ஒரு வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை இரண்டு மொபைல்களில் பயன்படுத்துவது எப்படி?
இரண்டு மொபைல் போன்களில் ஒரே வாட்ஸ்அப் கணக்கை பயன்படுத்தும் அம்சத்தை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது.
கோடிக்கணக்கான மக்கள் பிரபலமாக பயன்படுத்தி வரும் வாட்ஸ்அப் செயலி தனது வாடிக்கையாளர்களை கவரும் நோக்கில் பல புதிய புதிய அப்டேட்டுகளை வெளியிட்டு கொண்டே வருகிறது. அந்த வகையில் தற்போது லேட்டஸ்டாக இரண்டு மொபைல் போன்களில் ஒரே வாட்ஸ்அப் கணக்கை பயன்படுத்தும் அம்சத்தை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. இது இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தற்போதைய இணைக்கப்பட்ட சாதனங்களின் அம்சத்தின் விரிவாக்கமாகும். இருப்பினும், இந்த லேட்டஸ்ட் அப்டேட் தற்போது பீட்டா சோதனையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. இது இன்னும் மற்ற வாட்ஸ்அப்பின் பயனாளர்களுக்கு கிடைக்கவில்லை, எனினும் இன்னும் சில மாதங்களில் இந்த வசதி அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க | ஆதார் எண் இல்லாமலும் e-Aadhaar டவுன்லோட் செய்யலாம்: முழு செயல்முறை இதோ
இன்றுவரை அனைத்து வாட்ஸ்அப் பயனர்களும் அவர்களது ஸ்மார்ட்போனில் ஒரே ஒரு வாட்ஸ் அப் கணக்கை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர், அதேசமயம் ஒரே வாட்ஸ் அப் அக்கவுண்டை மடிக்கணினிகள் மற்றும் டேப்லெட்டுகள் போன்ற நான்கு சாதனங்களை இணைக்க அனுமதிக்கப்படுகிறார்கள். தற்போது வாட்ஸ் அப் பயன்படுத்தும் பயனர்கள் அவர்களது ஒரே வாட்ஸ் அப் அக்கவுண்ட்டை இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் பயன்படுத்தி கொள்ள முடியும். இரண்டு ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துபவர்களுக்கு இது கொஞ்சம் எளிமையானதாக இருக்கும். லாக் இன் ஆக்டிவிட்டையை சரிபார்க்கவும், ஒரு வாட்ஸ் அப் கணக்கு எத்தனை சாதனங்களில் செயல்படுகிறது என்பதை சரிப்பார்க்கும் அம்சத்தையும் வாட்ஸ் அப் வழங்குகிறது.
வாட்ஸ் அப்பின் இந்த புதிய அம்சமானது பயனர்களுக்கு பாதுகாப்பு உணர்வைத் தரும், அதுமட்டுமின்றி தங்கள் வாட்ஸ் அப் கணக்கு வேறொரு தெரியாத சாதனத்தில் பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் சரிபார்ப்பதற்கான அம்சத்தையும் வழங்குகிறது. இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற செயலியில் இருப்பதை போன்றே தற்போது வாட்ஸ் அப்பிலும் இந்த அம்சம் வருகிறது. மேலும் எந்த சாதனத்திலிருந்தும் ரிமோட் மூலம் வாட்ஸ் அப் கணக்கிலிருந்து வெளியேறலாம். இப்போது வாட்ஸ்அப்பின் பீட்டா வெர்ஷனை பயன்படுத்துபவர்களுக்கு, இரண்டு மொபைல்களில் ஒரு வாட்ஸ்அப் கணக்கை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி பார்ப்போம்.
1) உங்கள் முதன்மை மொபைல் ஃபோனில் வாட்ஸ் அப் செயலியே திறக்கவும் .
2) மேல் வலது மூலையில் தெரியும் மூன்று புள்ளிகள் கொண்ட ஐகானைத் தட்டவும் .
3) “Linked devices” என்கிற ஆப்ஷனை தட்டவும்.
4) அடுத்ததாக, “link a device” என்கிற ஆப்ஷனை க்ளிக் செய்த பின், இது திரையில் கியூஆர் கோட் காண்பிக்கும்.
5) இப்போது இரண்டாம் நிலை மொபைலில் திரையின் மேல் வலது மூலையில் அமைந்துள்ள மூன்று புள்ளிகள் கொண்ட மெனு ஐகானைத் தட்டவும் .
6) “Linked devices” என்கிற ஆப்ஷனை மீண்டும் தட்டவும் .
7) இப்போது முதன்மை தொலைபேசியில் கிடைக்கும் கியூஆர் கோடை ஸ்கேன் செய்ய வேண்டும்.
மேலும் படிக்க | ரூ.199க்கு இவ்வளவு ஆபர்களா? அசத்தும் ஏர்டெல்லின் புதிய பிளான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ