உங்கள் போனில் வரும் கொரோனா காலர் டியூனை OFF செய்வது எப்படி?
`உலகமே கொரோனா வைரஸை எதிர்த்து போராடுகிறது` இந்த காலர் டோனை அணைப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..!
"உலகமே கொரோனா வைரஸை எதிர்த்து போராடுகிறது" இந்த காலர் டோனை அணைப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..!
உலகமே கொரோனா வைரஸை எதிர்த்து போராடி வருகிறது. கொரோனா வைரஸ் சுமார் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் தொடர்ந்து அழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகளவில் இதுவரை ஐந்து கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸை எதிற்கும் தடுப்பூசியை தயாரிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருக்கின்றனர்.
இதற்கிடையில், அவசரத்தில் நாம் யாருக்காவது தொலைபேசியில் தொடர்புக்கொள்ளும் போது சுமார் 2 நிமிடங்களுக்கு பேசும் காலர் டியூன் நம்மை பல மாதங்களாக வெறுப்பேத்தி வருகிறது. ஒருவரை அவசரத்திற்கு தொடர்பு கொண்டாலும் நம்மை பொறுமை இழக்க வைக்கிறது இந்த காலர் டியூன். இந்த காலர் டியூனை அணைக்க என்னதான் வழி என நாம் அனைவரும் இன்றுவரை தேடி வருகிறோம். இந்த 30 வினாடி விழிப்புணர்வு தகவலை முற்றிலுமாக தடுத்து நிறுத்த இப்போதைக்கு வழி இல்லை என்பதே உண்மை. ஆனால், தற்காலிகமாக இதை நீங்கள் ஸ்கிப் செய்யலாம். இதற்கான வளிமுறையை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்.
ஏர்டெல், வோடபோன்-ஐடியா, ஜியோ மற்றும் பிற நெட்வொர்க்கில் இருந்து அழைக்கும் போது, உங்கள் மொபைலில் வரும் கொரோனா வைரஸ் எச்சரிக்கை செய்தியை எவ்வாறு தவிர்ப்பது என்று பார்க்கலாம். இந்த செயல்முறையைப் பின்பற்றி உங்கள் அழைப்பிற்கு முன்னாள் வரும் 30 வினாடி கட்டாய விழிப்புணர்வு தகவலை உங்களால் ஸ்கிப் செய்துகொள்ள முடியும். செயல்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
காலர் டியூனை அணைக்க நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
உங்கள் அழைப்பிற்கான எண்களை அழுத்துங்கள்.
ஆடியோ காலர் டியூன் விழிப்புணர்வு தகவல் பிளே செய்யக் காத்திருங்கள்.
ஆடியோ காலர் டியூன் தகவல் பிளே ஆனவுடன் எண் 1-ஐ அழுத்துங்கள் அல்லது # அழுத்துங்கள்.
உடனடியாக 30 வினாடி ஆடியோ காலர் டியூன் நிறுத்தப்பட்டு அழைப்பிற்கு நேரடியாகச் சென்றுவிடும்.
சில எண்களிற்கு இந்த முறை செயல்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ALSO READ | உங்களுக்கு PF கணக்கு உள்ளதா?... இதை செய்தால் உங்களுக்கு ₹.50,000 கிடைக்கும்..!
இந்தச் செய்தியின் மூலம் விழிப்புணர்வு தகவலைக் கேட்டவர்கள், மீண்டும் கேட்க விரும்பாதவர்கள் அல்லது அவசர நேரத்தில் உடனடியாக அழைப்பை மேற்கொள்ள விரும்பும் பயனர்களுக்கு உதவுதற்கு மட்டுமே.
இதுவரை, சுமார் 1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த கொடிய வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவிட் -19 வழக்குகளை கண்காணிக்கும் அமெரிக்காவின் 'ஜான் ஹாப்கின்ஸ்' பல்கலைக்கழகத்தின் கூற்றுப்படி, கொரோனா வைரஸ் பாதிப்புகள் உலகளவில் 5.2 மில்லியனுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளன. இதனுடன், உலகளவில் 1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வைரஸ் காரணமாக இறந்துள்ளனர்.
'ஜான் ஹாப்கின்ஸ்' பல்கலைக்கழக தரவுகளின்படி, அமெரிக்காவில் 9 மில்லியனுக்கும் அதிகமான நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன, கோவிட் -19 ஆல் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன, இதுவரை 2,37,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். அமெரிக்காவில் கோவிட் -19 தொடர்ந்து அழிவைத் தொடர்கிறது, அங்கு சனிக்கிழமை 1,26,000 க்கும் அதிகமான வழக்குகள் பதிவாகியுள்ளன. மேலும், 1,000-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.