Sleeping Tips Tamil : தூக்கம் வரவில்லை.. என்ன பண்றதுனே தெரியலை, மனசும் ஏதோ சிந்திச்சுக்கிட்டே இருக்குது என புலம்புபவர்கள் உங்கள் வீட்டிலேயே இருக்கலாம். அக்கம் பக்கத்தினர்கூட இப்படி சொல்ல கேட்டிருப்பீர்கள். ஏன்? உங்களுக்கே கூட இந்த பிரச்சனை இருக்கலாம். இதற்காக வருந்தும் பலரும் ஏன் நமக்கு மட்டும் ஆரோக்கியமான தூக்கம் வருவதில்லை, நம் கூட இருப்பவர்கள் எல்லாம் படுத்த உடனே தூங்கிவிடுகிறார்களே என்று கூட எண்ணுவார்கள். இதற்கான பதில் சிம்பிளாக சொல்வதென்றால், ரிலாக்ஸாக இருந்து, எதையுமே சிந்திக்காமல் இருந்தாலே போதும். தூக்கம் வந்துவிடும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காலையில் இருந்து இரவு வரை எதைஎதையோ சிந்தித்துக் கொண்டிருக்கும் நீங்கள், தூங்கச் செல்லும்போதாவது மூளைக்கு ஓய்வு கொடுக்கலாம் என நினைக்க வேண்டாமா?. மூளைக்கு ஓய்வு கொடுப்பது என்பது மிகமிக அத்தியாவசியம். அதுதான் தூக்கம். நல்ல ஆரோக்கியமான தூக்கம் மூலம் தான் நீங்கள் புத்துணர்ச்சி பெற முடியும். எந்தவொரு விஷயத்தையும் உற்சாகமாக செய்ய முடியும். அடுத்தடுத்த விஷயங்களில் நீங்கள் கவனத்தை செலுத்தி, தெளிவாக செயல்பட முடியும். ஆனால் அதனை செய்வதில்லை என்பதே இப்போது பலரும் செய்யக்கூடிய தவறு. இது திருத்திக் கொள்ளக்கூடிய ஒன்று தான். 


மேலும் படிக்க | வைட்டமின் இலவசம்... கொடுப்பவர் சூரியன் - லைனில் நிற்கும் முதியவர்கள், இளசுகளை காணவில்லை..!


மனதை அமைதிப்படுத்தினால் தூக்கம் சீக்கிரம் வந்துவிடும். மனதை எப்படி அமைதிபடுத்துவது என்றால்? தியானம் போன்ற பயிற்சிகளை செய்யலாம். தினமும் காலை மாலை என தியான பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். அதன்மூலம் உங்கள் மனது ஒருநிலைப்படும். எந்த விஷயங்களைப் பற்றியும் தீவிரமாக சிந்தித்துக் கொண்டே இருக்கமாட்டீர்கள், அதாவது மனதை அலைபாய விடமாட்டீர்கள். படுக்கைக்கு சென்றவுடன் மனதில் எந்த விஷயத்தையும் போட்டு சிந்திக்காமல் தூங்க வேண்டும் என்ற மனநிலையுடன் படுப்பீர்கள். இந்த சிந்தனையே உங்களை ஆழ்ந்த உறக்கத்துக்கு அழைத்துச் செல்லும்.


ஏதேனும் சிந்தனைகள் வந்தால்கூட இப்போது இதனைப் பற்றி சிந்திப்பதற்கான நேரமில்லை என உங்களை நீங்களே ஆசுவாசப்படுத்திக் கொண்டு தூங்கலாம் என நினைக்கும் பக்குவம் உங்களுக்குள் வந்துவிடும். தியானம் மட்டுமில்லாமல் தினசரி உடற்பயிற்சிகளை செய்யுங்கள். குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது வாக்கிங் செல்ல வேண்டும். அப்போதும் கண்டதை எல்லாம் நினைத்துக் கொண்டிருக்காமல் உங்கள் உடலின் செயல்பாடுகள் மீது முழு கவனத்தையும் செலுத்துங்கள். 


இவையெல்லாம் உங்கள் மனதில் இருக்கும் எதிர்மறை எண்ணங்களை நீக்கிவிட்டு, நல்ல சிந்தனைகளை விதைக்க உதவும் பயிற்சிகள். மனமும் ஒரு நிலம் போன்றது தான். அதில் நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதனையே அறுவடை செய்வீர்கள். அதாவது நீங்கள் நினைப்பது எதுவோ, அதுவே உங்களின் செயல் வடிவமாக இருக்கும். எனவே ஆரோக்கியமான தூக்கத்தை பெற்று, அதன் மூலம் நல்ல வாழ்க்கை முறையை பெற்றுக் கொள்ளுங்கள். நல்ல தூக்கம், மனதை மகிச்சியாக வைத்திருக்ககூடிய ஒரு திறவுகோல் என்பதை நினைவில் வைத்து, தூக்கத்தை ஆரோக்கியமாக தூங்க முயற்சி செய்யுங்கள்.


மேலும் படிக்க | விந்து தானம் என்றால் என்ன? யாரெல்லாம் செய்யலாம்? வழிமுறைகள் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r