ஐஆர்சிடிசி புத்தாண்டு 2024 டூர் பேக்கேஜ்: IRCTC சுற்றுலாப் பயணிகளுக்காக பல்வேறு வகையான டூர் பேக்கேஜ்களை வழங்கி வருகிறது. இந்த சுற்றுலாப் பேக்கேஜ்கள் மூலம் சுற்றுலாப் பயணிகள் நாடு மற்றும் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்கள் மூலம் சுற்றுலாப் பயணிகள் சுற்றுலாத் தலங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் வசதியாகவும், மலிவாகவும் பயணிக்கச் செய்வதுதான் இந்த டூர் பேக்கேஜ்களின் சிறப்பு. ரயில்வேயின் இந்த டூர் பேக்கேஜ்களில், சுற்றுலா பயணிகளுக்கான தங்குமிடம் மற்றும் உணவுக்கான ஏற்பாடுகளும் உள்ளன. இதனுடன், சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டி வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இப்போது ஐஆர்சிடிசி புத்தாண்டுக்கான (New Year 2024) சுற்றுலாப் பயணிகளுக்காக வடகிழக்கு சுற்றுலாத் தொகுப்பைக் கொண்டு வந்துள்ளது.
சென்னையில் இருந்து தொடங்கி 7 நாட்களுக்கு டூர் பேக்கேஜ்:
ஐஆர்சிடிசியின் (IRCTC) இந்த வடகிழக்கு சுற்றுலா பேக்கேஜ் சென்னையில் இருந்து தொடங்கும். இந்த டூர் பேக்கேஜ் 6 இரவுகள் மற்றும் 7 பகல்களுக்கானது. இந்த டூர் பேக்கேஜின் பெயர் நார்த் ஈஸ்ட் எக்ஸ் சென்னை (SMA 15) ஆகும். ஐஆர்சிடிசியின் இந்த டூர் பேக்கேஜில், சுற்றுலா பயணிகள் விமானத்தில் பயணம் செய்வார்கள். சுற்றுலா பயணிகள் கம்ஃபர்ட் வகுப்பில் பயணிப்பார்கள்.
மேலும் படிக்க | வட்டியை வாரி வழங்கும் இந்த வங்கிகள்.. சீனியர் சிட்டிசன்களுக்கு கொண்டாட்டம்
இந்த டூர் பேக்கேஜ் எப்போது தொடங்கும்?
ஐஆர்சிடிசியின் (IRCTC) இந்த டூர் பேக்கேஜ் 10 பிப்ரவரி 2024 முதல் தொடங்கும். சிரபுஞ்சி, குவஹாத்தி, ரோடு, மாவ்லின்னாங் மற்றும் ஷில்லாங் இடங்கள் இந்த டூர் பேக்கேஜில் உள்ளடக்கப்படும். இந்த டூர் பேக்கேஜின் ஆரம்ப விலை ரூ.44,500 மற்றும் சுற்றுலா பயணிகள் இந்த டூர் பேக்கேஜை ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம். இது தவிர, சுற்றுலா பயணிகள் 9003140680 மற்றும் 8287931964 ஆகிய எண்களில் டூர் பேக்கேஜ்களை முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.
Spend a week in the northeastern states with the LTC Flight Package To The North East Ex #Chennai (SMA15) starting on 25.11.2023 & 10.02.2024.
Book now on https://t.co/Do4zCAQ1z0#DekhoApnaDesh #Travel #BOOKINGS pic.twitter.com/cITWHTCSpQ
— IRCTC (@IRCTCofficial) December 6, 2023
ஐஆர்சிடிசியின் இந்த டூர் பேக்கேஜின் கட்டண விவரம்:
ஐஆர்சிடிசியின் (IRCTC) இந்த டூர் பேக்கேஜின் கட்டணம் மாறுபடும். இந்த டூர் பேக்கேஜில் தனியாக பயணம் செய்தால், ஒரு நபருக்கு ரூ.53,600 கட்டணம் செலுத்த வேண்டும். அதேசமயம், டூர் பேக்கேஜில் இரண்டு பேருடன் பயணம் செய்தால், ஒரு நபருக்கு ரூ.47,500 கட்டணம் செலுத்த வேண்டும். மூன்று பேருடன் டூர் பேக்கேஜில் பயணம் செய்தால் ஒரு நபருக்கு ரூ.44500 செலுத்த வேண்டும். உங்களுடன் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் இந்த சுற்றுலாப் பேக்கேஜில் பயணம் செய்தால், படுக்கையுடன் சேர்த்து அவர்களின் கட்டணம் ரூ.42,500 ஆக இருக்க வேண்டும். 2 முதல் 4 வயது வரையிலான குழந்தைகளுக்கான கட்டணம் ரூ.38500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Package Details |
|
Package Name |
LTC flight package to the North East ex.Chennai |
Travelling Mode |
Flight |
Station |
Chennai Airport |
Class |
Comfort |
Tour Dates |
10.02.2024 |
மேலும் படிக்க | உங்கள் வாழ்க்கையில் பண மழை பெய்ய வேண்டுமா? ‘இதை’ செய்யுங்கள் போதும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ