எஸ்பிஐ ஏடிஎம் கார்டு ஆன்லைன் பிளாக்: கோவிட்-19 தொற்று பல்வேறு வணிகங்களில் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தியது. வங்கி, கல்வி உட்பட அனைத்து துறைகளும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டன. தொற்றுநோய்க்கு முன்னரே இந்தியாவில், இணையம் மற்றும் மொபைல் பேங்கிங் ஏற்கனவே மிகவும் பிரபலமாகிவிட்டிருந்தன. எனினும் கொரோனா தொற்றுநோயைத் தொடர்ந்து, குறிப்பாக நகர்ப்புறங்களில் அவற்றை மக்கள் பயன்படுத்துவது கணிசமாக அதிகமானது.
உள்ளூர் வங்கிக் கிளைக்கு செல்லாமல், பயனர்கள் தங்கள் அன்றாட வங்கிச் செயல்பாடுகளை வீட்டில் இருந்தபடியே செய்ய இது பெரிதும் உதவியாக உள்ளது. இதில் பணப் பரிமாற்றம், பில்களை செலுத்துதல், நிலையான அல்லது நடப்புக் கணக்கைத் திறப்பது போன்ற பிற பணிகளும் அடங்கும்.
இருப்பினும், டிஜிட்டல் மற்றும் மொபைல் பேங்கிங்கில் எத்தனை வசதிகள் இருக்கின்றனவோ, அதே அளவு அபாயங்களும் உள்ளன. இதில் மோசடிகளுக்கான சாத்தியக்கூறுகளும் அதிகமாகின்றன. மக்களை ஏமாற்றி, அவர்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை திருட மோசடிக்காரர்கள் ஒவ்வொரு நாளும் பல புதிய உத்திகளை உருவாக்குகிறார்கள்.
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, தனது வாடிக்கையாளரின் பணத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் அம்சத்தை வழங்குகிறது. நீங்கள் எஸ்பிஐயின் வாடிக்கையாளராக இருந்து, உங்கள் ஏடிஎம் கார்டு தொலைந்துவிட்டாலோ அல்லது தவறாகப் பயன்படுத்தப்பட்டாலோ, தவறான பயன்பாட்டைத் தடுக்க கார்டை உடனடியாகத் தடுக்க வேண்டும் (பிளாக் செய்ய வேண்டும்). ஆன்லைன் வங்கி செயல்முறை (ஆன்லைன் பேங்கிங்) மூலம், பயனர்கள் விரைவாகவும் எளிதாகவும் கார்டை முடக்கலாம். இதை செய்வதற்கான முழுமையான செயல்முறையை இங்கே காணலாம்.
மேலும் படிக்க | மின் இணைப்புடன் ஆதார் எண்ணை ஆன்லைனில் இணைப்பது மிக சுலபம்: முழு செயல்முறை இதோ
எஸ்பிஐ ஏடிஎம் கார்டு பிளாக் ஆன்லைன்
ஸ்டெப் 1: எஸ்பிஐ வங்கியின் onlinesbi.com என்ற இணையதளத்துக்கு செல்லவும்.
ஸ்டெப் 2: அடுத்து, 'Lock & Unlock User' விருப்பத்தை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: ஆன்லைன் வங்கிக்கான உங்கள் பயனர் பெயர், உங்கள் கணக்கு எண் மற்றும் கேப்ட்சா குறியீடு போன்ற தகவல்களை உள்ளிடவும்.
ஸ்டெப் 4: கீழ்தோன்றும் மெனுவிலிருந்து 'பயனர் அணுகலைப் பூட்டு' ('Lock user access') விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.
ஸ்டெப் 5: விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படித்த பிறகு, உறுதிப்படுத்த சரி (OK) என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 6: உங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணில் OTP-ஐ (ஒரு முறை கடவுச்சொல்) பெறுவீர்கள்.
ஸ்டெப் 7: உங்கள் இணைய வங்கி அணுகலை லாக் செய்ய, சரியான OTP ஐ உள்ளிடவும்.
ஸ்டெப் 8: சமர்ப்பி (சப்மிட்) என்பதைக் கிளிக் செய்தவுடன், உங்கள் டெபிட் கார்டு வெற்றிகரமாகத் பிளாக் செய்யப்பட்டதாக அடுத்த பக்கத்தில் ஒரு செய்தியைக் காண்பீர்கள்.
மேலும் படிக்க | Aadhaar Mobile Link: ஆதார் அட்டையுடன் மொபைல் எண்ணை எப்படி இணைப்பது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ