UIDAI: இந்திய குடிமகன்களாகிய ஒவ்வொருவரும் ஆதார் அட்டை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. வங்கி கணக்கு தொடங்குதல், பள்ளி சேர்க்கை பெறுதல் என பல பணிகளை முடிக்க ஆதார் அட்டை ஒரு முக்கிய அடையாள ஆவணமாக உள்ளது. வாக்காளர் அடையாள அட்டை கூட 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் தான் உள்ளது. ஆனால் ஆதார் அட்டை குழந்தைகளுக்கும் பெற வேண்டும். இவ்வளவு முக்கியம் வாய்ந்ததாக கருதப்படும் ஆதார் அட்டையில் ஏதேனும் சிறு தவறு நேர்ந்தால் கூட அது உங்களுக்கு பாதகமாகிவிடும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனவே உங்கள் பெயர், வயது, பிறந்த தேதி உட்பட அனைத்து விவரங்களும் சரியாக இருக்க வேண்டும். ஆதார் அட்டையில் விவரங்கள் சரியாக இருந்தால், இந்த அடையாள அட்டையை அடிப்படையாகக் கொண்டு வாக்காளர் அட்டை, பான் கார்டு போன்ற ஆவணங்களையும் பெறலாம். அதேசமயம் ஆதார் அட்டையில் ஏதேனும் பிழை இருப்பின் அதனை உடனடியாக திருத்தம் செய்துக்கொள்ளுங்கள். அதுக்குறித்து அச்சப்படவேண்டிய தேவையில்லை. ஆதார் அட்டையில் திருத்தத்தங்களை மேற்கொள்ள அரசு பல்வேறு வழிவகைகளை செய்திருக்கிறது.


மேலும் படிக்க: Aadhaar Mobile Link: ஆதார் அட்டையுடன் மொபைல் எண்ணை எப்படி இணைப்பது


இதுவரை நாம் ஆதார் அட்டைகளில் பெயர், பிறந்த தேதி, முகவரி, போன்ற எதையாவது திருத்தம் செய்ய வேண்டுமானால் வங்கிகளுக்கோ அல்லது தலைமை தபால் நிலையங்களுக்கோ தான் செல்ல வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது நீங்கள் அப்படி வெளியில் அலைய வேண்டிய தேவையில்லை. 


ஆதார் அட்டையில் திருத்தம் மேற்கொள்ள உங்கள் ஊரிலேயே இருக்கும் தபால் நிலையத்தின் கிளைகளுக்கு சென்றே மாற்றி கொள்ளமுடியும். தற்போது தபால் துறை கிராமின் தாக் சேவாக்களிடம் டிரான்ஸாக்ஷன் செய்வது உள்ளிட்ட பல சேவைகளுக்கான வசதிகள் வழங்கப்பட்டு உள்ளது. அதனால் நீங்கள் எதற்காகவும் வெளியில் அலையவேண்டியதில்லை, இதனால் உங்களது நேரமும் மிச்சப்படும்.


மேலும் படிக்க: மின் இணைப்புடன் ஆதார் எண்ணை ஆன்லைனில் இணைப்பது மிக சுலபம்: முழு செயல்முறை இதோ


தற்போது கிராமங்களில் செயல்பட்டு வரும் தபால் துறை கூட டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. இங்கு கிராம மக்கள் ஆர்டி டெபாசிட், சுகன்யா சம்ரித்தி யோஜனா செபாசிட் போன்ற பல சேமிப்பு திட்டங்களில் பணத்தை டெபாசிட் செய்துகொள்ளவும், ஜிடிஎஸ் மூலம் ஆதார் அட்டையை பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இங்கு ஆதார் அட்டையில் எத்தகைய திருத்தம் செய்யவேண்டுமோ அதனை செய்துகொள்ளலாம் வேண்டுமென்றால் இங்கு புதிய ஆதார் கார்டையும் பெற்றுக்கொள்ள முடியும்.


அதேபோல உங்கள் ஆதார் அட்டையில் ஏதேனும் மாற்றங்களைச் செய்ய விரும்பினால், நீங்கள் UIDAI தளத்தின் மூலமாகவும் மாற்றிக்கொள்ளலாம். UIDAI இன் உதவியுடன் பெயர், முகவரி, மொபைல் எண், புகைப்படம் மற்றும் மின்னஞ்சல் ஐடி தொடர்பான தகவல்களை நீங்கள் புதுப்பிக்கலாம். உங்கள் ஆதார் அட்டையில் தற்போது உள்ள படம் பிடிக்கவில்லை என்றால், நீங்கள் புதிதாக எடுக்கப்பட்ட சிறந்த புகைப்படத்தை ஆதார் அட்டையில் புதுப்பித்து கொள்ளலாம்.


மேலும் படிக்க: SBI ATM கார்ட் தொலைந்துவிட்டதா? உடனே பிளாக் செய்யவும், ஆன்லைன் செயல்முறை இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ