வைட்டமின் இலவசம்... கொடுப்பவர் சூரியன் - லைனில் நிற்கும் முதியவர்கள், இளசுகளை காணவில்லை..!

Vitamin D, Sunlight Benefits : வைட்டமின் டி இலவசமாக கொடுத்தாலும் வாங்க இப்போதைய இளசுகள் தயாராக இல்லை என்று வேதனைப்படுகிறார் சூரியன். இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பதையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை என்றும்  வருந்துகிறார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 4, 2024, 08:53 AM IST
  • வைட்டமின் டி இலவசமாக கிடைக்கும்
  • தினம்தோறும் கொடுக்கும் சூரியனார்
  • வாங்கி பயன்பெற மக்களுக்கு வேண்டுகோள்
வைட்டமின் இலவசம்... கொடுப்பவர் சூரியன் - லைனில் நிற்கும் முதியவர்கள், இளசுகளை காணவில்லை..! title=

தினம்தோறும் காலை ஐந்தரை ஆறு மணிக்கெல்லாம் பளீர் வெளிச்சத்தோடு ஆஜராகிவிடும் சூரியன், மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வாழ்வதற்கு தான் வெளியிடும் ஒளியில் வைட்டமின் டி என்ற ஊட்டச்சத்தை வைத்தும் அனுப்புகிறார். இது எலும்புகளுக்கும், தசைகளுக்கும் அத்தியாவசியமான ஊட்டச்சத்து. குழந்தைகளுக்கு இந்த ஊட்டச்சத்து இல்லையென்றால் ஆஸ்டியோபோரோசிஸ், ரிக்கெட்ஸ் போன்ற நோய்கள் ஏற்படும். இதுதவிர வைட்டமின் டி குறைப்பாட்டால் இன்னும் பிற பிரச்சனைகளும் வயது வந்தோருக்கு ஏற்படும் என்பதை அறிந்து வைத்திருக்கும் வைத்தியர் சூரியன், தினமும் தவறாமல் ஆஜராகி வைட்டமின் டியை ஒளியில் வைத்து நம் எல்லோருக்கும் அனுப்பிவிடுகிறார். 

இதற்காக அவர் பிரத்யேக டைமிங் ஒன்றையும் கடைபிடிக்கிறார்கள். காலை 8 மணி முதலே இந்த வைட்டமின் டியை ஒளியில் பார்சல் செய்து அனுப்ப தொடங்கிவிடுகிறார். பிற்பகல் மூன்று மணி வரை இந்த வேலையை அவர் இடைவிடாமல் செய்கிறார். குறிப்பாக காலை 10 மணிக்கு பிறகு சூரியனாரிடம் இருந்து வெளியாகும் புறா ஊதா கதிர்கள் (UVB) தான் வைட்டமின் டி தயாரிக்க தேவையான ஆற்றலை உடலுக்கு கொடுக்கின்றன. இந்த சமயத்தில் உடலின் மீது சூரிய கதிர்கள் நேரடியாக விழுவதால் எளிதாக வைட்டமின் டியை உடல் உற்பத்தி செய்து கொள்கிறது. 

மேலும் படிக்க | போகாத துணிக்கரையையும் விரைவில் போக வைக்கலாம்! ‘இப்படி’ வாஷ் செய்து பாருங்க..

சூரியனாரின் ஒளியை எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்வது என்பது உங்களின் தோல் அமைப்பை பொறுத்தது. லேசான சருமம் மற்றும் தோல் பிரச்சனைகள் இருப்பவர்கள் குறைந்த நேரம் எடுத்துக் கொண்டே போதும். கருமையான மற்றும் தடிமனான தோல் அமைப்பை உள்ளவர்கள் நீண்ட நேரம் கூட சூரியனாரிடமிருந்து கிடைக்கும் இலவசமான வைட்டமின் டியை பெற்றுக் கொள்ளலாம். சன்ஸ்கிரீன் பயன்படுத்திக் கொண்டு வெயிலில் செல்பர்களுக்கு வைட்டமின் டி கிடைக்காது. அவர்களுக்கு தான் இந்த ஊட்டசத்தை கொடுக்க மாட்டேன் என உறுதிபூண்டிருக்கிறார் சூரியனார். 

சரி, சூரியனார் அனுப்பும் ஒளியில் இருந்து மட்டும் தான் வைட்டமின் டி கிடைக்குமா? என்றால் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் சிலவற்றிலும் வைட்டமின் டி நிறைந்திருக்கின்றன. மீன், முட்டை, பால் மற்றும் தயிர் போன்றவற்றில் வைட்டமின் டி நிறைந்திருக்கிறது. இது குறித்து சூரியனார் சொல்வது என்னவென்றால் இலவசமாக கொடுப்பதாலேயே நான் கொடுக்கும் வைட்டமின் டியின் ஆரோக்கிய நன்மைகள் பலருக்கும் புரிவதில்லை, முதியவர்கள் அதிகம் என்னிடம் இலவசமாக இதை பெற்றுக்கொள்கிறார்கள், இளசுகளைத் தான் காணவில்லை என வேதனைப்படுகிறார் அவர். இனியாவது இளம் வயதினரும் சூரியனாரின் வேண்டுகோளை ஏற்று இலவசமாக கிடைக்கும் வைட்டமின் டியை பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். 

மேலும் படிக்க | கெட்ட விஷயங்களாகவே தோணுதா? கவலைப்படாதீங்க இந்த 5 வழிகளை முயற்சி பண்ணுங்க..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

Trending News