Junior Doctors Stipend Hike: சத்தீஸ்கர் மாநிலத்தில் தங்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என ஜூனியர் மருத்துவ மாணவர்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர். அந்த வகையில், அவர்களுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்க காங்கிரஸ் தலைமையிலான சத்தீஸ்கர் அரசு முடிவெடுத்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதன்மூலம், ஜூனியர் மருத்துவ மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை மாதம் 12,600 ரூபாய்க்கு பதிலாக இனி 15,900 ரூபாய் கிடைக்கும். அதே சமயம் முதலாம் ஆண்டு முதுகலை மாணவர்களுக்கு தற்போது 53,550 ரூபாயில் இருந்து 67,500 ரூபாய்க்கு உயர்த்தப்பட்டுள்ளது.


முதல்வர் ட்வீட்


இதேபோல், இரண்டாம் ஆண்டு முதுகலை மாணவர்களுக்கான உதவித்தொகை ரூ.56,700இல் இருந்து ரூ.71,450 ஆகவும், மூன்றாம் ஆண்டு முதுநிலை மாணவர்களுக்கு ரூ.59,220இல் இருந்து ரூ.74,600 ஆகவும் உயர்த்தப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. "ஜூனியர் மருத்துவர்களுக்கான உதவித்தொகையை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம் என்பதை பகிர்ந்துகொள்வது திருப்தி அளிக்கிறது" என்று சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல் நேற்று முன்தினம் (ஆக. 5) ட்வீட் செய்திருந்தார். 


மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ ஹைக் 3% அல்லது 4%? ஏன் இந்த குழப்பம்? எப்போது அறிவிப்பு?


3 ஆண்டுகால போராட்டம்


உதவித்தொகை உயர்வு என்பது கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலான கோரிக்கையாகும். இதற்காக பலமுறை வேலைநிறுத்தப் போராட்டங்களை ஜூனியர் டாக்டர்கள் நடத்தியுள்னர். "கடந்த ஐந்து ஆண்டுகளாக உதவித்தொகை உயர்த்தப்படவில்லை, ஜூனியர் டாக்டர்கள் சங்கம் (ஜூடா) கடந்த மூன்று ஆண்டுகளாக உயர்வைக் கோரி வருகிறது. இந்த உயர்வு வரவேற்கத்தக்கது, ஆனால் மாநில அரசு கிராமப்புறங்களில் உள்ளவர்களின் சம்பள உயர்வையும் கருத்தில் கொள்ள வேண்டும்," ஜூடாவின் முன்னாள் தலைவரும், மருத்துவருமான பிரேம் சவுத்ரி தெரிவித்திருந்தார்.


மறுத்தால் அபராதம்


சத்தீஸ்கரின் கட்டாய கிராமப்புற சேவை பத்திரக் கொள்கையின் கீழ், இளங்கலை மருத்துவப் படிப்புகளை முடித்த மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் பொது சுகாதார நிலையங்களில் பணிபுரிய வேண்டும். மேலும் முதுகலைக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் பணியாற்ற வேண்டும். இதை மறுப்பதற்கான அபராதம் இளங்கலை பட்டதாரிகளுக்கு ரூ. 25 லட்சமும், முதுகலை பட்டதாரிகளுக்கு ரூ. 50 லட்சமும் ஆகும் என்று கூறப்படுகிறது.


"இளங்கலை மற்றும் முதுகலை படிப்பிற்கு பிறகு பத்திர காலத்தை தலா ஒரு வருடமாக குறைக்க வேண்டும் என்று ஜூடா முன்பு கோரியிருந்தது, ஆனால் இது நிராகரிக்கப்பட்டது. முதுகலை படித்த பத்திர மருத்துவர்களுக்கு மாதத்திற்கு ரூ. 55 ஆயிரம் ஊதியம் வழங்கப்படுகிறது, இது அவர்களின் ஜூனியர்களை விட (மூன்றாம் ஆண்டு பிஜி மாணவர்கள்) மிகக் குறைவு. உயர்வுக்குப் பிறகு மாதம் ரூ.74,600 உதவித்தொகை கிடைக்கும்," என்று பிரேம் சவுத்ரி குறிப்பிட்டார்.


மேலும் படிக்க | ஜாக்பாட் செய்தி: இந்த ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம்.. DoPT அளித்த தகவல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ