்றி, தலைமுறை பிரச்சனைகள் (Genetic Disorder)இருந்தாலும் முகத்தில் முடி வளரும். பெண்கள், அவர்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளாலும் முகத்தில் முடி வளரலாம். 


எளிமையாக முடியை நீக்க வழிமுறைகள்..


1.சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு:


தண்ணீருடன் இரண்டு தேக்கரண்டி சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறினை கலக்க வேண்டும். இந்த கலவையை கொதிக்கும் வரை சூடாக்கவும். பிறகு அதை ஆறவிட்டு முடி வளரும் பகுதிகளில் தடவி 20 முதல் 25 நிமிடங்கள் வரை அப்படியே ஊற வைக்கவும். பின்னர், தண்ணீரில் கழுவ வேண்டும்.


2.எலுமிச்சை மற்றும் தேன்:


ஒரு தேக்கரண்டி தேனில் இரண்டு ஸ்பூன் சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாற்றினை கலக்கவும். இதை மூன்று நிமிடங்களுக்கு கொதிக்க விடுங்கள். கொதிக்கும் போது அந்த தண்ணீர் மெல்லியதாக மாறும் வரை கொதிக்க விடுங்கள். பேஸ்ட் போல ஆன பிறகு அதை ஆறவிட்டு முடி வளரும்/வளர்ந்த இடங்களில் பூசுங்கள். இது, இயற்கையான வேக்ஸ் க்ரீம் போன்றது. இதை தடவிய பிறகு, வேக்ஸ் ஸ்ட்ரிப்பை வைத்து முடியை நீக்கலாம். வேக்ஸ் ஸ்ட்ரிப்பை பிரிக்கும் போது, எந்த வாட்டத்தில் அதை ஒட்டினீர்களோ அதற்கு நேர் எதிர் திசையில் பிரித்து எடுங்கள். 


மேலும் படிக்க | அசிங்கமாக தொங்கும் தொப்பையைக் குறைக்கணுமா? இரவில் இந்த உணவுகளை சாப்பிடுங்கள்


3.முட்டையின் வெள்ளைக்கரு-அரிசி மாவு:


ஒரு கிண்ணத்தில் ஒரு முட்டையின் வெள்ளைக்கரு, ஒரு டீஸ்பூனில் சர்க்கரை, அரை கரண்டி அரிசி மாவு ஆகியவற்றை போட்டு கலக்குங்கள். இதை நன்றாக கலக்கி பேஸ்டாக மாற்ற வேண்டும். அதன் பிறகு, உங்கள் முகங்களில் தேவையில்லாமல் முடி வளரும் இடத்தில் தடவுங்கள். இதை தேய்த்த பிறகு 20 முதல் 30 நிமிடங்கள் வரை காய வையுங்கள். இது ஒரு இயற்கையான ஃபேஸ் மாஸ்க் ஆகும். முகத்தில் தேய்த்த அந்த பேஸ்ட் காய்ந்தவுடன் அப்படியே பிரித்து எடுக்கலாம். பின்னர், இதை வெறும் தண்ணீரில் முகத்தை கழுவலாம்.


4.ஓட்ஸ் மற்றும் வாழைப்பழம்:


இரண்டு ஸ்பூன் ஓட்ஸை எடுத்து அதை ஒரு கிண்ணத்தில் போட்டு ஒரு வாழைப்பழத்துடன் சேர்த்து மிக்ஸ் செய்யவும். இதை, உங்கள் முகத்தில் தேவையில்லாமல் முடி வளரும் இடத்தில் தடவ வேண்டும். வட்ட வடிவில் இந்த பேஸ்டை தடவ வேண்டும். இப்படியே 15 நிமிடங்களுக்கு மசாஜ் செய்ய வேண்டும். அதன் பிறகு, இதனை தண்ணீர் வைத்து மென்மையாக கழுவ வேண்டும். 


5.பப்பாளி மற்றும் மஞ்சள்:


பப்பாளி மற்றும் முகத்தில் பூசும் மஞ்சள் தூளை முகத்தில் தடவ வேண்டும். இதை 15 முதல் 20 நிமிடங்களுக்கு முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முகத்தில் தேவையின்றி வளரும் முடிகளை, மேலும் வளராமல் தடுக்கலாம். 


மேலும் படிக்க | வடகிழக்கு மாநிலங்களுக்கு சுற்றுலா செல்லலாம்.. IRCTC அசத்தலான டூர் பேக்கேஜ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ